Published:Updated:

`என்னைப் பிணமாகத்தான் கண்டுபிடிப்பீங்க’ - விஷமருந்தி உயிரிழந்த வனக்காப்பாளர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தற்கொலை செய்துகொண்ட வனக்காப்பாளர் பிரபாகரன்
தற்கொலை செய்துகொண்ட வனக்காப்பாளர் பிரபாகரன்

கடந்த வாரமே தற்கொலைக்கு முயன்ற பிரபாகரனை அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் தடுத்திருக்கின்றனர். இந்நிலையில், நேற்று வனப்பகுதியில் விஷமருந்தி பிரபாகரன் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மதுரை மாவட்டம், நாகமலை என்.ஜி.ஓ காலனியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (28). இவர், ஈரோடு மாவட்டம், அந்தியூர் வனச்சரகத்தில் வனக்காப்பாளராகக் கடந்த இரண்டரை ஆண்டுகளாகப் பணியாற்றிவந்தார். உடல்நலக் குறைவு காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக சரியாக வேலைக்குச் செல்லாமல் விடுப்பில் இருந்திருக்கிறார். இந்தநிலையில், நேற்று காலை வேலைக்குச் செல்வதாக தனது தாயிடம் கூறிவிட்டுச் சென்ற பிரபாகரன் வீடு திரும்பாமல் இருந்திருக்கிறார். இதற்கிடையே தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக பிரபாகரன் பேசி வெளியிட்ட வீடியோ ஒன்று அவருடைய நண்பர்கள் மற்றும் வனத்துறையினருக்கு கிடைத்திருக்கிறது.

இந்த டிபார்ட்மென்ட்ல நேர்மையா வேலை செய்ற யாரையுமே மதிக்கிறதில்லை. ஜால்ரா போடுற ஆளுங்களுக்குத்தான் இங்க வேலை.

அந்த வீடியோவில் வனக்காப்பாளர் பிரபாகரன், ``ஒரு ரேஞ்சரையோ, டி.எஃப்.ஓ-வையோ நம்மால போராடி ஜெயிக்க முடியலை. ஒரு ரேஞ்சர் நினைச்சா நம்மை ஈஸியா எங்க வேணும்னாலும் தூக்கிப் போட முடியுது. ஆனா, 14 வனக்காப்பாளர்கள் சேர்ந்தாக்கூட ஒரு ரேஞ்சரை மாத்த முடியாது. ஒரு வனக்காப்பாளரோட மனநிலையை யாரும் புரிஞ்சிக்கிறது இல்லை. நான் இருக்கற இடத்தைக் கண்டுபிடிக்க முடியாது. நான் சாவை நோக்கி நகர்ந்துட்டேன். நாளைக்கு நீங்க என்னை கண்டுபிடிக்கிறப்ப நான் பிணமாகத்தான் இருப்பேன். நான் ஏற்கெனவே தற்கொலைக்கு முயற்சி செஞ்சேன். என்னை ஒருத்தர் காப்பாத்திட்டாரு. ஆனா, இந்த தடவை என்னைக் காப்பாத்த முடியாது. இந்த டிபார்ட்மென்ட்ல நேர்மையா வேலை செய்யற யாரையுமே மதிக்கிறதில்லை. ஜால்ரா போடுற ஆளுங்களுக்குத்தான் இங்க வேலை. ஒரு வனக்காப்பாளர் ஒரு ரேஞ்சுல 10 வருஷமா இருக்காரு, 8-9 வருஷமா ஒரே ரேஞ்ல ஒரு ரேஞ்சர் இருக்காரு. ஆனா, புதுசா வந்த ஒரு வனக்காப்பாளரை அங்கேயும் இங்கேயும் தூக்கி அடிச்சு பெண்டை நிமித்துறாங்க. இது ஏன்? எல்லாத்துக்கும் காசுதானே... எம்.பி.ஏ ஹாஸ்பிட்டல் மேனேஜ்மென்ட் படிச்ச என்னைய ஒண்ணுமே பண்ண விடலை. எல்லாத்தையும் ரேஞ்ச் ஆபீஸரைக் கேட்டுக் கேட்டு செய்யச் சொன்னாங்க. நான் லிக்கருக்கு அடிக்ட். அதிகாரிங்க காசுக்கு அடிக்ட்” எனப் பேசுவதோடு முடிகிறது.

`பணிச்சுமை, மன உளைச்சல்´; கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட ஊராட்சி செயலாளர்!

இடைப்பட்ட நேரத்தில் அந்தியூர் வனச்சரகத்துக்குட்பட்ட கொம்பு தூக்கி மாரியம்மன் கோயில் வனப்பகுதியில் இளைஞர் ஒருவர் இறந்துகிடப்பதாக அப்பகுதி மக்கள் அந்தியூர் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் பர்கூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று இறந்துகிடந்த சடலத்தைப் பார்த்தபோது, அது வனக்காப்பாளர் பிரபாகரன் எனத் தெரியவந்தது. சடலத்தைக் கைப்பற்றி அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்த பர்கூர் போலீஸார், பிரபாகரன் தற்கொலை குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

உயிரிழந்த வனக்காப்பாளர் பிரபாகரன்
உயிரிழந்த வனக்காப்பாளர் பிரபாகரன்

பிரபாகரன் தற்கொலை செய்துகொண்டது ஏன் என விஷயமறிந்த போலீஸாரிடம் பேசினோம்.``அம்மா, அக்காவுடன் தங்கியிருந்த வனக்காப்பாளர் பிரபாகரன் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்திருக்கிறார். பிரபாகரனுக்கு குடிப்பழக்கம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. சமீபகாலமாக ஒருவித மன குழப்பத்தில் இருந்தவர், கடந்த வாரமே தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். விசாரித்தவரை பணியிடத்தில் பெரும் பிரச்னைகள் இருந்ததாக எதுவும் இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்தியூர் ரேஞ்சில் பணிபுரிந்தவரை, அருகிலுள்ள சென்னம்பட்டிக்கு மாற்றியிருக்கிறார்கள். அது வழக்கமான சுழற்சி முறையிலான நடைமுறையில்தான் நடந்திருக்கிறது. பிரபாகரனின் அம்மா மற்றும் அக்காவிடம் விசாரித்த வகையிலும் தற்கொலைக்கான காரணம் சம்பந்தமான எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. தொடர்ச்சியாக விசாரணை நடத்திவருகிறோம்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு