Published:Updated:

தாராபுரம்: "தொப்பியைக் கழற்றிவிடுவேன் ஜாக்கிரதை...'' - பெண் ஆய்வாளரை மிரட்டிய திமுக பிரமுகர்

வாக்குவாதம்
News
வாக்குவாதம்

``கொளத்துப்பாளையம் பேரூராட்சி தி.மு.க செயலாளர் மீசை துரைசாமி, காவலர்களிடம் ஒருமையில் பேசினார்.'' - ஆய்வாளர் செல்லம்

Published:Updated:

தாராபுரம்: "தொப்பியைக் கழற்றிவிடுவேன் ஜாக்கிரதை...'' - பெண் ஆய்வாளரை மிரட்டிய திமுக பிரமுகர்

``கொளத்துப்பாளையம் பேரூராட்சி தி.மு.க செயலாளர் மீசை துரைசாமி, காவலர்களிடம் ஒருமையில் பேசினார்.'' - ஆய்வாளர் செல்லம்

வாக்குவாதம்
News
வாக்குவாதம்

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மே 6-ம் தேதி போக்சோ வழக்கு தொடர்பாக ஆய்வாளர் செல்லத்துக்கும், கொளத்துப்பாளையம் பேரூராட்சி தி.மு.க செயலாளரான மீசை துரைசாமி என்பவருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. தற்போது இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வீடியோவில் ஆய்வாளர் செல்லத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் மீசை துரைசாமி, `நான் யாரென்று தெரியுமா... தொப்பியைக் கழற்றி விடுவேன் ஜாக்கிரதை' என்று மிரட்டும் தொனியில் பேசுகிறார். அதற்கு ஆய்வாளர் செல்லம், `உன்னால் முடிந்தால், என் வேலையை காலி செய்" என்று கூறுகிறார்.

ஆய்வாளர் செல்லம்
ஆய்வாளர் செல்லம்

இது தொடர்பாக நம்மிடம் பேசிய காவல் ஆய்வாளர் செல்லம்," போக்சோ வழக்கில் கைதான நான்கு பேரில் இருவர் சிறுவர்கள் என்பதால், போக்சோ சட்டப்படி காவல் உடையில் சிறார்களை விசாரிக்காமல், சிவில் உடையில் விசாரித்துக்கொண்டிருந்தேன்.

அப்போது, அங்கு வந்த கொளத்துப்பாளையம் பேரூராட்சி தி.மு.க செயலாளர் மீசை துரைசாமி, காவலர்களிடம் ஒருமையில் பேசினார். நீதிமன்ற உத்தரவுப்படி, போக்சோ வழக்கில் தொடர்புடையவர்களுக்கு ஆதரவாக மகளிர் காவல் நிலையத்துக்குள் வருவதே சட்டப்படி குற்றம்.

அதிலும், காவலர்களை ஒருமையில் பேசியதால் அவரைக் கண்டித்தேன். அப்போது, என்னையும் அவர் ஒருமையில் பேசியதால், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உயரதிகாரிகளின் அறிவுறுத்தல் காரணமாக, மீசை துரைசாமி மீது புகாரளிக்கவில்லை. என்னைத் தொந்தரவு செய்தால் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை" என்றார்.

மீசை துரைசாமி
மீசை துரைசாமி

இதையடுத்து, மீசை துரைசாமியிடம் பேசும்போது,"சிறுவர்கள் மீது எந்தப் பிரிவின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது என்பதை அறியதான் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குச் சென்றேன். அங்கு பணியில் இருந்த, எனக்குத் தெரிந்த பெண் காவலரை உரிமையில் பேசினேன்.

அதற்கு ஆய்வாளர் செல்லம் என்னை ஒருமையில் திட்டியதுடன், வெளியே செல்லுமாறு கூறினார். இதனால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், `தொப்பியைக் கழற்றிவிடுவேன்’ என்று ஆத்திரத்தில் கூறினேன். என் மீது தவறு என்றால் வழக்கு பதிவுசெய்திருக்கலாமே... ஏன் இன்னும் வழக்கு பதிவுசெய்யவில்லை" என்றார்.