Published:Updated:

ஆபாச பட விவகாரம்: பெண்ணின் தாய் மர்ம சாவு!

ஆபாச பட விவகாரம்:  பெண்ணின் தாய் மர்ம சாவு!
ஆபாச பட விவகாரம்: பெண்ணின் தாய் மர்ம சாவு!
ஆபாச பட விவகாரம்:  பெண்ணின் தாய் மர்ம சாவு!

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில், அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட  முக்கிய பிரமுகர்களை  இளம்பெண்களுடன்  நெருக்கமாக  இருக்க செய்து, அதை ரகசியமாகப்  படம் பிடித்து பணம் பறித்து வந்த கும்பலைச் சேர்ந்த பெண்ணின் தாயார் மர்மான முறையில் இறந்துள்ளார்.

ஆபாச வீடியோ எடுத்து பணம் பறித்து வந்த  கும்பலைச் சேர்ந்த இளம்பெண்கள்  பிந்தியா தாமஸ், ருச்சானா, மற்றும் இந்த செயலுக்கு மூளையாகச்  செயல்பட்ட இளைஞர்  ஆகிய 3 பேர் காவல்துறையினரால்  கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பிந்தியா தாமஸ் கொல்லம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரின்  தாயார் பெயர் மோளி.இவரின் வயது 62.  இவரது சொந்த ஊர் ஆலப்புழா ஆகும். சிறையில் இருக்கும் மகளைப்  பார்ப்பதற்காக மோளி அடிக்கடி கொல்லம் சென்று வருவது வழக்கம்.

இந்நிலையில், ஆலப்புழா  புன்னப்ரா என்ற இடத்தில் ரயில்வே தண்டவாளம் அருகே மோளி பிணமாகக்  கிடந்தார். அவரின்  உடல் ரத்த காயங்களுடன் முட்புதரில் கிடந்துள்ளது. அந்த வழியாக  சென்றவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து  காவல்துறையினருக்குத்   தகவல் தெரிவித்தனர். உடனே   அங்கு சென்ற காவல்துறையினர் மோளியின் உடலைக்  கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

அப்போது மோளியின் உடலில் இருந்த காயங்கள் ரயில் மோதியதால் ஏற்பட்ட காயமாக இருக்க வாய்ப்பில்லை என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. எனவே மோளியின் சாவில் உள்ள மர்மம் பற்றி காவலர்கள்  விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும், மோளியின் சாவில் உள்ள மர்மத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் ஆலப்புழா காவல்நிலையத்தில்  புகார் செய்து உள்ளனர்.