Published:Updated:

கேப்டன் லஷ்மி சேஹ்கல் காலமானார்!

Vikatan Correspondent
கேப்டன் லஷ்மி சேஹ்கல் காலமானார்!
கேப்டன் லஷ்மி சேஹ்கல் காலமானார்!
கேப்டன் லஷ்மி சேஹ்கல் காலமானார்!

கான்பூர்: இந்திய சுதந்திர போராட்ட புரட்சியாளரும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் கேப்டனாக பணியாற்றியவருமான கேப்டன் லஷ்மி சேஹ்கல் (97) இன்று காலமானார்.

கடந்த வியாழக்கிழமையன்று மாரடைப்பு காரணமாக கான்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல் நிலை,கடந்த 2 தினங்களுக்கு முன்னர் மோசமடைந்தது.

இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று மரணமடைந்தார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் உதவியாளராக பணியாற்றிய லஷ்மி, கடந்த 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் இடதுசாரி கட்சிகளின் வேட்பாளராக போட்டியிட்டார். அத்தேர்தலில் அப்துல் கலாம் வெற்றிபெற்றார் எனது குறிப்பிடத்தக்கது.