Published:Updated:

`46 ஆண்டுகளாக உன் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறேன்' - சுஷ்மா குறித்து காதல் கணவர் உருக்கம்!

கணவர் கௌஷல் உடன் சுஷ்மா ஸ்வராஜ் ( twitter )

கடந்த 46 ஆண்டுகளாக நான் உன் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறேன். எனக்கு ஒன்றும் இப்போது 19 வயது கிடையாது.

`46 ஆண்டுகளாக உன் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறேன்' - சுஷ்மா குறித்து காதல் கணவர் உருக்கம்!

கடந்த 46 ஆண்டுகளாக நான் உன் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறேன். எனக்கு ஒன்றும் இப்போது 19 வயது கிடையாது.

Published:Updated:
கணவர் கௌஷல் உடன் சுஷ்மா ஸ்வராஜ் ( twitter )

மத்திய அமைச்சராக இருந்த சுஷ்மா ஸ்வராஜ் மறைவு அக்கட்சியினரைத் தாண்டியும் பல பேரிடம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதற்கு காரணம் அவர் செய்த நற்செயல்கள். பா.ஜ.கவின் மிகப்பெரிய பெண் ஆளுமையாக இருந்த சுஷ்மா தொடர்ச்சியாக மக்களவை உறுப்பினராக தேர்வாகி வந்தார். கடந்த அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தபோது அவரது செயல்பாடுகள் கட்சி... நாடுகள்... கடந்து வெகுவாகப் பாராட்டப்பட்டது. வெளிநாடுகளில் பிரச்னைகளில் சிக்கித்தவித்த இந்தியர்கள் மீண்டும் தாயகம் திரும்புவதற்கான நடவடிக்கையில் துரிதமாகச் செயல்பட்டார்.

கணவர் கௌஷல் உடன் சுஷ்மா ஸ்வராஜ்
கணவர் கௌஷல் உடன் சுஷ்மா ஸ்வராஜ்
twitter

சுஷ்மா ஸ்வராஜை அணுகுவது மிகவும் எளிதாக இருந்தது. ட்விட்டரில் தங்கள் பிரச்னைகள் குறித்து பதிவிட்டவர்களுக்கு தேடிச் சென்று அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்துகொடுத்தார். அது இந்தியர்களாக இருந்தாலும் அல்லது வெளிநாட்டவர்களாக இருந்தாலும் சரி. அவர்களுக்கான உதவி தேடிச் செல்லும். ஆனால் எண்ணங்கள் இருந்தாலும் உடல்நிலை அவருக்கு ஒத்துழைக்கவில்லை. அதன்காரணமாக சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து ஒதுங்கினார். இதுபலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் அமைச்சரவையில் இடம்கிடைக்கும் எனப் பேசப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால் அதையும் மறுத்து உருக்கமாக ட்விட்டரில் பதிவிட்டார். இந்தப் பதிவு வெளியான பிறகு, ``நீங்கள் செய்த உதவிகள் ஏராளம். நிச்சயம் அதை யாரும் மறக்க மாட்டார்கள். நீங்கள் செய்த நல்ல காரியங்கள் உங்களை எப்போதும் பாராட்டும்'' என வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனைவரும் அவரை பாராட்டினர். சுஷ்மாவின் முடிவு அனைவருக்கும் ஏமாற்றம் அளித்தாலும் ஒருவர் மட்டும் அந்த முடிவை வரவேற்றார். அது அவரின் காதல் கணவர் ஸ்வராஜ் கௌஷல். தேர்தலில் போட்டியிடவில்லை எனக் கூறியதுமே அது தொடர்பாக கௌஷல் எழுதிய கடிதம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

கணவர் கௌஷல் உடன் சுஷ்மா ஸ்வராஜ்
கணவர் கௌஷல் உடன் சுஷ்மா ஸ்வராஜ்
twitter

அதில், ``இனிமேல் தேர்தலில் போட்டியில்லை என்ற உனது முடிவுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். மில்கா சிங் கூட ஓடுவதை நிறுத்திய ஒரு காலம் வந்ததை நினைவுபடுத்தி பார்க்கிறேன். இந்த மாரத்தான் 1977ல் தொடங்கியது என நினைக்கிறேன். அதற்குள் 41 ஆண்டுகள் ஆகிவிட்டது. கட்சி அனுமதிக்காத 1991, 2004ம் ஆண்டுகள் தவிர மற்ற அனைத்து முறையும் தேர்தலில் நீ போட்டியிட்டுவிட்டாய். உன்னுடைய 25 வயதில் இருந்து தேர்தல் ரேஸில் பங்கேற்று இருக்கிறாய். 41 ஆண்டுகளாக தேர்தல்களை எதிர்த்துப் போராடுவது ஒரு மாரத்தான் என்றே சொல்லலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால் மேடம்.... கடந்த 46 ஆண்டுகளாக நான் உன் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறேன். எனக்கு ஒன்றும் இப்போது 19 வயது கிடையாது. நானும் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார். சுஷ்மாவின் மறைவை அடுத்து இந்தப் பதிவு தற்போது அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. ஹரியானா மாநிலத்தில் பிறந்தவர், சுஷ்மா ஸ்வராஜ்.

மனைவிக்கு இறுதி மரியாதை செலுத்தும் கௌஷல்
மனைவிக்கு இறுதி மரியாதை செலுத்தும் கௌஷல்
ANI

டெல்லி சட்டக் கல்லூரியில் படித்தபோது அவரின் சக மாணவர் ஸ்வராஜ் கௌஷல். அப்போது, அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் இந்தியாவில் எமர்ஜென்சி என்கிற அவசர நிலை கொண்டுவரப்பட்டது. அந்தக் காலகட்டத்தில்தான் இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் அரசியல்ரீதியாக எதிரெதிர் கொள்கைகளைக் கொண்டவர்களாக இருந்தாலும் காதலால் இருவரும் வீட்டை எதிர்த்து திருமணம் செய்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism