Published:Updated:

போய்வாருங்கள் பேராசிரியரே!

க.அன்பழகன்
பிரீமியம் ஸ்டோரி
News
க.அன்பழகன்

கருணாநிதிக்கும் அன்பழகனுக்கும் இடையிலான நட்பு அலாதியானது; அபூர்வமானது

தி.மு.க-வினரால் `இனமான பேராசிரியர்’ என்று அழைக்கப்பட்டவர் க.அன்பழகன். கடந்த ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி, அந்த மூத்த தலைவரின் 97-வது பிறந்த நாளுக்கு வாழ்த்தச் சென்ற தி.மு.க பொருளாளர் துரைமுருகன், ‘உங்களுடைய நூறாவது பிறந்த நாளுக்கும் வாழ்த்து சொல்ல வருவோம்’ என்று கூறிவிட்டு புன்னகையுடன் வெளியே வந்தார். ஆனால், காலம் அதற்கு வாய்ப்பளிக்கவில்லை. மார்ச் 7-ம் தேதி அதிகாலையில் இந்த மண்ணைவிட்டு மறைந்தார் க.அன்பழகன்.

தி.மு.க-வின் தலைவராக 50 ஆண்டுகள் பதவிவகித்தவர் கருணாநிதி. அவரோடு இணைந்தே பயணித்து, 43 ஆண்டுகள் அந்த இயக்கத்தின் பொதுச்செயலாளராக இருந்த பெருமையைப் பெற்றவர் அன்பழகன். கருணாநிதிக்கும் அன்பழகனுக்கும் இடையிலான நட்பு அலாதியானது; அபூர்வமானது. அதற்குக் கரணம், இருவரும் ஏற்றுக்கொண்ட சுயமரியாதைக் கொள்கையே!

அண்ணாவுடன்...
அண்ணாவுடன்...

அன்பழகனின் தந்தை தீவிர காங்கிரஸ்காரராக இருந்தாலும், காங்கிரஸ் இயக்கத்தில் இருந்து பெரியார் வெளியேறியபோது, தானும் இயக்கத்தில் இருந்து வெளியேறினார். பின்னர் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் தீவிர தொண்டரானார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
தமிழ் மாணவர் மன்றம்
ஆண்டு விழா

பெரியார், அண்ணாவின் பேச்சை சிறுவயதிலேயே கேட்டுக் கேட்டு வளர்ந்தவர் அன்பழகன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது, தமிழ் இலக்கிய மன்றம் எனும் அமைப்பைத் தொடங்கி திராவிட இயக்கக் கொள்கைகளை மாணவர்கள் மத்தியில் பரப்பிவந்தார்.

அந்தக் காலத்தில் காந்தியத்தைக் காக்கும் கதர்சட்டைக்காரர்களுக்கும், பொதுவுடைமைக் கொள்கையைப் போற்றும் செஞ்சட்டைக்காரர் களுக்குமான புகலிடமாக அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இருந்தது. அங்கே கறுப்புச் சட்டை அணிந்துகொண்டு, திராவிட இயக்கச் சித்தாந்தங்களை விதைக்கும் வேலையைச் செம்மையாகச் செய்தார் அன்பழகன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், அண்ணாவை அழைத்துப் பேசவைத்து அந்தப் பல்கலைக்கழகத்தையே திராவிட இயக்கக் கோட்டையாக மாற்றினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

1942-ம் ஆண்டு திருவாரூர் விஜயபுரத்தில் இஸ்லாமிய இளைஞர்கள் இணைந்து நடத்திய சிக்கந்தர் விழாவில்தான் கருணாநிதியும் அன்பழகனும் முதன்முறையாகச் சந்தித்துக் கொண்டனர். அதற்குப் பிறகு, திருவாரூரில் தமிழ் மாணவர் மன்ற ஆண்டு விழாவுக்கு அன்பழகனைப் பேச அழைக்கிறார் கருணாநிதி. அப்படித்தான் இருவருக்குமிடையே நட்பு உண்டாகிறது. அது கிட்டத்தட்ட 75 ஆண்டுகள் நீடித்தது.

க.அன்பழகன்
க.அன்பழகன்

1957-ல்தான் தி.மு.க முதன்முறையாக சட்டமனந்த் தேர்தல் களத்தில் கால்வைத்தது. அப்போது அந்தக் கட்சிக்குக் கிடைத்தது 15 எம்.எல்.ஏ -க்கள். அவர்களில் ஒருவராக சென்னை எழும்பூர் தொகுதியிலிருந்து அன்பழகன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதுதான் அவருக்கும் முதல் தேர்தல். அதிலிருந்து ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை சட்டமேலவை உறுப்பினராகவும், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார் அன்பழகன்.

கருணாநிதி தலைமையில் 1971-ம் ஆண்டில் தி.மு.க ஆட்சி அமைந்தபோது, முதன்முறையாக அன்பழகன் அமைச்சர் ஆக்கப்பட்டார். 1977-ம் ஆண்டு தி.மு.க-வின் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்றிலிருந்து மரணமடைந்த 2020 மார்ச் 7 வரையிலுமான 43 ஆண்டுகள், அந்தப் பொறுப்பை வகித்தவர் அன்பழகன் மட்டுமே. சுகாதாரத் துறை, கல்வித் துறை, நிதித் துறை அமைச்சராக அவர் பணியாற்றி யுள்ளார். சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது, தமிழ் சித்த மருத்துவத் துறையை மீட்டெடுப்பதற்காக பெரும்முயற்சி எடுத்தார்.

தனித்தமிழ்ப் பெயர்
அன்பழகன்

ஈர்ப்புள்ள பேச்சாளர் என்பதோடு, இடைவிடாத எழுத்துப் பணியிலும் ஈடுபட்டிருந்தார். `வாழ்க திராவிடம்’, ‘சீதையின் காதல்’, ‘தமிழர் திருமணமும் இனமானமும்’, ‘கலையும் வாழ்வும்’, `வகுப்புரிமைப் போராட்டம்’ என நாற்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றது; எமர்ஜென்சியை எதிர்த்து சிறைக்குச் சென்றது; ஈழத்தமிழர் படுகொலையைக் கண்டித்து சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தது... என அன்பழகனின் அரசியல் செயல்பாடுகள் என்றென்றும் பேசப்படுபவை.

ராமையா என்ற பெயரை மாற்றி, தனித்தமிழ்ப் பெயராக மாற்றிக்கொண்ட அன்பழகன், தமிழ் உள்ள வரையிலும் நினைவுகூரப்படும் தலைவர் களில் ஒருவராக நிச்சயம் இருப்பார்!