Published:Updated:

ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவியின் இறுதிச் சடங்கு! - அதிமுக-வினர் ஊர்வலமாகச் சென்று அஞ்சலி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவியின் இறுதிச் சடங்கு
ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவியின் இறுதிச் சடங்கு

உடல்நலக்குறைவால் நேற்று காலமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமியின் இறுதிச் சடங்கு நிகழ்வில் அதிமுக-வினர் ஊர்வலமாகச் சென்று அஞ்சலி செலுத்தினர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி (63), உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில வாரங்களாக சிகிச்சை பெற்றுவந்தார். சென்னை பெருங்குடியிலுள்ள தனியார் மருத்துவமனையில் புதன்கிழமை காலை காலமானார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, சசிகலா, விசிக தலைவலர் திருமாவளவன் உள்ளிட்டோர் தனியார் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

இறுதி ஊர்வலம்
இறுதி ஊர்வலம்

இதையடுத்து விஜயலட்சுமியின் உடல் சொந்த ஊரான பெரியகுளத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது. பெரியகுளம் தென்கரை தெற்கு அக்ரஹாரத்திலுள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டில் பொதுமக்களும் கட்சியினரும் அஞ்சலி செலுத்துவதற்காக அவரின் உடல்வைக்கப்பட்டிருந்தது. அங்கு பாஜக தலைவர் அண்ணாமலை, டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

ஓபிஎஸ் மனைவி மரணம்: பெரியகுளத்தில் இறுதி சடங்கு நடத்த ஏற்பாடு!

இன்று காலை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, திமுக எம்.எல்.ஏ-க்கள் கம்பம் ராமச்சந்திரன், மகாராஜன், சரவணக்குமார், மாவட்டச் செயலர் தங்க.தமிழ்ச்செல்வன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், காமராஜ், ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர்.

இறுதிச் சடங்கு
இறுதிச் சடங்கு

பெரியகுளம் நகராட்சிக்குச் சொந்தமான மயானத்துக்கு டிராக்டரில் அமைக்கப்பட்ட ரதத்தில் விஜயலட்சுமியின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்கள் ஓ.பி.ஜெயபிரதீப், தேனி எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத்குமார், உறவினர்கள், அதிமுக-வினர் ஊர்வலமாக மயானத்துக்குச் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு