Published:Updated:

`விடுதியில் மர்மமாக இறந்த மருத்துவ மாணவி' -அதிர்ச்சியில் சென்னை அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகம்

மரணம்
மரணம் ( மாதிரிப் படம் )

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மாணவி, மர்மமான முறையில் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் வீட்டைவிட்டு வெளியில் செல்லாமல் முடங்கியுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் சேவை மனப்பான்மையில் டாக்டர்கள், நர்ஸ்கள், தூய்மைப் பணியாளர்கள், மருத்துவ ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். கொரோனா வார்டுகளில் சிகிச்சை அளிக்கும் மருத்துவப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் வீடுகளுக்குகூட செல்வதில்லை. அரசு ஏற்பாடு செய்து கொடுத்துள்ள இடங்களில் தங்கியுள்ளனர்.

கொரோனா வார்டு
கொரோனா வார்டு
``கொரோனா அச்சம்; வீட்டுக்குள் அனுமதிக்காத ஓனர்?" - 5 மணி நேரம் தெருவில் கிடந்த தொழிலாளியின் சடலம்

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணியாற்றும் டாக்டர்கள், நரஸ்கள் தங்குவதற்கு நட்சத்திர ஹோட்டல்களில் அறைகள் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் கொரோனா வார்டுகளில் பணியாற்றிய அரசு மருத்துவர்கள், மருத்துவ மேல்படிப்பு மாணவர்கள், நர்ஸ்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர்களில் சிலருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியின் மாணவிகள் விடுதியில் தங்கியிருந்த மாணவி பிரதீபாவின் அறைக்கதவு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை.

இதுகுறித்து விடுதி நிர்வாகத்துக்கு தகவல் தெரிந்ததும் வார்டன்கள், மருத்துவக்கல்லூரி மாணவிகள் அறையின் கதவை வெகுநேரமாகத் தட்டினர். ஆனால், உள்ளே இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. இதையடுத்து கீழ்ப்பாக்கம் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் மற்றும் விடுதி ஊழியர்களின் உதவியோடு அந்த அறையின் கதவு உடைக்கப்பட்டு உள்ளே சென்றனர். அப்போது மாணவி பிரதீபா, அசைவற்ற நிலையில் படுத்திருந்தார். உடனடியாக அவரை அருகில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை
காதலிக்கு காட்டுக்குள் பிரசவம் பார்த்த காதலன்.. உயிருக்குப்போராடும் கல்லூரி மாணவி!

அங்கு, பிரதீபாவை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினர். இதையடுத்து சென்னை பெரம்பூரில் உள்ள அவரின் பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. திடீரென மகள் இறந்த தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்து பிரதீபாவின் சடலத்தைப் பார்த்து கதறி அழுதனர்.

இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்ததும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் வசந்தாமணி மற்றும் டி.எம்.இ நாராயணபாபு ஆகியோர் அங்கு வந்து மாணவி பிரதீபா மரணம் குறித்து விசாரித்தனர். மாணவியின் மர்ம மரணம் குறித்து கீழ்ப்பாக்கம் போலீஸாரும் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியின் லேடீஸ் ஹாஸ்டலில் அறை எண் 6-ல் மாணவி பிரதீபா தங்கியிருந்தார். இவர் கடந்த 16.4.2020-ம் தேதியிலிருந்து கொரோனா வைரஸ் காரணமாக வீட்டுக்குச் செல்லாமல் ஹாஸ்டலில் தங்கிவந்தார். இந்தச் சமயத்தில் இன்று காலை அவர் கண்விழிக்கவில்லை. அவரின் மரணத்துக்கு என்ன காரணம் என்று விசாரணை நடந்துவருகிறது" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு