Published:Updated:

'லண்டன் கூட்டத்தில் நிதி கேட்டேனா?' - சலசலப்புக்கு திருமாவளவன் பதில்

விகடன் டீம்

அவருக்கு எதிராக சிலர் கண்டனக் குரல் எழுப்பி, பிரச்னையில் ஈடுபட்டதாக சமூக வலைதளங்களில் காணொலிகள் பரவின.

திருமாவளவன்
திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், சமீபத்தில் லண்டனில் நடந்த 'அமைப்பாய் திரள்வோம்' என்ற அவரின் புத்தக திறனாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அதில், அவருக்கு எதிராக சிலர் கண்டனக் குரல் எழுப்பி, பிரச்னையில் ஈடுபட்டதாக சமூக வலைதளங்களில் காணொலிகள் பரவின. விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2MMoH3O

அதுகுறித்துப் பேசிய திருமாவளவன், "லண்டன் கூட்டத்தில் சலசலப்பு ஏற்படுத்திய இருவரும், தமிழகத்தில் ஈழ அரசியலை மையமாகக்கொண்ட கட்சியின் பின்னணி கொண்டவர்கள் என்கின்றனர். நான் எதற்காக காங்கிரஸுடன் கூட்டணி வைத்தேன் என அவர்கள் மிக மூர்க்கமாகக் கேட்டதாலேயே, அந்த உண்மையைச் சொல்ல நேரிட்டது.

லண்டன் கூட்டத்தில் நான் ஏதோ நிதி கேட்டதாக வதந்தி பரப்புகின்றனர்.

ஆம்... அண்ணன் பிரபாகரனின் ஆலோசனையின் பேரில்தான் நான் அப்போது காங்கிரஸ் கூட்டணியில் இணைந்தேன். லண்டன் கூட்டத்தில் நான் ஏதோ நிதி கேட்டதாக வதந்தி பரப்புகின்றனர். என்மீது சுமத்தப்படும் எத்தனையோ பழிகளில் இதுவு‌ம் ஒன்று என கடந்துசெல்கிறேன்" என்றார்.

முதல்வர் பழனிசாமி உற்சாகம்:

இதனிடையே, உற்சாகமாக வெளிநாடு கிளம்பியுள்ளார் முதல்வர் பழனிசாமி. ஜெ. பாணியில் பிரமாண்ட வரவேற்பு, காலில் விழும் வைபவம் என எடப்பாடியைக் குளிரவைத்துவிட்டனர். எடப்பாடியுடன் அவருடைய செயலாளர்கள் நான்கு பேருமே சென்றுள்ளனர். அமைச்சர்களில் விஜயபாஸ்கர் மட்டுமே சென்றுள்ளார். ஆகஸ்ட் 31-ம் தேதி அமெரிக்காவுக்கு ஒரு டீம் செல்கிறது. அதில்தான் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் செல்கின்றனர். லண்டனில் வேஷ்டி-சட்டைக்கு குட்பை சொல்லிவிட்டு, கோட்-சூட்டுடன் வலம் வருகிறார் எடப்பாடி.

 Edappadi K Palaniswami  London visit
Edappadi K Palaniswami London visit

லண்டனில் சர்ச்சைக்குரிய முக்கிய தொழிலதிபர் ஒருவரை எடப்பாடி தனியாகச் சந்திக்கும் திட்டத்தில் இருக்கிறாராம். அப்படியொரு சந்திப்பு நடந்தால், அதை அம்பலப்படுத்த தி.மு.க தரப்பும் உளவுபார்த்து வருகிறது. முதல்வரின் பயணத்திட்டத்தில் முதலில் துபாய் இடம்பெறவில்லை. ஆனால், கடைசியாக அந்த நாடும் இடம்பெற்றுள்ளது.

தி.மு.க எம்.பி-க்களுக்கு ஸ்டாலின் சொன்ன 'சிறப்பு' அட்வைஸ், எடப்பாடியின் வெளிநாட்டுப் பயணம் மீதான ஸ்டாலினின் கடுமையான விமர்சனம் எதிரொலி, ஸ்டாலின் எதிர்பாராத வகையில் கராத்தே தியாகராஜன் ரியாக்ட் செய்ததன் பின்னணி, ப.சிதம்பரம் அப்டேட்ஸ் உள்ளிட்ட உள்விவகாரத் தகவல்களைத் தந்துள்ள ஜூனியர் விகடன் மிஸ்டர் கழுகு பகுதியை முழுமையாக வாசிக்க > மிஸ்டர் கழுகு: கராத்தே வீசிய அஸ்திரம்... ஆடிப்போன ஸ்டாலின்! https://www.vikatan.com/government-and-politics/mr-kazhugu-politics-and-current-affairs-mkstalin