Published:Updated:

ஆபரேஷன் தியேட்டருக்குள் அழுகிய நிலையில் பெண் சடலம் - திருச்சி அரசு மருத்துவமனை அவலம்

மண்ணச்சநல்லூர் அரசுப் பொது மருத்துவமனை

திருச்சியிலுள்ள அரசு மருத்துவமனை ஒன்றின் ஆபரேஷன் தியேட்டரில் அழுகிய நிலையில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆபரேஷன் தியேட்டருக்குள் அழுகிய நிலையில் பெண் சடலம் - திருச்சி அரசு மருத்துவமனை அவலம்

திருச்சியிலுள்ள அரசு மருத்துவமனை ஒன்றின் ஆபரேஷன் தியேட்டரில் அழுகிய நிலையில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
மண்ணச்சநல்லூர் அரசுப் பொது மருத்துவமனை

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அரசுப் பொது மருத்துவமனையின் அறுவை சிகிச்சை அரங்கிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசுவதாக, சிகிச்சையில் இருந்த நோயாளிகள் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். அதையடுத்து அறுவை சிகிச்சை அரங்குக்குள் சென்று பார்த்த மருத்துவர்கள் ஆடிப்போயிருக்கின்றனர். அங்கு சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் ஒன்று அழுகிய நிலையில் சிதைந்து கிடந்திருக்கிறது. அறுவை சிகிச்சை அரங்குக்குள் எப்படி இந்தச் சடலம் வந்தது எனப் பதறிப்போன மருத்துவமனை அதிகாரிகள் உடனடியாக மண்ணச்சநல்லூர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு வந்த மண்ணச்சநல்லூர் போலீஸார், அழுகிய நிலையில் கிடந்த சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்ததோடு, விசாரணையில் இறங்கியிருக்கின்றனர்.

ஆபரேஷன் தியேட்டருக்குள் கிடந்த சடலம்
ஆபரேஷன் தியேட்டருக்குள் கிடந்த சடலம்

சிசிடிவி காட்சிகள் மற்றும் காணாமல்போனவர்கள் பட்டியலை வைத்து, பெரும் போராட்டத்துக்குப் பிறகுதான், அடையாளம் தெரியாத அளவுக்குச் சிதைந்துபோய் சடலமாகக் கிடப்பது மண்ணச்சநல்லூர் மிஷின் தெருவைச் சேர்ந்த சிவபாக்கியம் என்பதை போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று சொல்லப்படும் சிவபாக்கியம் மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் கூட்டிப் பெருக்கும் வேலை செய்துவந்துள்ளார். கடந்த வாரம் மருத்துவமனையில் ஆபரேஷன் தியேட்டரைச் சுத்தம் செய்யப் போனவர், உடல்நிலை சரியில்லாமல் அங்கு மயங்கி விழுந்து இறந்துபோயிருக்கிறார்.

நடந்த விபரீதத்தை அறியாமல் மருத்துவமனையில் இருந்தவர்கள் அந்த ஆபரேஷன் தியேட்டரைப் பூட்டியிருக்கிறார்கள். ஒரு வாரம் கழித்து ஆபரேஷன் தியேட்டரிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக நோயாளிகள் புகாரளித்த பின்னரே, அதைத் திறந்து பார்க்க விஷயம் தெரியவந்திருக்கிறது. சம்பவம் நடந்து ஒரு வாரம் வரை மருத்துவர்கள் அந்த அறுவை சிகிச்சை அரங்கை எட்டிப் பார்க்காமல் இருந்தது ஏன்... சிவபாக்கியம் எதற்காக அந்த அறுவை சிகிச்சை அரங்கினுள் சென்றார்... சிவபாக்கியத்தின் மரணத்தில் ஏதேனும் மர்மம் இருக்கிறதா... என போலீஸார் தீவிரமாக விசாரித்துவருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகுதான் இறப்புக்கான காரணங்கள் என்னவென்று தெரியவரும் என்கிறார்கள் போலீஸார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism