Published:Updated:

காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கிய 10 ராணுவ வீரர்கள்: மீட்பு பணி தீவிரம்!

காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கிய 10 ராணுவ வீரர்கள்: மீட்பு பணி தீவிரம்!
காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கிய 10 ராணுவ வீரர்கள்: மீட்பு பணி தீவிரம்!

ஜம்மு : காஷ்மீரில் உள்ள சியாச்சின் சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய 10 இந்திய ராணுவ வீரர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ஜம்மு-காஷ்மீரின் லடாக் பகுதியில் சியாச்சின் சிகரம் உள்ளது. 19 ஆயிரம் உடி உயரத்தில் அமைந்தள்ள இந்த சிகரத்தில் அடிக்கடி பனிச்சரிவு ஏற்பட்டு, அதனால் உயிரிழப்பும் ஏற்படுகிறது. பனிக்காலம் மற்றும் மைனஸ் 69 டிகிரி செல்சியசுக்கு கீழே வெப்ப நிலை வரும்போது பனிச்சரிவு ஏற்படுகிறது.

காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கிய 10 ராணுவ வீரர்கள்: மீட்பு பணி தீவிரம்!

இந்நிலையில், நேற்று (3-ம் தேதி) காலை இந்திய ராணுவ அதிகாரி உள்பட 10 வீரர்கள் சியாச்சின் சிகரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பனிச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. இதில் 10 ராணுவ வீரர்களும் சிக்கி புதைந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ராணுவ வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விமானப்படை வீரர்களும் ஹெலிகாப்டர் மூலமாக வீரர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், 10 வீரர்களின் நிலைமை என்னவென்று இதுவரை தெரியவில்லை.

கடந்த மாதம் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். கடந்த 1984-ம் ஆண்டு முதல் சியாச்சின் சிகர பனிச்சரிவில் சிக்கி இதுவரை 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.