Published:Updated:

பன்றிக் காய்ச்சல் அலெர்ட்: இரண்டு வாரங்களில் 2,000 பன்றிகள் இறப்பு...வாங்க, விற்கவும் தடை!

பன்றிக் காய்ச்சல்

குடியிருப்பை சிவப்பு மண்டலமாகப் பிரித்து, ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்துப் பன்றிகளும் பரிசோதனை செய்யப்பட்டு, ஆரோக்கியமான பன்றிகளுக்கு நோய் தடுப்பூசி போடப்படவுள்ளது.

பன்றிக் காய்ச்சல் அலெர்ட்: இரண்டு வாரங்களில் 2,000 பன்றிகள் இறப்பு...வாங்க, விற்கவும் தடை!

குடியிருப்பை சிவப்பு மண்டலமாகப் பிரித்து, ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்துப் பன்றிகளும் பரிசோதனை செய்யப்பட்டு, ஆரோக்கியமான பன்றிகளுக்கு நோய் தடுப்பூசி போடப்படவுள்ளது.

Published:Updated:
பன்றிக் காய்ச்சல்

மத்தியப்பிரதேசம் ரேவா நகரில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலால், இரண்டு வாரங்களிலேயே சுமார் 2,000 -க்கும் மேற்பட்ட பன்றிகள் இருந்துள்ளன.

பன்றி
பன்றி

இரண்டு வாரங்களாக பன்றிகள் இறந்ததைத் தொடர்ந்து, இறந்த பன்றிகளில் இருந்து மாதிரிகளைச் சேகரித்த கால்நடை பராமரிப்புத் துறை, அவற்றைப் பரிசோதனை செய்ய போபாலில் உள்ள விலங்கு நோய்களுக்கான உயர் பாதுகாப்பு தேசிய நிறுவனத்திற்கு அனுப்பியது. மாதிரிகளைப் பரிசோதனை செய்ததில், அவை ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எனவே, நோய்த்தொற்றின் பரவலைக் குறைக்க, குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் பன்றிகள் மற்றும் பன்றிகளின் இறைச்சியை வாங்குவதற்கும், விற்பதற்கும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, கலெக்டர் மனோஜ் புஷ்ப் தெரிவித்துள்ளார்.

 பன்றி
பன்றி

இது குறித்து கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநர், டாக்டர் ராஜேஷ் மிஸ்ரா தெரிவிக்கையில்,``நகரத்தில் உள்ள 25,000 க்கும் மேற்பட்ட பன்றிகளில், அதிகமாக பாதிக்கப்பட்ட விலங்குகள் வார்டு 15 -ல் கண்டறியப்பட்டுள்ளன. எனவே இந்தக் குடியிருப்பை சிவப்பு மண்டலமாகப் பிரித்து, ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து பன்றிகளுக்கும் பரிசோதனை செய்யப்படும். ஆரோக்கியமான பன்றிகளுக்கு நோய் தடுப்பூசி போடப்படும். இறந்துபோன பன்றிகளின் சடலங்களை, உள்ளூர் நகராட்சி அதிகாரிகளின் குழுக்கள் அப்புறப்படுத்தி வருகின்றன’’ என்றார்.