Published:Updated:

சேலம்: `அரசு மருத்துவமனையில் முதியவர் தற்கொலை!’ - முறையான கவனிப்பு இல்லாதது காரணமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சேலம் அரசு மருத்துவமனை
சேலம் அரசு மருத்துவமனை ( எம். விஜயகுமார் )

`அரசு முதற்கட்டமக தமிழத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆய்வுகள் மேற்கொண்டு உடனே கூடுதலாக மருத்துவப் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.’

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் கிடைக்காததாலும், வயிற்றுப்போக்கு, மூச்சுத்திணறல் ஏற்பட்டதாலும், மருத்துவமனையில் சரியான கவனிப்பு இல்லாததாலும் விரத்தி அடைந்த தி.மு.க நிர்வாகி ஒருவர் மருத்துவமனைக்குள்ளேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக வெளியாகியுள்ள தகவல், சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை
தற்கொலை

சேலம் மாநகராட்சியின் 27-வது வார்டு முன்னாள் செயலாளரும், மாநகர தி.மு.க நெசவாளர் அணியின் துணை அமைப்பாளருமாக இருந்தவர் சுப்பிரமணி. வயது 65. இவர் தன் மனைவி, மகன், பேரக் குழந்தைகளோடு சேலம் அரிசிபாளையம் முத்தியாள் பகுதியில் வசித்துவருகிறார். இவர்தான் 15-ம் தேதி நள்ளிரவு இப்படி ஒரு விபரீத முடிவை எடுத்து பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.

இது பற்றி சுப்பிரமணியின் பேத்தி லாவண்யாவிடம் கேட்டதற்கு, ``எங்க தாத்தா பெயர் சுப்பிரமணி. பாட்டி பெயர் ஜெயலட்சுமி. அவர்களுக்கு சுமதி என்ற ஒரு மகளும், அன்பழகன் என்ற ஒரு மகனும் இருக்கிறார்கள். இருவருக்கும் திருமணம் ஆகி மனைவி குழந்தைகளோடு இருக்கிறார்கள். கடந்த வாரம் தாத்தாவுக்கு லேசான காய்ச்சல், மூச்சுத்திணறல் இருந்தது.

அதையடுத்து கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். கொரோனா பாசிட்டிவ் இல்லையென்றும், ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருப்பதாகவும் தெரிவித்தார்கள். அதையடுத்து பவானி மருத்துவமனை உட்பட பல தனியார் மருத்துவமனைகளுக்குக் கொண்டு சென்றோம். அங்கு ஆக்ஸிஜன் இல்லாததால், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். அட்மிஷன் போடாமல் ஒரு நாள் முழுவதும் ஓ.பி-யிலேயே உக்காரவைத்து ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டரில் பலருக்கும் ஆக்ஸிஜன் கொடுத்தார்கள்.

இதில் தாத்தாவுக்கு மிகுந்த சோர்வு ஏற்பட்டது. ஒருவழியாக அடுத்த நாள் நார்மல் வார்டு கொடுத்தார்கள். அதன் பிறகு கெஞ்சிக் கூத்தாடி ஆக்ஸிஜன் படுக்கை வாங்கினோம். ஆக்ஸிஜன் செலுத்திய பிறகு நன்றாக இருந்தார். ஆனால் மருத்துவமனையில் கவனிப்பு இல்லை. மருந்து, மாத்திரைகள் கேட்கப் போனாலே முகம் சுளிக்கிறார்கள். திடீரென நேற்று முன்தினம் வயிற்றுப்போக்கும், இருமும்போது மூச்சுத்திணறலும் அவருக்கு ஏற்பட்டது.

மருத்துவப் பணியாளர்களிடம் சொல்லியும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. அதனால் அவருக்கு ரொம்ப சோர்வும், மன உளைச்சலும் இருந்தது. தாத்தாவோடு இரவு பாட்டி மட்டுமே இருந்தாங்க. நேற்று இரவு 1:30 மணிக்கு பாத்ரூம் போனவர் வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை. பிறகு பாட்டி சென்று பார்த்தபோது வேட்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருந்தார். அந்த உடலைக்கூட யாரும் தொடவில்லை. நாங்க வீட்டிலிருந்து சென்று உடலை எடுத்தோம். மருத்துவமனையில் சரியான கவனிப்பு இல்லாததே எங்கள் தாத்தாவின் மரணத்துக்குக் காரணம்'' என்றார் கண்ணீரோடு.

ஆம்புலன்ஸிலேயே சிகிச்சை...
ஆம்புலன்ஸிலேயே சிகிச்சை...

இது பற்றி சேலம் அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவமனை வட்டாரத்தில் விசாரித்தபோது, ``'இது பேரிடர் காலம். யாரையும் குறை சொல்ல முடியாது. இரவு பகல் பாராமல் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். குறைந்தது 70 நோயாளிகளுக்கு ஒரு செவிலியர் இருக்கிறார். அரசு முதற்கட்டமக தமிழத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆய்வுகள் மேற்கொண்டு உடனே கூடுதலாக மருத்துவப் பணியாளர்களை நியமிக்க வேண்டும்'' என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு