Published:Updated:

நிவாரணம் கேட்ட விவசாயியை சாக சொன்ன ஆட்சியர்!

நிவாரணம் கேட்ட விவசாயியை சாக சொன்ன ஆட்சியர்!
நிவாரணம் கேட்ட விவசாயியை சாக சொன்ன ஆட்சியர்!

சட்டீஸ்கர்: சட்டீஸ்கரில் ஆட்சியரிடம், விவசாயி ஒருவர் தனக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என்றால் சாவதை தவிர வேறு வழியில்லை என்று சொல்லி இருக்கிறார். அதற்கு, ‘உனது விருப்பப்படி செத்து போ’ என்று ஆட்சியர் கூறியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

சட்டீஸ்கர் மாநிலம் குதெரா பகுதியை சேர்ந்தவர் ராமேஷ்வர் பன்ஜாரி. விவசாயியான இவர், தனது நிலத்திற்கு அருகே சாய ஆலை இருப்பதால் விவசாயம் செய்ய முடியவில்லை என்றும், அதற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரியும் ஆட்சியர் அகர்வாலிடம் மனு அளித்துள்ளார்.
மேலும், தனக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என்றால் இறப்பதை தவிர வேறு வழியில்லை எனவும் ஆட்சியரிடம் கூறியிருக்கிறார்.

அப்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக திடீரென ஆட்சியர் அகர்வால், "நீங்கள் விரும்பினால் போய் சாவுங்கள், அதற்கு எங்களிடம் அனுமதி பெற அவசியமில்லை" என கூறியிருக்கிறார். ஆட்சியரின் இந்த பதில், விவசாயி ராமேஷ்வர் பன்ஜாரி மற்றும் கூட்ட அரங்கில் இருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

##~~##

உடனே சுதாரித்து கொண்ட ஆட்சியர், தன்னால் ஆன அனைத்து உதவிகளையும் செய்வதாக விவசாயிடம் தெரிவித்தார். மேலும், இந்த பிரச்னை குறித்து கண்டறிய ஏற்கெனவே ஒரு குழுவை அந்த கிராமத்திற்கு அனுப்பி விசாரிக்க சொல்லி இருப்பதாக கூறியிருக்கிறார்.