Published:Updated:

ஹூட் ஹூட் புயலுக்கு ஆந்திரா, ஒடிசாவில் 6 பேர் பலி!

விகடன் விமர்சனக்குழு
ஹூட் ஹூட் புயலுக்கு ஆந்திரா, ஒடிசாவில் 6 பேர் பலி!
ஹூட் ஹூட் புயலுக்கு ஆந்திரா, ஒடிசாவில் 6 பேர் பலி!

விசாகப்பட்டினம்: ஹூட் ஹூட் புயலுக்கு ஆந்திரா, ஒடிசாவில் 6 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.

ஹூட் ஹூட் புயலுக்கு ஆந்திரா, ஒடிசாவில் 6 பேர் பலி!

வங்கக் கடலில் உருவான ஹுட் ஹுட் புயல் ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினம், ஒடிசாவின் கோபால்பூர் இடையே நேற்று மதியம் கரையைக் கடந்தது. 200 கி.மீட்டர் வேகத்தில் கரையைக் கடந்த இந்தப் புயலால் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலும், ஸ்ரீகாகுளத்திலும் மரம் விழுந்து 2 பேரும், மதில் சுவர் இடிந்து விழுந்து ஒருவருமாக 3 பேர் உயிரிழந்தனர்.

ஒடிசா மாநிலத்தில், புரி மாவட்டத்தில் மீனவர் ஒருவரும், கேந்திரபாராவில் படகு கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி ஒரு சிறுவனும், சத்பயா பகுதியில் பவுன்சகாடி ஆற்றில் மற்றொரு படகு கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி ஒரு சிறுமியுமாக 3 பேர் உயிரிழந்தனர்.

ஹூட் ஹூட் புயலுக்கு ஆந்திரா, ஒடிசாவில் 6 பேர் பலி!

ஆந்திர கடலோர மாவட்டங்களான விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம், விஜயநகரம் ஆகிய மாவட்டங்களில் புயல் காரணமாக மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது. மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளன. அப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

ஒடிசாவில் புயல் காரணமாக முன்னெச்சரிக்கையாக சுமார் 1.56 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு 1,690 மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தின் தென் மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது.

இருளில் மூழ்கிய ஆந்திரா...

ஹூட் ஹூட் புயலுக்கு ஆந்திரா, ஒடிசாவில் 6 பேர் பலி!

ஹூட் ஹூட் புயலால் விசாகப்பட்டினம் மற்றும் ஆந்திர கிராமங்கள் இருளில் மூழ்கி உள்ளன. தொடர்ந்து 30 மணி நேரத்துக்கும் மேல் மின் தடை நீடிப்பதால் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. புயல் காரணமாக நூற்றுக்கணக்கான கிராமங்களில் தகவல் தொடர்பும் முடங்கியுள்ளது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தொடர்ந்து பாதுகாப்பு முகாம்களில் தவித்து வருகின்றனர்.

ரயில்கள் ரத்து...

ஹூட் ஹூட் புயல் காரணமாக 62 ரயில்கல் ரத்து செய்யப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம் வழியே செல்லும் 51 ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுகிறது என்று தென் மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.

இதனிடையே, சென்னை-ஹவுரா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இன்று காலை 8.45 மணிக்கு புறப்பட வேண்டிய இந்த ரயில் மாலை 6 மணிக்கு புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த ரயிலின் இணை ரயில் தாமதமாக வருவதால் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல், நேற்று புறப்பட இருந்ந்த சென்னை-ஹவுரா மெயில் ரயில் இன்று காலை 9 மணிக்கு புறப்படுகிறது.

சந்திரபாபு நாயுடு கோரிக்கை...

ஆந்திராவில் புயல் நிவாரணப் பணிக்கு முதல் கட்டமாக ரூ.2 ஆயிரம் கோடி தருமாறு மத்திய அரசுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், ஆந்திர புயல் சேதத்தை தேசிய பேரழிவாக அறிவிக்கவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.