Published:Updated:

``சுவாதி கொலை, ராம்குமார் தற்கொலை வழக்குகள்; மறுவிசாரணை வேண்டும்!” - தீண்டாமை ஒழிப்பு முன்னணி

ராம்குமார் குடும்பத்தினருடன்
News
ராம்குமார் குடும்பத்தினருடன்

``ஆரம்பத்திலிருந்தே சுவாதி கொலை வழக்கிலும், ராம்குமாரின் மரணத்திலும் பல சந்தேகங்கள் இருந்துவருகின்றன. சமீபத்தில் பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் தெரிவித்திருப்பதும் சந்தேகத்தை எழுப்புகிறது.”

Published:Updated:

``சுவாதி கொலை, ராம்குமார் தற்கொலை வழக்குகள்; மறுவிசாரணை வேண்டும்!” - தீண்டாமை ஒழிப்பு முன்னணி

``ஆரம்பத்திலிருந்தே சுவாதி கொலை வழக்கிலும், ராம்குமாரின் மரணத்திலும் பல சந்தேகங்கள் இருந்துவருகின்றன. சமீபத்தில் பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் தெரிவித்திருப்பதும் சந்தேகத்தை எழுப்புகிறது.”

ராம்குமார் குடும்பத்தினருடன்
News
ராம்குமார் குடும்பத்தினருடன்

கடந்த 2016- ம் ஆண்டில் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறையில் இருந்தபோது மரணமடந்த ராம்குமாரின் வழக்கை மறுவிசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று, தீண்டாமை ஒழிப்பு முன்னணி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.

ராம்குமார் குடும்பத்தினருடன்...
ராம்குமார் குடும்பத்தினருடன்...

இது சம்பந்தமாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சுவாதி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் சிறையிலேயே மின்சார வயரைக் கடித்து தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தெரிவித்திருந்தது. ஆனால், உண்மைகளை மூடிமறைக்கவே ராம்குமார் சிறையிலேயே கொலை செய்யப்பட்டதாக அப்போதே பலமான சந்தேகங்கள் எழுந்தன.

தற்போது ராம்குமார் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பிரேதத்தை ஆய்வு செய்த மருத்துவர், ராம்குமார் உடலில் மின்சாரம் தாக்கிய எந்தவோர் அடையாளமும் இல்லை என தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் தெரிவித்துள்ளார்.

சுவாதி
சுவாதி

இந்நிலையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் செல்லகண்ணு, பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ், மாநில துணைத் தலைவர் கிருஷ்ணன், ராம்குமாரின் வழக்கறிஞர் ராமராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் உள்ளிட்ட சி.பி.எம் நிர்வாகிகள் குழு் ராம்குமாரின் குடும்பத்தினரைச் சந்தித்தது.

ராம்குமாரின் பெற்றோர், அவருடைய சகோதரிகள், மைத்துனர் ஆகியோர் தங்களது மனக்குமுறல்களை குழுவினரிடம் வெளிப்படுத்தினர். அவர்கள் தெரிவித்த செய்திகள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன.

ராம்குமார் கைதுசெய்யப்பட்ட தினத்திலிருந்து அவர் தற்கொலை செய்துகொண்டதாக சொல்லப்பட்ட நாள் வரை குடும்பத்தார் அவரோடு பேசுவதற்கு அனுமதிக்கப்படவில்லை.

ராம்குமார்
ராம்குமார்

நீதித்துறையின் பாதுகாப்பில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார், பிணையில் வெளியில் வந்துவிடக் கூடாது, உண்மைகளைப் பேசிவிடக் கூடாது என்பதற்காகவும், சுவாதி கொலைக்கான உண்மைக் காரணம் வெளியில் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகவும் ராம்குமார் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என அவரின் பெற்றோர் உறுதியாகத் தெரிவிக்கிறார்கள்.

எனவே அவசரகதியில் சட்டத்துக்குப் புறம்பாக முடிக்கப்பட்ட சுவாதி கொலை வழக்கு, ராம்குமார் மரண வழக்குகளில் தமிழ்நாடு அரசு உடனடியாகத் தலையிட வேண்டும். வழக்குகள் மறுவிசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். மாநில குற்றப் புலனாய்வுத்துறையின் சிறப்புக்குழுவிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட வேண்டும் என்று, தீண்டாமை ஒழிப்பு முன்னணி தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொண்டிருக்கிறது" என்று தெரிவித்துள்ளனர்.

சாமுவேல்ராஜ்
சாமுவேல்ராஜ்

இது குறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜிடம் பேசினேன். "ஆம், ஆரம்பத்திலிருந்தே சுவாதி கொலை வழக்கிலும், ராம்குமாரின் மரணத்திலும் பல சந்தேகங்கள் இருந்துவருகின்றன. சமீபத்தில் பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் தெரிவித்திருப்பதும் சந்தேகத்தை எழுப்புகிறது. ராம்குமார் குடும்பத்தினரிடம் சந்தித்துப் பேசியதில் பல தகவல்களைக் கூறினார்கள். ராம்குமார் வழக்கை மறுவிசாரணை செய்ய அரசை வலியுறுத்தியதோடு, அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை எடுக்கவிருக்கிறோம்" என்றார்.