Published:Updated:

நிரந்தர மாற்றுத்திறன் உள்ளவர்கள் ஒவ்வொரு முறையும் 80U பெறுவது அவசியமா? | Doubt of Common Man

80U
News
80U

மாற்றுத் திறனாளிகள் தங்களுக்குரிய வரிச்சலுகைகள் பெற பிரிவு 80U கீழ் சில சான்றிதழ்களைப் பெற்றிருக்க வேண்டும்.

Published:Updated:

நிரந்தர மாற்றுத்திறன் உள்ளவர்கள் ஒவ்வொரு முறையும் 80U பெறுவது அவசியமா? | Doubt of Common Man

மாற்றுத் திறனாளிகள் தங்களுக்குரிய வரிச்சலுகைகள் பெற பிரிவு 80U கீழ் சில சான்றிதழ்களைப் பெற்றிருக்க வேண்டும்.

80U
News
80U
விகடனின் 'Doubt of Common Man' பக்கத்தில் ப்ரியா என்ற வாசகர், "நிரந்தர மாற்றுத்திறன் உடன் இருக்கும் மாற்றுத்திறனாளி வருமானம் வரி தாக்கல் செய்யும்போது ஒவ்வொரு முறையும் மருத்துவரை சந்தித்து 80U பெறுவது அவசியமா? மாற்றுத்திறனாளி அடையாள அட்டை போதுமானது இல்லையா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே!
doubt of common man
doubt of common man

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சில பிரிவுகளின் கீழ் வரிச்சலுகை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவச் செலவு, பராமரிப்புச் செலவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த வரிச்சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மாற்றுத் திறனாளிகள் தங்களுக்குரிய வரிச்சலுகைகள் பெற பிரிவு 80U கீழ் சில சான்றிதழ்களைப் பெற்றிருக்க வேண்டும். நமது வாசகர் ஒருவருக்கு இந்தச் சான்றிதழ் குறித்த கேள்வி ஒன்று இருந்திருக்கிறது. அதனை மேற்கூறிய கேள்வியாக நமது 'டவுட் ஆஃப் காமன் மேன்' பக்கத்தில் கேட்டிருந்தார்.

மாற்றுத் திறனாளிகள் சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்
மாற்றுத் திறனாளிகள் சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்

நமது வாசகருக்கான பதிலை அறிந்து கொள்ளும் பொருட்டு மாற்றுத் திறனாளிகள் நலச் சங்கத்தில் இருந்து, தீபக் அவர்களிடம் பேசினோம், "80U பிரிவு உடல் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் வரிச்சலுகை, 80DD அவர்களைக் கவனித்துக்கொள்ளும் உறவினர்களுக்கு வழங்கப்படும் வரிச்சலுகை. இவை தவிர மருத்துவச் செலவுகளுக்கு 80DDB-யின் கீழ் வரிச்சலுகை பெறலாம்.

தீபக்
தீபக்

80U தனிநபரின் மாற்றுத்திறன் சார்ந்தது. 80DD மாற்றுத் திறனாளி நபரைப் பராமரிக்கும் அம்மா, மனைவி, குழந்தைகள் போன்ற குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவது. ஒரு குறிப்பிட்ட நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர் அதன் மருத்துவ செலவுகளைக் கருத்தில் கொண்டு 80DDB வழங்கப்படுகிறது.

வாசகர் கேட்டது போல இந்த வரிச் சலுகைகளைப் பெற ஒவ்வொரு முறையும் மருத்துவரைச் சந்தித்து சான்றிதழ்களை வாங்க வேண்டியுள்ளது. நிரந்தர நோய் உள்ளவர்கள் அல்லது நிரந்தர மாற்றுத்திறனாளிகளும் ஆண்டுக்கு ஒரு முறை சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. 80U விலக்கு பெற நானே நேரில் செல்லும்போதும் கூட சான்றிதழ் கேட்கப்படுகிறது" எனக் கூறினார்.

இதேபோல உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்கள்!

doubt of common man
doubt of common man