Published:Updated:

மக்களின் மூத்த மகள்... மனங்களை வென்ற சுஷ்மாவின் பர்சனல் பக்கங்கள்!

ஒரே இடத்தில் பணி: ட்விட்டரில் கொதித்த சுஷ்மா ஸ்வராஜ்!

சுஷ்மாவும் ஸ்வராஜும் முதன்முறையாக சட்டக்கல்லூரியில் சந்திக்கிறார்கள். பிறகு உச்ச நீதிமன்றத்தில்...

மக்களின் மூத்த மகள்... மனங்களை வென்ற சுஷ்மாவின் பர்சனல் பக்கங்கள்!

சுஷ்மாவும் ஸ்வராஜும் முதன்முறையாக சட்டக்கல்லூரியில் சந்திக்கிறார்கள். பிறகு உச்ச நீதிமன்றத்தில்...

Published:Updated:
ஒரே இடத்தில் பணி: ட்விட்டரில் கொதித்த சுஷ்மா ஸ்வராஜ்!

'என் அப்பாவை ஒரு பொய்யான வழக்கில் சிக்க வைத்துவிட்டார்கள். என் அப்பா எந்தத் தவறும் செய்யவில்லை. எங்களுக்கு உதவி செய்யுங்கள்' என்று சிறுமி ஒருவர், மறைந்த சுஷ்மா ஸ்வராஜ்க்கு ட்வீட் செய்கிறாள். அப்போது, இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த சுஷ்மா, 'மகளே உன்னைப் பற்றிய தகவல்களை எனக்கு அனுப்பு. நாங்கள் உனக்கு நிச்சயம் உதவி செய்வோம்' என்று பதிலளிக்கிறார்.

சுஷ்மா இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து மருத்துவமனையில் இருந்தபோது, பலரும் அவருக்கு தங்கள் சிறுநீரகத்தைத் தானம் தர முன் வந்தார்கள்.

ட்விட்டர் வழியாக மக்களுடன் எப்போதும் எந்நேரமும் தொடர்பில் இருந்தவர் சுஷ்மா. பாஸ்போர்ட் பிரச்னையில் இருந்து குழந்தையின் இதய அறுவைசிகிச்சை வரைக்கும் இணையம் வழி மக்களுக்கு உதவி செய்துகொண்டிருந்தவர் சுஷ்மா ஸ்வராஜ். அதனால்தான் பாகிஸ்தான் சிறையில் இருந்து சுஷ்மாவின் முயற்சியால் மீட்கப்பட்ட ஹமீது அன்சாரி, 'அவர் என் அம்மாவைப் போன்றவர். அவர் என்றென்றைக்கும் என் இதயத்துக்குள் வாழ்ந்துகொண்டிருப்பார்' என்று தேம்பியிருக்கிறார். தவிர, மேலேயுள்ளது போன்ற ட்வீட்களுக்கும் பதில் கொடுத்தவர் சுஷ்மா. இதன் காரணமாகவே, மக்களின் மனங்களுக்கு 'தன் வீட்டுப் பெண்' என்று நெருக்கமாக உணரப்பட்டவர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சில வருடங்களுக்கு முன்னால், சுஷ்மா இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து மருத்துவமனையில் இருந்தபோது, அவருடைய உறவினர்களின் சிறுநீரகம் சுஷ்மாவுக்குப் பொருந்தவில்லை. ஆனால், அவர்மேல் மரியாதை வைத்திருந்த பலரும் அவருக்கு தங்கள் சிறுநீரகத்தைத் தானம் தர முன் வந்தார்கள். இதில் மாற்று மதத்தைச் சேர்ந்தவர்கள், பா.ஜ.க அல்லாத வேறு கட்சியைச் சேர்ந்தவர்களும் அடக்கம். அந்த அளவுக்கு மக்களின் மனங்களை வென்றிருந்தார் சுஷ்மா.

சுஷ்மா ஸ்வராஜ்
சுஷ்மா ஸ்வராஜ்

பாராளுமன்றத்தில், பத்திரிகையாளர் சந்திப்பில் என எப்போதும் சிரித்த முகத்துடன் வலம் வந்துகொண்டிருந்த சுஷ்மாவின் அரசியல் வாழ்க்கை, பொதுவாழ்க்கையில் ஜெயிக்கத் துடிக்கும் பெண்களுக்கு நல்லதொரு வழிகாட்டியாக இருக்கும் என்று தாராளமாகச் சொல்லலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அரசியல் அறிவியலில் பட்டப்படிப்பை முடித்தவர். அதன்பின்னர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பையும் முடித்தார். ஹரியானாவின் மொழியியல் துறையில் தொடர்ந்து 3 வருடங்கள் 'சிறந்த இந்திப் பேச்சாளர்' விருதைப் பெற்றிருக்கிறார். தவிர, என்.சி.சி-யில் சிறந்த மாணவர் விருதையும் பெற்றிருக்கிறார்.

இளவயது சுஷ்மா
இளவயது சுஷ்மா
thehansindia.com

கல்வியைத் தாண்டி, இசை, கவிதைகள், நாடகம் மற்றும் நுண்கலைகளில் ஆர்வம் என ஆல் ரவுண்டராகவும் தன் பள்ளி மற்றும் கல்லூரிக் காலங்களில் வலம் வந்திருக்கிறார் சுஷ்மா. ஆசிரியர்கள் பாராட்டுகிற அளவுக்கு அவருடைய மேதைமை தன்மை இருந்திருக்கிறது. ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமென்றால், தன் எதிர்காலத்தை தன் கல்வியின் மேல் கட்டியவர் சுஷ்மா ஸ்வராஜ்.

சுஷ்மாவின் பெயருக்குப் பின்னால் ஸ்வராஜ் சேர்ந்ததின் பின்னால் ஒரு காதல் மட்டுமல்ல, ஒரு போராட்டமும் இருந்திருக்கிறது. ஹரியானாவை சொந்த ஊராக கொண்ட சுஷ்மா, அங்கு 'ஆச்சாரமானவர்கள்' என்று சொல்லப்பட்டு வந்த ஒரு குடும்பத்தில் பிறந்தவர்.

கணவருடன் சுஷ்மா
கணவருடன் சுஷ்மா
thehansindia.com

சட்டக்கல்லூரியில் சுஷ்மாவும் ஸ்வராஜும் முதன்முறையாக சந்திக்கிறார்கள். சுஷ்மா ஆர்.எஸ்.எஸ் பற்றாளர். ஸ்வராஜோ, சோஷியலிச நம்பிக்கையாளர். இவற்றையெல்லாம்தாண்டி 'கற்றாரை கற்றாரே' என்ற அடிப்படையில் இரு மனங்களும் ஒன்றையொன்று விரும்ப ஆரம்பித்திருக்கின்றன. பிறகு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தபோது ஒரே டீமில் வேலை பார்த்திருக்கிறார்கள்.

பொதுவாக, காதலித்துக்கொண்டிருப்பவர்களுக்கு ஒரே இடத்தில் வேலையும் அமைந்துவிட்டால், 'இருவரும் எப்போதும் பார்த்து கொண்டிருக்கலாம்' என்று சந்தோஷப்படுவார்கள். ஆனால், இவர்கள் உச்ச நீதிமன்றத்தில் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும்போது, இந்தியாவில் அது எமர்ஜென்சி காலகட்டம். எமர்ஜென்சியில் கைது செய்யப்பட்டு, சிறை சென்றவர்களுக்காக இலவசமாக வழக்காடிக் கொண்டிருந்தவர்களுக்கு காதலிப்பதற்கெல்லாம் நேரமில்லை.

ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறார்கள். இரண்டு குடும்பங்களுமே ஒப்புக்கொள்ளவில்லை. கல்வியும் காதலும் கொடுத்த உறுதியில் போராடி, 1975, ஜூலை 13 அன்று தம்பதிகளாகிறார்கள். தான் மறைவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னால்தான் தன்னுடைய 44-வது திருமண நாளைக் கொண்டாடினார் சுஷ்மா.

எமர்ஜென்சி முடிந்ததும் ஜனதா கட்சியில் (பா.ஜ.க) இணைந்தார் சுஷ்மா. பிறகு, தன்னுடைய 25 வயதில் ஜனதா கட்சியின் மிக இள வயது அமைச்சரவை மந்திரி ஆனார். தன்னுடைய 27-வது வயதில் அக்கட்சியின் ஹரியானா மாநிலத் தலைவர், ஒரு தேசியக் கட்சியின் முதல் பெண் செய்தித் தொடர்பாளர், பா.ஜ.க-வின் முதல் பெண் முதலமைச்சர், பொதுச் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர், மத்திய அமைச்சர் என 'முதல் முறையாக' என்ற பட்டத்தை பலமுறை பெற்றவர் சுஷ்மா. 'வெளியுறவுத்துறை அமைச்சர்' பதவியில் மட்டும், முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி முந்திக்கொண்டதால் இரண்டாம் பெண்மணி. ஆனால், முழு நேர வெளியுறவுத்துறை அமைச்சராக இவர்தான் முதல் பெண்மணி.

சுஷ்மா ஸ்வராஜ்
சுஷ்மா ஸ்வராஜ்

7 முறை மக்களவை எம்.பி-யாக இருந்த சுஷ்மா, 'சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது' பெற்ற முதல் மற்றும் ஒரே பெண்மணி.

தாயைப்போலவே பிள்ளை என்பார்கள். சுஷ்மாவுக்கு அவரைப்போலவே அறிவில் சிறந்த ஒரு மகள் இருக்கிறார். பெயர் பன்சூரி ஸ்வராஜ். ஆக்ஸ்போர்ட் பல்கலையில் பட்டப்படிப்பும் சட்டத்தில் பாரிஸ்டர் பட்டமும் முடித்திருக்கிறார். டெல்லி உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் கிரிமினல் வழக்கறிஞராக பிராக்டீஸ் செய்துகொண்டிருக்கிறார். அம்மாவுக்கு அரசியல்வாரிசாக வருவாரா என்பது தெரியவில்லை. ஆனால், அறிவில் அம்மாவுக்கு மிகச் சரியான வாரிசாகவே பன்சூரி குறிப்பிடப்படுகிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism