Published:Updated:

`பிரதமர் மோடி பொய் சொல்கிறார்... தமிழகத்திலும் போராட்டம் தீவிரமடையும்!’ - பெ.மணியரசன் ஆவேசம்

விவசாயிகள் போராட்டம்
News
விவசாயிகள் போராட்டம்

மூன்று சட்டங்களிலும் எந்த ஒரு திருத்தமும் தேவையில்லை. இந்த மூன்று சட்டங்களையும் முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும். இதைத்தான் டெல்லியில் போராடும் விவசாயிகளும் வலியுறுத்துகிறார்கள்.

Published:Updated:

`பிரதமர் மோடி பொய் சொல்கிறார்... தமிழகத்திலும் போராட்டம் தீவிரமடையும்!’ - பெ.மணியரசன் ஆவேசம்

மூன்று சட்டங்களிலும் எந்த ஒரு திருத்தமும் தேவையில்லை. இந்த மூன்று சட்டங்களையும் முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும். இதைத்தான் டெல்லியில் போராடும் விவசாயிகளும் வலியுறுத்துகிறார்கள்.

விவசாயிகள் போராட்டம்
News
விவசாயிகள் போராட்டம்

வேளாண்மை தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் மூன்று சட்டங்களும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமானவை எனவும், இதனால் தங்களுக்குக் கடுமையான பாதிப்புகள் ஏற்படுமென நாடு முழுவதும் விவசாயிகள் போராடிவருகிறார்கள். இந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்திவருகிறார்கள்.

இந்தநிலையில் பல்வேறு விவசாய சங்கங்களும், காங்கிரஸ், தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தின. இந்தப் போராட்டத்துக்கு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு அழைப்பு விடுத்திருந்தது. தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் சாலைமறியல், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட பல்லாயிரக்கணக்கானோர் கைதுசெய்யப்பட்டார்கள்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம், வேளாண் விளைபொருள் வணிகம் ஊக்குவிப்பு சட்டம், ஒப்பந்தப் பண்ணையச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள், விவசாயிகளை, தங்கு தடையின்றி சட்டப் பாதுகாப்போடு, சுரண்டிக் கொழிப்பதற்காகத்தான் இந்தச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டிருப்ப்பதாக விவசாய சங்கங்களும், எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டிவருகின்றன. அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலிலிருந்து, நெல், கோதுமை உள்ளிட்ட பொருள்கள் நீக்கப்பட்டிருப்பதால், இவற்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்படுவது விரைவில் நிறுத்தப்படும் எனக் கூறப்படுகிறது. விளைபொருள்களை கொள்முதல் செய்யும் கடமையிலிருந்தும் மத்திய, மாநில அரசுகள் விலகிக்கொள்ளும். ரேஷன் கடைகளும் படிப்படியாக மூடப்படும். இவை அனைத்துமே கார்ப்பரேட் நிறுவனங்களில் கொள்ளைகளுக்கு உறுதுணையாக இருக்கும். இதற்காகத்தான் இந்தச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டிருப்பதாக இந்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் தெரிவித்துவருகிறார்கள்.

ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்

இந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறக் கோரி, டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, இன்று நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டது. குறிப்பாக, விவசாய பூமியான டெல்டா மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் இந்தப் போராட்டம் மிகுந்த எழுச்சியோடு நடந்தது. தஞ்சாவூர், திருவையாறு, பூதலூர், கும்பகோணம், மன்னார்குடி, நீடாமங்கலம், திருவாரூர், நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளில் தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்தவர்களும், பல்வேறு விவசாய சங்கத்தினரும் சாலை மறியலில் ஈடுபட்டுக் கைதானார்கள்.

தஞ்சாவூர் புது ஆற்றுப்பாலம் பகுதியில் காவிரி உரிமை மீட்புக்குழுவினர் சாலைமறியல் போராட்டம் நடத்தினார்கள். இதில் உரையாற்றிய இதன் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் ``வேளாண் சட்டங்கள் தொடர்பாக, பிரதமர் மோடி நிறைய பொய் சொல்கிறார். `விவசாயிகள் தங்களது விளைபொருள்களை, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று விற்பனை செய்துகொள்ளலாம்’ என்கிறார். தற்போது கொண்டு வரப்பட்டிருக்கும் ஒப்பந்தச் சாகுபடி சட்டத்தின்படி, விவசாயிகள் எந்த நிறுவனத்தொடு ஒப்பந்தம் செய்து தங்கள் பொருள்களை உற்பத்தி செய்கிறார்களோ, அதே நிறுவனத்திடம்தான் விற்பனை செய்ய முடியும்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

இந்த மூன்று சட்டங்களிலும் எந்த ஒரு திருத்தமும் தேவையில்லை. இந்த மூன்று சட்டங்களையும் முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும். இதைத்தான் டெல்லியில் போராடும் விவசாயிகளும் வலியுறுத்துகிறார்கள். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, காவிரி உரிமை மீட்புக்குழுவின் சார்பில், டெல்டா மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் டிசம்பர் 12-ம் தேதி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தவிருக்கிறோம். இந்தச் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை, நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். தமிழ்நாட்டிலும் போராட்டம் தீவிரமடையும். இது ஓயாது” என்றார்.