Published:Updated:

பத்து நாள்களுக்கு பக்கா பிளான் - வேலுமணி தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை ரெய்டு பின்னணி

வருமான வரித்துறை ரெய்டு
News
வருமான வரித்துறை ரெய்டு

கடந்த புதன் கிழமை சோதனையை தொடங்கும்போதே, இது நீண்ட ரெய்டு என டிப்பார்ட்மென்ட்டில் முடிவு செய்யப்பட்டுவிட்டதாம்.

Published:Updated:

பத்து நாள்களுக்கு பக்கா பிளான் - வேலுமணி தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை ரெய்டு பின்னணி

கடந்த புதன் கிழமை சோதனையை தொடங்கும்போதே, இது நீண்ட ரெய்டு என டிப்பார்ட்மென்ட்டில் முடிவு செய்யப்பட்டுவிட்டதாம்.

வருமான வரித்துறை ரெய்டு
News
வருமான வரித்துறை ரெய்டு

அதிமுக ஒற்றைத் தலைமை பஞ்சாயத்துக்கு மத்தியிலும், கடந்த ஆறு நாள்களாக வருமானவரித்துறை சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவரும், நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளருமான சந்திரசேகர் வீட்டில் கடந்த புதன்கிழமை வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர்.

வேலுமணியுடன் செந்தில் பிரபு சந்திரசேகர்
வேலுமணியுடன் செந்தில் பிரபு சந்திரசேகர்

தொடர்ந்து சந்திரசேகர் சகோதரர் அன்பு என்கிற செந்தில் பிரபு, தந்தை ராஜன், கே.சி.பி இன்ஜினியரிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சந்திரபிரகாஷ் ஆகியோர் சம்மந்தப்பட்ட இடங்களில் ஆறாவது நாளாக ரெய்டு தொடர்கிறது.

மேலும், வேலுமணி உதவியாளர் சந்தோஷ் என்பவரின் சகோதரர் வசந்தகுமார் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை செய்தனர். இவர் நமது அம்மா நாளிதழிலில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில செந்தில் பிரபு மற்றும் ராஜன் வீடுகளில் மீண்டும் சோதனை தொடர்கின்றனர்.

வருமானவரித்துறை ரெய்டு
வருமானவரித்துறை ரெய்டு

கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு மேல் சோதனை செய்வது வேலுமணி நெருங்கிய வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வருமானவரித்துறை மற்றும் காவல்துறை, கட்சிக்காரர்கள் என்று பலரிடம் பேசினோம்.

கடந்த புதன் கிழமை சோதனையை தொடங்கும்போதே, இது நீண்ட ரெய்டு என டிப்பார்ட்மென்ட்டில் முடிவு செய்யப்பட்டுவிட்டதாம். சென்ட்ரல் டீமில் இருந்து வந்துள்ள வருமானவரித்துறை அதிகாரிகள், பத்து நாள்களுக்கு தேவையான துணிகளுடன் அறை எடுத்துத் தங்கியுள்ளனர்.

சந்திரசேகர் வீடு
சந்திரசேகர் வீடு

இரவு, பகல் பாராமல் ரெய்டு தொடர்கிறது. சந்திரசேகருக்கு சொந்தமாக புலியகுளம் பகுதியில் உள்ள ஆலயம் அறக்கட்டளையில் அதிகாரிகள் கடந்த வாரம் ரெய்டு நடத்தி வந்தனர். ஆரம்பத்தில் பெரிதாக ஏதும் சிக்கவில்லை.

ரெய்டு நடக்கும்போது அங்கிருந்த ஊழியர்கள் சிலர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளனர். சந்தேகம் வந்து அவர்களிடம் கிடுக்குப்பிடி விசாரணையை தொடங்கினர். அதன்பிறகு அங்கிருந்து சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாம். அதன் பிறகு எல்லா இடங்களிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணையை நெருக்கியுள்ளனர்.

கே.சி.பி  அலுவலகம் நிறுவனம்
கே.சி.பி அலுவலகம் நிறுவனம்

கடுமையான கட்டுப்பாடுகளுடன் தீவிரமாக விசாரிக்க தொடங்கியுள்ளனர். முக்கியமாக, கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறையில் அதிகப் பணிகளை எடுத்த கே.சி.பி நிறுவனத்திடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சந்திரபிரகாஷிடம் அதிகாரிகள், தொடர்ந்து ஏராளமான கேள்விகளை எழுப்பினர். அதிகாரிகளின் கேள்விகளுக்கு சந்திரபிரகாஷ் பதில் அளிக்க முடியாமல் திணறினாராம். ஒருகட்டத்தில் முன்னுக்கு பின் முரணாகவும் பதில் அளித்திருக்கிறார்.

சந்திரபிரகாஷ்
சந்திரபிரகாஷ்

பிறகு அவருக்கு நெஞ்சு வலி ஏற்படுவதாக கூறியிருக்கிறார். பிறகு அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை முடிந்து, அவரிடம் மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளனர் அதிகாரிகள். கடந்தாண்டு லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டின்போதும் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

காலை முதல் இரவு வரை அதிகாரிகள், போலீஸ் சந்திரபிரகாஷை தொடர்ந்து கண்காணித்துக் கொண்ட இருக்கிறார்கள். உடன் கே.சி.பி ஊழியர்கள் இருவரும் இருக்கின்றனர். யார் போன் செய்தாலும் ஸ்பீக்கரில் ஆன் செய்து பேசச் சொல்கிறார்களாம். கோவையில் மட்டும் சுமார் 20 கார்களில் 50 அதிகாரிகள் ரெய்டுக்கு வந்துள்ளனர்.

சந்திரபிரகாஷ் வீடு உள்ள அப்பார்ட்மென்ட்
சந்திரபிரகாஷ் வீடு உள்ள அப்பார்ட்மென்ட்

ரெய்டு நடத்தும் இடம் குறித்து மிகவும் ரகசியம் காக்கிறார்கள். புகாருக்குள்ளானவர்களை தொடர்ந்து கண்காணிப்பதாலும், அதிமுக பஞ்சாயத்து ஓயததாலும் ரெய்டு மேலும் சில நாள்களுக்கு தொடர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.