இந்தியாவின் அரசியல் களம் பரந்து விரிந்தது. நூற்றுக்கணக்கான கட்சிகளில் ஆயிரக்கணக் கான பிரமுகர்கள் இருக்கிறார்கள். ஆனால் சில அரசியல் தலைவர்களே அனைத்துக் கட்சியி னராலும் வழிகாட்டியாக மதிக்கத்தக்க ஆளுமையாக உருவெடுக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் பிரணாப் முகர்ஜி. அதனால்தான் நாடு முழுவதிலுமிருந்து அவருக்கான அஞ்சலிகள் முன்வைக்கப்பட்டன.

1935-ம் ஆண்டு, மேற்கு வங்க மாநிலத்தில் பிறந்தார் பிரணாப். தன் 34வது வயதில் அரசியலுக்குள் நுழைந்தார். 1969-ம் ஆண்டு வங்காளத்தின் மிட்நாபுர் தொகுதியில் லோக் சபா எம்.பிக்கான இடைத்தேர்தல் சமயம். தன் நண்பர் வி.கே. கிருஷ்ண மேனன் வங்காள காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட, அவருக்காகப் பம்பரமாகச் சுழன்று பணியாற்றினார் பிரணாப். அவரது வேகம், விவேகம், அரசியல் அறிவு ஆகியவற்றைக் கண்ட இந்திரா காந்தி, அவரை காங்கிரஸின் ராஜ்யசபா எம்பி-யாகத் தேர்ந்தெடுத்து அரசியலுக்குள் அறிமுகப்படுத்தினார்.

அங்கிருந்து தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர் இந்த ஐம்பதாண்டுகளில் நிதி அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், வெளியுறவுத் துறை அமைச்சர், திட்டக் குழு துணைத் தலைவர், ஜனாதிபதி என இந்தியாவின் உயர் பதவிகளை வகித்தார்.

இந்திராவின் மறைவிற்குப் பிறகு, காங்கிரஸிலிருந்து விலகி ராஷ்டிரிய சமாஜவாதி காங்கிரஸ் எனப் புதிய கட்சியைத் தொடங்கினார். 1989-ம் ஆண்டு அந்தக் கட்சி மீண்டும் காங்கிரஸுடன் இணைந்தது. கட்சியினுள் சோனியா காந்தியின் வளர்ச்சிக்குப் பெரும் பலமாகத் தோள் கொடுத்தவர்.

கருணாநிதி, ஜெயலலிதா எனத் தமிழகத் தலைவர்களுடனும் நல்ல நட்பு பாராட்டியவர். 2016-ம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்தபோது ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கிற்கு சிரமம் பாராமல் அவர் ராணுவ ஹெலிகாப்டரில் பயணித்து வந்தது பலரையும் நெகிழச்செய்தது.

கட்சி பேதமின்றி நட்பு பாராட்டியவர் பிரணாப் என்பதற்கு 2018-ம் ஆண்டு நாக்பூர் ஆர்.எஸ்.எஸ் மாநாட்டில் அவர் கலந்துகொண்டதே சாட்சி.

பதவிகளைத் தாண்டி தன்னை ஒரு இந்தியக் குடிமகனாக முன்னிறுத்திக்கொண்டவர் பிரணாப் முகர்ஜி. ‘citizen pranab’ என்பது ட்விட்டரில் அவர் பயன்படுத்திய பெயர். நாட்டு மக்களுக்கு அவர் கடைசியாகப் பகிர்ந்த செய்தியும் சுதந்திர தின வாழ்த்துதான். திசைகாட்டும் தலைவராகவும் வழிகாட்டும் சிட்டிசனாகவும் வாழ்ந்து மடிந்த பிரணாப் முகர்ஜிக்கு அஞ்சலிகள்!