Election bannerElection banner
Published:Updated:

மும்பை விடுதி அறையில் சடலமாகக் கிடந்த எம்.பி! - கடிதத்தைக் கைப்பற்றிய போலீஸ்

எம்.பி மோகன் டெல்கர்
எம்.பி மோகன் டெல்கர் ( Facebook )

தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மோகன் டெல்கர், மும்பையிலுள்ள ஒரு தனியார் ஹோட்டலில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

மும்பையின் மரைன் டிரைவ் பகுதியிலுள்ள ஒரு நட்சத்திர விடுதி அறையில், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலியின் மக்களவை உறுப்பினர் மோகன் டெல்கர் இறந்துகிடந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மோகன் டெல்கர், ஏழு முறை தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மக்களால் நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்து அனுப்பப்பட்டவர். இவர் சுயமாக `பாரதிய நவசக்தி கட்சி’ என்ற கட்சியைத் தொடங்கியவர். மோகனின் மரணம் தற்கொலையாக இருக்கும் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. மேலும், அவர் தங்கியிருந்த அறையில் குஜராத்தியில் எழுதியிருந்த கடிதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டிருக்கிறது. அது தற்கொலைக் குறிப்பு என்றும் கூறப்படுகிறது.

கரூர்: `கடனைக் கட்டலைன்னா, கொன்னுருவேன்!'- தற்கொலை செய்துகொண்ட பெண்; சர்ச்சையில் தி.மு.க பிரமுகர்

அந்தக் கடிதத்தின் அடிப்படையில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். பிரேத பரிசோதனை முடிவுகள் வந்ததும், இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று மும்பை காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

எம்.பி மோகன் டெல்கர்
எம்.பி மோகன் டெல்கர்
Facebook

58 வயதான மோகன் டெல்கர்க்கு கலாபென் டெல்கர் (Kalaben Delkar) என்ற மனைவியும். அபிநவ் (Abhinav) என்ற மகனும், திவிதா (Divita) என்ற மகளும் இருக்கிறார்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு