Published:Updated:

மக்களை வசப்படுத்திய வசந்தகுமார்!

வசந்தகுமார்
பிரீமியம் ஸ்டோரி
வசந்தகுமார்

முதன்முதலா ஆரம்பிச்ச கடைக்குப் பக்கத்துல பஸ் ஸ்டாப் இருந்தது. மொட்டை வெயில்ல நிக்கிறவங்களைக் கடைக்குள்ள நிழல்ல உட்காரச் சொல்வேன்.

மக்களை வசப்படுத்திய வசந்தகுமார்!

முதன்முதலா ஆரம்பிச்ச கடைக்குப் பக்கத்துல பஸ் ஸ்டாப் இருந்தது. மொட்டை வெயில்ல நிக்கிறவங்களைக் கடைக்குள்ள நிழல்ல உட்காரச் சொல்வேன்.

Published:Updated:
வசந்தகுமார்
பிரீமியம் ஸ்டோரி
வசந்தகுமார்
“விஜிபி-ல இருந்தப்போ ஒரு கஸ்டமர் எனக்குப் பழக்கம். தி.நகர்ல ஒரு மளிகைக்கடை நடத்தி வருமானம் இல்லாம அதை மூடியிருந்தார். கடை இருந்த இடத்தை எனக்குக் கொடுத்தார். ஆனா, ஆறு மாசத்துல எட்டாயிரம் ரூபாய் தரணும்னு கண்டிஷன். அது ராசி இல்லாத இடம்னு சிலர் சொன்னாங்க. ‘என் முக ராசிக்கு நான் அந்தக் கடைல பெரிய முதலாளியா உட்காருறேன் பாருங்க’ன்னு சொல்லி ஒரு மரப்பலகைல என் கைப்பட ‘வசந்த் அண்ட் கோ’னு எழுதி மாட்டினேன். கடைல பொருளே இல்லாம பேரு வெச்ச ஆளா நானாத்தான் இருப்பேன். அப்புறமா ஒரு நண்பர்கிட்ட நாலு வயர் சேர்கள் கடனா வாங்கிப் போட்டு பர்னிச்சர் வியாபாரம் ஆரம்பிச்சேன். சைக்கிளிலேயே சென்னையின் மூலைமுடுக்கெல்லாம் போயி கஸ்டமர்களைப் பிடிச்சேன். எட்டே மாசத்துல 8,000 ரூபாய் கடனை அடைச்சேன். அடுத்த வருஷம் புத்தாண்டு வியாபாரத்துல 28,000 சம்பாதிச்சேன். அப்போ எனக்கும் என் மனைவிக்கும் தூக்கமே வரலை..!” ‘மேடு இன் தமிழ்நாடு’ வியாபார சாம்ராஜ்ஜியமான ‘வசந்த் அண்ட் கோ’ நிறுவன அதிபர் வசந்தகுமாரின் வெற்றிக் கதையை அவரே இவ்வளவு எளிமையாகச் சொல்லியிருக்கிறார்.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தும்பைப்பூ வண்ண ஆடை, முகத்தில் எப்போதும் தவழும் புன்னகை, உழைத்துக் காப்பேறிய கிராமத்து உடல் என்ற தன் தனித்த அடையாளத்தையே தன் நிறுவனத்தின் பிராண்டாக மாற்றிய சாகசக்காரர். காங்கிரஸின் பழுத்த அரசியல்வாதி. இருமுறை நாங்குனேரித் தொகுதி எல்.எல்.ஏவாக இருந்தபோதும், பிறகு கன்னியாகுமரி எம்.பியாக இருந்தபோதும் தொகுதி மேம்பாட்டில் அரசை மட்டுமே நம்பாமல் தன் செலவில் மக்கள் பணி செய்தவர். தேர்தலில் நிற்கும்போது தன் சொத்து மதிப்பு 416 கோடி என அறிவித்து ஆச்சர்யப்பட வைத்தவர். அண்மையில் அவர் மறைந்தபோது அவர் வீட்டின்முன் கூடி அழுத தொழிலாளர்களின் கண்ணீரில் தெரிந்தது அவர் நிஜமாகவே சம்பாதித்த சொத்து எது என்று!

மக்களை வசப்படுத்திய வசந்தகுமார்!

“71 கிளைகள் இந்தியா முழுக்க இருந்தாலும் ஒவ்வொரு கிளையிலும் வேலை பார்க்குறவங்களை பர்சனலா தெரிஞ்சு வெச்சுப்பார். முகத்தோட வாட்டத்தை வெச்சே ‘என்ன பிரச்னை உனக்கு... அண்ணாச்சி கேட்குறேன்ல சொல்லுலே’ன்னு தோள்மேல கைபோட்டுக் கேட்பார்!’’ சொல்லும்போதே கண்ணீர் சிந்துகிறார் 30 வருடங்களாக அவரிடம் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவர்.

“முதன்முதலா ஆரம்பிச்ச கடைக்குப் பக்கத்துல பஸ் ஸ்டாப் இருந்தது. மொட்டை வெயில்ல நிக்கிறவங்களைக் கடைக்குள்ள நிழல்ல உட்காரச் சொல்வேன். தயக்கத்தோடு வர்றவங்களை சேர்ல உட்காரச் சொல்லி குடிக்கத் தண்ணீர் கொடுப்பேன். காபி, டீ கொடுக்க வசதி இல்லை. அப்போ இது என்ன கடைன்னு மெல்ல பார்க்க ஆரம்பிச்சாங்க. அதுல சிலர் என் நிரந்தர கஸ்டமரா மாறிட்டாங்க.

கடைக்கு சேர் வாங்க வர்றவங்ககிட்ட பணம் எவ்வளவு இருக்குன்னு பார்க்க மாட்டேன். கடனா கொடுத்தா திருப்பிக் கொடுத்துருவாங்களான்னு மட்டும்தான் பார்ப்பேன். 350 ரூபாய் சேரை வெறும் 50 ரூபாய்க்குக் கொடுத்துட்டு, ‘இந்தப்பக்கமா வர்றப்போ ரெண்டு ரெண்டு ரூபாயா திருப்பிக் கொடுங்க’ன்னு அனுப்பி வெப்பேன். 5 ரூபாய் லாபமா நிக்கும். அவங்கமேல வெச்ச நம்பிக்கையும் நாணயமும் காலத்துக்கும் நிக்கும். என் அக்கவுன்ட்ல பணம் இல்லாட்டியும், நான் கொள்முதல் பண்ணுற நிறுவனங்களுக்குக் கொடுக்குற செக் பவுன்ஸாக விட்டதே இல்லை. இப்பவும் ஆன்லைன்ல பொருள்கள் வாங்குற கலாசாரம் வளர்ந்தாலும்கூட வசந்த் அண்ட் கோ போயி் தொட்டுப் பார்த்துப் பொருள்கள் வாங்கலாம். தவணைமுறைல காசு கட்டிக்க்கலாம்னு நம்பி வர்றாங்க. அந்த EMI தான் என்னோட பலம். Every Member is my Investment!” என்று எப்போதும் சிரித்தபடி சொல்வார் வசந்தகுமார்.

மக்களை வசப்படுத்திய வசந்தகுமார்!

‘‘பாசக்காரர், நல்ல பண்பாளர். கொள்கைவாதி. எல்லோரையும்விடக் கடினமான உழைப்பாளி. உதவி செய்வது வெளியே தெரியக்கூடாது என நினைப்பவர். வியாபாரிகளுக்கு லாபம் மட்டுமே நோக்கமாக இருக்கக்கூடாது என்று அடிக்கடி சொல்வார். அவருடைய இழப்பு எங்கள் குடும்பத்தையே அசைத்துவிட்டது!” என்று கண்ணீருடன் சொல்கிறார் அவரின் அண்ணன் மகளான தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.

“அப்பா எங்களை எல்லாச் சூழலிலும் தாக்குப்பிடிக்கிற மாதிரிதான் வளர்த்தார். கஷ்டப்பட்ட காலங்களில்கூட அவர் கோபப்பட்டு பார்த்ததே இல்லை. எப்பவும் யோசிச்சிட்டே இருப்பார். அதிகாலை எழுந்து கிளம்பிடுவார். எம்.பி ஆனவுடன் இன்னும் சுறுசுறுப்பா தன்னை ஆக்கிக்கிட்டார். பாராளுமன்றத்துல அவர் அதிகம் கேள்வி கேட்டார்னு சொல்றாங்க. ஆனா, அவர் பேச நினைச்சதுல பாதிகூடப் பேசமுடியல. அதான் நிஜம்.

முதன்முதல்ல பர்னிச்சர் கடை வெச்சப்போ எப்படி இருந்தாரோ அதே ஆளாத்தான் கடைசிவரை இருந்தார்” என்கிறார் அவர் மூத்த மகனான விஜய் வசந்த்.

‘வியாபார காந்தம்’ என்பதன் நிஜ அர்த்தத்தை கொரோனா ஊரடங்கு நாளிலும்கூட தனது இறுதி ஊர்வலத்திற்கு வந்த மக்கள் கூட்டத்தின் அடர்த்தி மூலம் உணர்த்திச் சென்றிருக்கிறார் வசந்தகுமார்.