Published:Updated:

ரயிலைத் தவறவிட்டால், அந்தப் பயணத்திற்கான பணத்தைத் திரும்பப் பெற முடியுமா?| Doubt of Common Man

ரயில்
News
ரயில்

நாம் தவறவிட்ட ரயில் டிக்கெட்டுக்கான தொகையைத் திரும்பப் பெற முடியுமா, அல்லது நாம் எடுத்த டிக்கெட்டை வைத்து அதே தடத்தில் வேறு ரயிலில் பயணம் செய்ய முடியுமா என்பது குறித்த சந்தேகம் நமக்கு எப்போதும் இருந்துகொண்டே தான் இருக்கிறது.

Published:Updated:

ரயிலைத் தவறவிட்டால், அந்தப் பயணத்திற்கான பணத்தைத் திரும்பப் பெற முடியுமா?| Doubt of Common Man

நாம் தவறவிட்ட ரயில் டிக்கெட்டுக்கான தொகையைத் திரும்பப் பெற முடியுமா, அல்லது நாம் எடுத்த டிக்கெட்டை வைத்து அதே தடத்தில் வேறு ரயிலில் பயணம் செய்ய முடியுமா என்பது குறித்த சந்தேகம் நமக்கு எப்போதும் இருந்துகொண்டே தான் இருக்கிறது.

ரயில்
News
ரயில்
விகடனின் 'Doubt of common man' பக்கத்தில் தினேஷ் என்ற வாசகர், "ஒரு ரயிலில் டிக்கெட் எடுத்த பிறகு ஏதேனும் காரணத்தினால் அந்த ரயிலை தவற விட்டால் அடுத்த ரயிலில் அந்த டிக்கெட் மூலமாகப் பயணம் செய்ய வழி உள்ளதா, அல்லது பணத்தைத் திரும்பப் பெற வழி உள்ளதா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே.
Doubt of common man
Doubt of common man

இந்தியாவில் பொது போக்குவரத்தில் வெகுதூரம் பயணம் செய்வதற்கும், குறைந்த செலவில் பயணம் செய்வதற்கும் மக்கள் தேர்ந்தெடுக்கும் முதன்மையான சேவையாக ரயில் சேவை இருக்கிறது. இந்தியாவின் அனைத்து மூலைகளிலும் ரயில் சேவை பரந்து விரிந்திருக்கிறது. ரயில் சேவையைப் பொறுத்தவரையில் பலதரப்பட்ட வசதிகள் இருப்பதால், மக்கள் பெரிதும் விரும்பும் பொது போக்குவரத்துக்காக உள்ளது. ரயில் பயணங்களில் அவ்வப்போது ரயிலைத் தவறவிடும் சூழ்நிலை பெரும்பாலும் ஏதாவது ஒரு தருணத்தில் நம் அனைவருக்கும் நிகழ்ந்திருக்கும். அத்தகைய சூழலில் வேறு ஒரு ரயில் டிக்கெட் எடுத்துப் பயணம் செய்துவிடுவோம். ஆனால், நாம் தவறவிட்ட ரயில் டிக்கெட்டுக்கான தொகையைத் திரும்பப் பெற முடியுமா, அல்லது நாம் எடுத்த டிக்கெட்டை வைத்து அதே தடத்தில் வேறு ரயிலில் பயணம் செய்ய முடியுமா என்பது குறித்த சந்தேகம் நமக்கு எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. நம்முடைய வாசகர் ஒருவருக்கும் இது குறித்த சந்தேகம் எழுந்திருக்கிறது. அதனை மேற்கூறிய கேள்வியாக நமது 'Doubt of common man' பக்கத்தில் கேட்டிருந்தார்.

ரயில்
ரயில்

நம் வாசகரின் கேள்விக்கான பதிலைத் தெரிந்து கொள்ள Railway season ticket holder's association - னின் President தீனதயாளனிடம் இது குறித்துக் கேட்டோம். அவர், "ஒரு ரயிலில் பயணம் செல்வதற்கு என டிக்கெட் எடுத்தபிறகு, கண்டிப்பாக அந்த டிக்கெட்டைக் கொண்டு அந்தக் குறிப்பிட்ட ரயிலில் மட்டுமே பயணம் செய்ய முடியும். ஏதோவொரு காரணத்தால் நாம் செல்ல வேண்டிய குறிப்பிட்ட ரயிலைத் தவறவிடும் பட்சத்தில், அதே வழியில் செல்லும் வேறு ரயிலில் நம்மால் பயணிக்க முடியாது. ஒரு வேலை முன்பதிவு செய்திருக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட நாட்களுக்குள் கேன்சல் செய்தால் இத்தனை சதவிகிதம் எனக் குறிப்பிட்டு உள்ளதன்படி , நீங்கள் முன்பதிவு செய்து கேன்சல் செய்யும் நாட்களைப் பொறுத்து தொகையைப் பிடித்தம் செய்துகொண்டு உங்களுக்கு மீதமுள்ள தொகையை திருப்பி அளிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. அதுவும் கடைசி நேரத்தில் கேன்சல் செய்தீர்கள் என்றால் முழு தொகையும் ரயில்வே நிர்வாகத்திற்குச் சென்றுவிடும். எந்த காரணத்திற்காகவும், நீங்கள் ரயிலில் பயணிப்பதற்காகச் செலுத்திய தொகை திரும்பப் பெறுவதற்கான சாத்திய கூறுகள் இல்லை." என்றார்.

IRCTC இணையதளம்
IRCTC இணையதளம்

மின்னணுப் பரிவர்த்தனை மூலம் ரயில் டிக்கெட்டைப் முன்பதிவு செய்தவர்கள் எவ்வளவு மணி நேரத்திற்குள் டிக்கெட்டைக் கேன்சல் செய்தால், எவ்வளவு பணம் பிடித்தம் செய்யப்படும் என்பது IRCTC இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதனைத் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும். டிக்கெட்டைக் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் கேன்சல் செய்தாலே தவிர, ரயிலைத் தவறவிட்டால், வேறு ரயிலிலும் பயணம் செய்ய முடியாது, டிக்கெட்டுக்கான பணத்தையும் திரும்பப் பெற முடியாது.

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!

Doubt of common man
Doubt of common man