Published:Updated:

`லேண்ட் மார்க்கால் வந்த பிரச்னை’- மோடி பள்ளியால் குஜராத் முதல்வரின் உறவினருக்கு நேர்ந்த சோகம்

108 ஆம்புலன்ஸ் உரிய நேரத்தில் வராமல் தாமதப்படுத்தியதே சங்வியின் இறப்புக்குக் காரணமாகிவிட்டது”

ambulance
ambulance

குஜராத் முதல்வர் விஜய்ரூபானி உறவினர் இறப்புக்கு `108’ ஆம்புலன்ஸ் தாமதம்தான் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குஜராத் முதல்வர் விஜய் ரூபானியின் சித்தி மகன், அனில்பாய் சங்க்வி. ராஜ்கோட்டில் கடந்த 4-ம் தேதி உயிரிழந்தார். இதுகுறித்து பா.ஜ.க நிர்வாகி ஒருவர் கூறுகையில், ``கடந்த 4 ஆம் தேதி சங்விக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட பிறகு 108 ஆம்புலன்ஸை அழைத்தனர்.

Vijay Rupani
Vijay Rupani

ஆனால், ஆம்புலன்ஸ் வீட்டுக்கு வந்தபோது, சங்க்வி உயிரிழந்துவிட்டார். 108 ஆம்புலன்ஸ் உரிய நேரத்தில் வராமல் தாமதப்படுத்தியதே சங்வியின் இறப்புக்குக் காரணமாகிவிட்டது” என்று குற்றம் சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக ராஜ்கோட் மாவட்ட கலெக்டர் ரம்யா மோகன், விசாரணை நடத்த சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டிருந்தார். 'முழுச் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு மாநில அரசின் சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. நாமும் விசாரணை வளையத்தில்தான் இருக்கிறோம். ராஜ்கோட்டில் சுகாதாரத் துறையின் பிராந்திய துணை இயக்குநரால் இந்த விசாரணை நடத்தப்படுகிறது’’ எனக் கூறியுள்ளார்.

இதில் நடந்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் ஆம்புலன்ஸ் வழிதவறிச் சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக, 108 ஆம்புலன்ஸின் மண்டல இணை ஒருங்கிணைப்பாளர் அறிக்கை ஒன்றையும் சமர்ப்பித்துள்ளார். அதில், ``சவுராஷ்டிர காலகேந்திரா சொசைட்டியில் உள்ள சங்க்வியின் இல்லத்தை அடைய சங்க்வி பெயரில் இருந்த மற்றொரு இடத்துக்கு ஆம்புலன்ஸ் சென்றுவிட்டதால் 39 நிமிடங்கள் தாமதமானது. தவறாகச் சென்றதுதான் இதற்குக் காரணம்'’ என்று தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் ரம்யா மோகன் கூறுகையில்,``சங்கிவியின் உறவினர் ஒருவர் தங்கள் குடியிருப்பு இல்லத்தைக் கண்டுபிடிப்பதற்காக மோடி பள்ளியை முக்கிய அடையாளமாகக் கொடுத்துள்ளார்.

ambulance
ambulance

இதைப் பதிவிட்டவுடன், ஆம்புலன்ஸில் உள்ள சாஃப்ட்வேர் வழிகாட்டுதலின்படி, ஓட்டுநர் ஆம்புலன்ஸை இயக்கியுள்ளார். புறநகர்ப் பகுதியை ஒட்டிய ஐஸ்வர்யா கிராமத்திற்குதான் ஆம்புலன்ஸ் வந்தடைந்தது. ஆனால், இந்தப் பகுதியிலும் மோடி பள்ளிக்கூடம் இருந்ததால், ஆம்புலன்ஸ் தடம் மாறிச்சென்றுள்ளது. தடம் மாறி பின்னர் சரியான இடத்தை அடைய 39 நிமிடங்கள் எடுத்துக் கொள்ள வேண்டியதாகி விட்டது. இறுதி விசாரணை அறிக்கையில் மேலும் பல விவரங்கள் வெளிவரும்” என்று கலெக்டர் விளக்கம் அளித்துள்ளார்.