Published:Updated:

இந்திய முஸ்லீம்கள் இந்தியாவுக்காக வாழ்ந்து உயிர் துறப்பார்கள்: மோடி

விகடன் விமர்சனக்குழு

புதுடெல்லி: இந்திய முஸ்லீம்களின் தேசப்பற்று குறித்து யாரும் கேள்வி எழுப்ப முடியாது எனக் கூறியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அவர்கள் இந்தியாவுக்காகவே வாழ்ந்து, இந்தியாவுக்காகவே உயிர் துறப்பார்கள் என தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு கூறியுள்ள மோடி, இந்திய முஸ்லிம்கள் தங்களது தாளத்திற்கு ஏற்ப ஆடுவார்கள் என அல் காய்தா இயக்கம் தவறான எண்ணத்தை கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இம்மாத கடைசியில் தாம் மேற்கொள்ள இருக்கும் அமெரிக்க பயணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த மோடி, இரு நாடுகளும் தங்களுக்கு இடையேயான உறவுகளை பகிர்ந்துகொள்வது அவசியம் என்றும், இரு நாடுகளுக்கும் இடையே வரலாறு மற்றும் கலாச்சாரத்தில் ஒற்றுமை காணப்படுவதாகவும் கூறினார்.

அதே சமயம் கடந்த காலங்களில் இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவில் பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் காணப்பட்டதாகவும், ஆனாலும் 21 ஆம் நூற்றாண்டில் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு புதிய வடிவத்தை எடுத்ததாகவும், இந்தியாவும், அமெரிக்காவும் உண்மையான உறவை வளர்த்துக்கொள்ள முடியும் என்பதில் தமக்கு உறுதியான நம்பிக்கை உள்ளதாகவும் மோடி மேலும் கூறியுள்ளார்.