Published:Updated:

டீசல் லிட்டருக்கு ரூ.5; சமையல் எரிவாயு ரூ.250 உயர்த்த பரிந்துரை!

விகடன் விமர்சனக்குழு
டீசல் லிட்டருக்கு ரூ.5; சமையல் எரிவாயு ரூ.250 உயர்த்த பரிந்துரை!
டீசல் லிட்டருக்கு ரூ.5; சமையல் எரிவாயு ரூ.250 உயர்த்த பரிந்துரை!
டீசல் லிட்டருக்கு ரூ.5; சமையல் எரிவாயு ரூ.250 உயர்த்த பரிந்துரை!

புதுடெல்லி: டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5, சமையல் எரிவாயு விலையை சிலிண்டருக்கு ரூ.250 உயர்த்த மத்திய அரசுக்கு நிபுணர்குழு பரிந்துரைத்துள்ளது.

இதுகுறித்து மகிரித் எஸ் பாரிக் தலைமையிலான நிபுணர்குழு அரசுக்கு அளித்துள்ள பரிந்துரைகளில், ''டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5, மண்ணெண்ணெய் விலையை லிட்டருக்கு ரூ.4, சமையல் எரிவாயு விலையை சிலிண்டருக்கு ரூ.250 உயர்த்த வேண்டும்.

இந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம், எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களுக்கு, டீசல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.6 மட்டுமே நிலையான மானியமாக அரசு வழங்கும்.

##~~##
அதற்கு மேல் ஏற்படும் உற்பத்திச் செலவுகளை, நுகர்வோரிடம் இருந்து வசூலிக்க வேண்டும். மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கையை 9லிருந்து, 6 ஆக குறைக்க வேண்டும்'' எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் மூலம் நடப்பு நிதியாண்டில் வழங்கப்பட உள்ள மானியத் தொகையான ரூ.138,435 கோடியில் ரூ.30,250 கோடி அரசுக்கு மிச்சமாகும். தற்போது, டீசல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.10.52, மண்ணெண்ணெய்க்கு ரூ.38.32 மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.532.86 மத்திய அரசு மானியமாக வழங்கி வருகிறது.
கொள்கையளவில் மத்திய அரசு இந்தப்பரிந்துரைகளை ஏற்றுக்கொண்ட போதிலும், தற்போது டில்லி, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் உள்பட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், அவற்றை அமல்படுத்துவதில் தயக்கம் காட்டி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.