Published:Updated:

18 வயதுக்குக் கீழ் இருப்பவர்கள் தங்களின் வருமானத்திற்கு வரி கட்டவேண்டுமா? | Doubt of Common Man

Income Tax
News
Income Tax

"18 வயதுக்குக் கீழ் இருப்பவர்கள் தங்களின் வருமானத்திற்கு வரி கட்ட வேண்டுமா?" என்ற கேள்வியை நமது வாசகர் டவுட் ஆஃப் காமன் மேன் பகுதியில் கேட்டிருந்தார்.

Published:Updated:

18 வயதுக்குக் கீழ் இருப்பவர்கள் தங்களின் வருமானத்திற்கு வரி கட்டவேண்டுமா? | Doubt of Common Man

"18 வயதுக்குக் கீழ் இருப்பவர்கள் தங்களின் வருமானத்திற்கு வரி கட்ட வேண்டுமா?" என்ற கேள்வியை நமது வாசகர் டவுட் ஆஃப் காமன் மேன் பகுதியில் கேட்டிருந்தார்.

Income Tax
News
Income Tax
விகடனின் 'Doubt of Common Man' பக்கத்தில் சத்யா என்ற வாசகர், "18 வயதுக்குக் கீழ் இருப்பவர்கள் தங்களின் வருமானத்திற்கு வரி கட்ட வேண்டுமா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே!
doubt of common man
doubt of common man

18 வயதுக்குக் கீழ் இருப்பவர்கள் தங்களின் வருமானத்திற்கு வரி கட்ட வேண்டும் என்ற கேள்வியை நமது வாசகர் டவுட் ஆஃப் காமன் மேன் பகுதியில் கேட்டிருந்தார். அவரின் கேள்விக்கான விடையைத் தெரிந்து கொள்வதற்காகப் பொருளாதார நிபுணர் நாகப்பன் அவர்களிடம் இது குறித்துக் கேட்டோம்.

அவர் கூறியதாவது, "18 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கான வருமானம் என்பதை அவர்களின் வங்கிக் கணக்கு அல்லது அவர்கள் பெயரில் பெற்றோர்கள் செய்து வைத்திருக்கும் பிக்ஸட் டெப்பாசிட் அல்லது வேறு ஏதாவது முதலீடுகள் என எடுத்துக் கொள்ளலாம். அப்படி 18 வயதுக்கும் கீழ் இருப்பவர்கள் பெரும் வருமானத்தை, அவரின் பெற்றோருடைய வருமானத்துடன் இணைத்து அதற்குண்டான வருமான வரியைக் கட்ட வேண்டும். இதற்கு ஆங்கிலத்தில் Clubbing Provision என்று கூறுவார்கள்.

Income Tax
Income Tax

Clubbing Provision-ன் படி 18 வயதுக்குக் கீழ் இருப்பவரின் வருமானத்தைப் பெற்றோர்களில் தாய் அல்லது தந்தை ஆகியவருடைய வருமானங்களில் யாருடைய வருமானம் அதிகமாக இருக்கிறதோ, அவருடைய வருமானத்துடன் இணைத்து வருமான வரியைக் கட்ட வேண்டும்" என்றார்.

மத்திய அரசின் வருமான வரித்துறை இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள பிரிவு 64(1A)-வின் படி விவாகரத்து செய்யப்பட்ட பெற்றோர் என்றால், அவர் யாருடைய கண்காணிப்பின்கீழ் இருக்கிறார்களோ அவருடைய வருமானத்துடன் சேர்த்து வருமான வரி கட்ட வேண்டும்.

income tax department
income tax department

பெற்றோர்கள் இல்லை, பாதுகாவலரின் கண்காணிப்பில் இருப்பவர் என்றால், அவருடைய வருமான வரியைத் தனியாகவே தாக்கல் செய்ய வேண்டும். பாதுகாவலரின் வருமானத்துடன் இணைத்துத் தாக்கல் செய்யக் கூடாது. மேலும், 18 வயதுக்கும் கீழ் இருக்கும் நபர் உடல் ஊனமுற்றவர் என்றால் பிரிவு 80U-வின் கீழ் வருமான வரி விலக்கு உண்டு. அவருடைய வருமானத்தைப் பெற்றோர்களின் வருமானத்துடன் இணைத்து வரி கட்ட வேண்டிய அவசியம் இல்லை.

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்கள்!

doubt of common man
doubt of common man