Published:Updated:

`பிரபல ஜவுளிக் கடைக்கு நிலம் வாங்கிக் கொடுத்த புகார்' -போலீஸ் பிடியில் மதுரை தரகருக்கு நேர்ந்த சோகம்?

அழகர்
அழகர்

`விசாரணையின்போது மயங்கி விழுந்துவிட்டார்' என்று இரவு நேரத்தில் காவல்துறையினர் அழகரின் குடும்பத்தினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

நில மோசடிப் புகாரில் காவல்துறை விசாரணைக்குச் சென்ற ரியல் எஸ்டேட் தரகர் அழகர் என்பவர் மர்மமான முறையில் மரணமடைந்தார். இதற்குக் காவல்துறையினர்தான் காரணம் என்று அழகரின் உறவினர்கள் புகார் எழுப்பி வருவது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Representational Image
Representational Image

மதுரை தவிட்டுச்சந்தையில் வசித்து வரும் 56 வயதான அழகர், ரியல் எஸ்டேட் தரகராகப் பணியாற்றி வந்துள்ளார். பிரபல ஜவுளிக்கடைக்கு நிலம் வாங்கிக் கொடுத்தது சம்பந்தமாக காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவில் வழக்கு பதிவாகியுள்ளது.

அந்த வழக்கு விசாரணைக்காக மதுரை மாநகரக் காவல் ஆணையாளர் அலுவலக வளாகத்தில் செயல்படும் பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு நேற்று மாலை அழகர் சென்றுள்ளார். இந்நிலையில், `விசாரணையின்போது மயங்கி விழுந்துவிட்டார்' என்று இரவு நேரத்தில் காவல்துறையினர் அழகரின் குடும்பத்தினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

அழகர்
அழகர்

அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அழகரை குடும்பத்தினர் வந்து பார்த்தபோது, அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ``மருத்துவமனைக்குக் கொண்டு வரும் முன்பே மரணமடைந்துள்ளார். அவர் மரணத்தில் சந்தேகம் உள்ளது. அவர் மரணத்துக்குக் காவல்துறையினர்தான் காரணம். இதை நியாயமாக விசாரிக்க வேண்டும்'' என்று உறவினர்கள், உயர் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர். இதுபற்றி விசாரிக்க மாநகரக் காவல்துறை ஆணையாளர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டுள்ளார்.

இந்தநிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டுள்ள அவர் உடலை வாங்க மறுத்து உறவினர்களும் அமைப்புகளும், `விசாரணை வேண்டும்' என்று கோரிக்கை வைத்து அமர்ந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்ட்டது.

மதுரை மாநகரக் காவல்துறை அலுவலகம்
மதுரை மாநகரக் காவல்துறை அலுவலகம்

சில மாதங்களுக்கு முன் டூவீலரில் சென்ற இளைஞர் ஒருவர் மரணமடைந்ததற்கு ரோந்து போலீஸ்தான் காரணம் என்றும் கூறப்பட்டது. அவனியாபுரம் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி ஒருவர் மரணமடைந்த சம்பவமும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இப்போது காவல்துறை விசாரணைக்குச் சென்ற அழகர் மரணமடைந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு