Published:Updated:

குளிர்பானத்தில் விஷம்; வலுக்கட்டாயமாக மாணவி வாயில் ஊற்றிய இளைஞர்கள்?! - திருச்சி கொடூரம்

உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் போலீஸார்

``என்னை டார்ச்சர் பண்ணின பையனோட சேர்த்து மூணு பேர் என்னை வலுக்கட்டாயமாகத் தூக்கிட்டுப் போய் விஷம் கலந்த கூல்டிரிங்ஸைக் கொடுத்துட்டாங்க..."

குளிர்பானத்தில் விஷம்; வலுக்கட்டாயமாக மாணவி வாயில் ஊற்றிய இளைஞர்கள்?! - திருச்சி கொடூரம்

``என்னை டார்ச்சர் பண்ணின பையனோட சேர்த்து மூணு பேர் என்னை வலுக்கட்டாயமாகத் தூக்கிட்டுப் போய் விஷம் கலந்த கூல்டிரிங்ஸைக் கொடுத்துட்டாங்க..."

Published:Updated:
உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் போலீஸார்

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகேயுள்ள நொச்சிவயல் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆனந்த் - சாந்தி தம்பதியர். இவர்களின் மகள் வித்யா லட்சுமி (19). திருவெறும்பூர் மணியம்மை நகரில் உள்ள தாத்தா வீட்டில் தங்கி கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்துவந்துள்ளார். இந்நிலையில் மே 17-ம் தேதி வித்யா லட்சுமிக்கு திடீரென வயிற்றுவலி, உடல் சோர்வு ஏற்பட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு நடைபெற்ற பரிசோதனையில் வித்யா லட்சுமியின் உடலில் விஷம் கலந்திருப்பது தெரியவந்திருக்கிறது.

சாலைமறியலில் உறவினர்கள்
சாலைமறியலில் உறவினர்கள்

அதையடுத்து அவரிடம் விசாரிக்கையில், ``ஒரு பையன் என்னை லவ் பண்றதா சொல்லிட்டு பின்னாடி வந்து டார்ச்சர் செஞ்க்ஷுட்டு இருந்தான். கோவத்துல அவனை செருப்பால அடிச்சிட்டேன். மே 12-ம் தேதி காலேஜுக்குப் போயிட்டு வீட்டுக்கு வந்துட்டு இருந்தேன். அப்போ என்னை டார்ச்சர் பணணின பையனோட சேர்த்து மூணு பேர் என்னை வலுக்கட்டாயமாக தூக்கிட்டுப் போய் விஷம் கலந்த கூல்டிரிங்ஸைக் கொடுத்துட்டாங்க’ என்றிருக்கிறார்.

இந்நிலையில் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்துவந்த வித்யா லட்சுமி நேற்று முன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதையடுத்து ‘வித்யா லட்சுமியின் இறப்புக்குக் காரணமான அந்த மூன்று இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை வித்யா லட்சுமியின் உடலை வாங்க மாட்டோம். எங்கள் அனுமதியின்றி போலீஸார் எப்படி பிரேத பரிசோதனை செய்யலாம்... அவசர அவசரமாக உடலை அடக்கம் செய்யச் சொல்லி போலீஸார் அழுத்தம் கொடுத்தது ஏன்...’ என அவரின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் திருச்சி - தஞ்சை நெடுஞ்சாலையில் திருவெறும்பூர் மலைக்கோயில் அருகே சாலைமறியலில் ஈடுபட்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வித்யா லட்சுமி
வித்யா லட்சுமி

இதனால் திருச்சி - தஞ்சை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் உண்டானது. கூட்டத்தைக் கலைந்துபோகச் சொல்லி போலீஸார் அறிவுறுத்தியும் கலைந்து போகாததால், தடியடி நடத்தி போலீஸார் கூட்டத்தைக் கலைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக இளைஞர் ஒருவரை போலீஸார் கைதுசெய்து விசாரித்துவருகின்றனர்.

இது குறித்து விஷயமறிந்த போலீஸாரிடம் பேசினோம். “மாணவியின் கால் ஹிஸ்டரி மற்றும் கூல்டிரிங்ஸில் விஷம் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட சம்பவத்தின்போது செல்போன் டவர் லொக்கேஷன் எங்கிருந்தது போன்றவற்றை எடுத்துவருகிறோம். உண்மையிலேயே மாணவிக்கு என்ன நடந்தது என்பது விசாரணையின் முடிவில்தான் தெரியவரும்” என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism