Published:Updated:

திருச்சி: செடி நட்டுக் கொண்டிருந்தார்; சடலமாகக் கிடந்தார்! -சர்ச்சையில் காகித ஆலை நிர்வாகம்

உறவினர்கள் முற்றுகை
உறவினர்கள் முற்றுகை

காகித ஆலை வளாகத்திற்குச் சொந்தமான குளத்தில் கலைச்செல்வன் விழுந்திருக்கலாம் என்ற கோணத்தில் தகவலறிந்த மணப்பாறை தீயணைப்புத்துறை மற்றும் போலீஸார் அங்கு வந்து விசாரித்தனர்.

"செடி நட்டு வைத்துக்கொண்டிருந்தவர், எப்படிக் காகித ஆலை குளத்தில் மூழ்கிச் சாக முடியும். தீயணைப்பு வீரர்களை நிர்வாகம் உள்ளே அனுமதிக்காமலிருந்ததற்கு என்ன காரணம்?" எனக் கூறி ஒப்பந்த தொழிலாளியின் உறவினர்கள் காகித ஆலையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியுள்ளனர்.

போலீஸார் ஆய்வு
போலீஸார் ஆய்வு

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மொண்டியம்பட்டியில் டி.என்.பி.எல் அரசு காகித ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு ஒப்பந்த தொழிலாளியாகக் கரூர் மாவட்டம் குள்ளம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கலைச்செல்வன் என்பவர் வேலை பார்த்துவந்தார். இவர் இரண்டு நாள்களுக்கு முன்பு இரவு நேரத்தில் காகித ஆலையின் வளாகத்தில் டிராக்டர் மூலம் மரச் செடிகளை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு நட்டு வைத்துக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து டிராக்டர் மட்டுமே நின்றுகொண்டிருந்தது. கலைவாணனைக் காணவில்லை. ஆலை வளாகம் முழுவதும் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

`மீ டூ சர்ச்சை; 600 வீரர்கள்; 7 மணிநேர தேடுதல்!’ - மலையில் இறந்துகிடந்த தென்கொரிய  தலைவர்

காகித ஆலை வளாகத்திற்குச் சொந்தமான குளத்தில் கலைச்செல்வன் விழுந்திருக்கலாம் என்ற கோணத்தில் தகவலறிந்த மணப்பாறை தீயணைப்புத்துறை மற்றும் போலீஸார் அங்கு வந்து விசாரித்தனர். ஆனால் ஆலை நிர்வாகம் அனுமதிக்காததால் அவர்கள் திரும்பி விட்டனர். இந்நிலையில் ஆலைக்குள் மாயமான கலைச்செல்வன் நிலை என்ன என்று அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

உயிரிழந்த கலைவாணன்
உயிரிழந்த கலைவாணன்

பின்னர், இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆலை வளாகத்தில் அனுமதியுடன் தீயணைப்பு வீரர்கள் குளத்தில் இறங்கி கலைச்செல்வனைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கலைச்செல்வனின் ஐ.டி கார்டு மற்றும் அவரது பர்ஸ் குளத்தில் மிதந்தது. இதையடுத்து தேடும் பணி தீவிரப்படுத்தப் பட்ட நிலையில், ஒரு மணி நேரத்திற்குப் பிறகுக் கலைச்செல்வனின் உடல் குளத்திலிருந்து மீட்கப்பட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது

Corona Live Updates: அமைச்சர் நிலோஃபர் கபிலுக்கு கொரோனா தொற்று!

போராட்டத்தில் ஈடுபட்ட கலைச்செல்வனின் உறவினர்களிடம் பேசினோம்.``காகித ஆலையில் ஒப்பந்த தொழிலாளராக கலைச்செல்வன் வேலைபார்த்துக் கொண்டிருந்தார். ஆலையில் டிராக்டர் ஓட்டும் டிரைவராக வேலைப்பார்த்துக் கொண்டிருந்தார். டிராக்டரில் செடிகளை ஏற்றிச்சென்று ஓர் இடத்திலிருந்து செடி நட்டு வைத்துக்கொண்டிருந்தவர் எப்படி காகித ஆலை குளத்தில் மூழ்கிச் சாக முடியும். அங்கு வேலைசெய்துகொண்டிருந்த கலைச்செல்வன் திடீரென காணவில்லை.

உறவினர்கள் முற்றுகை
உறவினர்கள் முற்றுகை

ஆலை முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை என்றபோது, ஆலையில் வேலை பார்த்த அதிகாரிகளில் சிலர் குளத்தில் மூழ்கி உயிரிழந்திருப்பார் என்று சொல்லியது எங்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஏன் எங்களிடம் அதிகாரிகள் சொல்லவில்லை. தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் உள்ளே வந்தபோது ஏன் நிர்வாகம் அவர்களை அனுமதிக்கவில்லை. இதுபோன்று பலவித சந்தேகங்கள் இவ்வழக்கில் இருக்கிறது என்று கூறி ஆலையின் மெயின் கேட்டை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினோம். அதன் பிறகு போலீஸார் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆலை தரப்பில் விசாரித்துவிட்டு உங்களுக்குச் சொல்கிறோம் என்று உத்தரவாதம் அளித்தார்கள். அதன் பேரில் கலைந்து சென்றோம். சரியான முடிவு வரவில்லை என்றால் மீண்டும் ஆலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்" என்று கொதித்தனர்.

இதுகுறித்து டி.என்.பி.எல் அதிகாரிகள் தரப்பில் பேசினோம். ``பொதுவாக ஆலையில் உயர் அதிகாரிகள் அனுமதியில்லாமல் யாரையும் அனுமதிப்பதில்லை. கடுமையான சட்டதிட்டங்களை இந்த ஆலையில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்தான் தீயணைப்பு போலீஸாரை தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். இதில் எந்த உள்நோக்கமும் இல்லை.

போலீஸார் ஆய்வு
போலீஸார் ஆய்வு

கலைவாணன் போன் பேசிக்கொண்டே குளத்தில் கை கழுவச் சென்ற போது வழுக்கி விழுந்ததாகச் சொல்கிறார்கள். இதுவே இங்குள்ள அதிகாரிகள் சொல்வதைத் தான் நான் சொல்கிறேன். போலீஸார் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் விசாரணையில் முழுமையாகத் தெரியவரும் என்றார். கலைவாணனின் குடும்பத்திற்கு என்ன செய்யவேண்டும் என்பதனை எங்களது உயர் அதிகாரிகள் முடிவு செய்வார்கள்’’ என்று முடித்துக்கொண்டார்கள்.

அடுத்த கட்டுரைக்கு