Published:Updated:

பழங்காலப் பொருள்களை வைத்துக் கொள்வதற்கு யாரிடம் அனுமதி பெற வேண்டும்? | Doubt of Common Man

நாணய சேகரிப்பு
News
நாணய சேகரிப்பு

பலரும் ஆர்வத்தில் ஒரிஜினலா அல்லது டுப்ளிகேட்டா என்பதை அறியாமல் அதிக விலை கொடுத்து போலி நாணயங்களை வாங்கி விடும் ஆபத்தும் இருக்கிறது.

Published:Updated:

பழங்காலப் பொருள்களை வைத்துக் கொள்வதற்கு யாரிடம் அனுமதி பெற வேண்டும்? | Doubt of Common Man

பலரும் ஆர்வத்தில் ஒரிஜினலா அல்லது டுப்ளிகேட்டா என்பதை அறியாமல் அதிக விலை கொடுத்து போலி நாணயங்களை வாங்கி விடும் ஆபத்தும் இருக்கிறது.

நாணய சேகரிப்பு
News
நாணய சேகரிப்பு
விகடனின் 'Doubt of Common Man' பக்கத்தில் நடராஜ் என்ற வாசகர், "பழங்கால நாணயங்கள் மற்றும் பொருள்களின் வயதைத் தெரிந்து கொள்வதற்கு யாரை அல்லது எந்தத் துறையை அணுக வேண்டும்? பழங்காலப் பொருள்களை வைத்துக் கொள்வதற்கு யாரிடம் அனுமதி பெற வேண்டும்?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே!
doubt of common man
doubt of common man

மாறிவரும் உலகில், வளர்ச்சியை மட்டும் தேடாமல், வரலாற்றையும் தேடுவதில் மக்களுக்கு ஆர்வம் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. வரலாற்றைத் தேடும் மக்கள் தேடுவதோடு மட்டுமல்லாமல் வரலாற்றைச் சேகரிக்கவும் செய்கின்றனர். பழங்கால நாணயங்களில் ஆரம்பித்து, தீப்பெட்டி லேபிள்கள், ஸ்டாம்புகள், பேனாக்கள் எனப் பல பொருள்களையும் சேகரிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். பழங்கால பொருள்களைச் சேகரிப்பது தொடர்பாக நமது வாசகர் ஒருவருக்கும் சந்தேகம் ஒன்று எழுந்திருக்கிறது. அதனை மேற்கூறிய கேள்வியாக நமது டவுட் ஆஃப் காமன் மேன் பக்கத்தில் கேட்டிருந்தார்.

பழங்காலப் பொருள்கள்
பழங்காலப் பொருள்கள்

வாசகரின் கேள்விக்கான பதிலை அறிந்துகொள்ளும் பொருட்டு பழங்கால நாணய சேகரிப்பாளரான ராஜராஜன் அவர்களிடம் பேசினோம், "பழங்கால நாணயங்களைச் சேகரிப்பது பொறுத்தவரை, அனுமதி பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் மதுரை, சென்னை போன்ற நகரங்களில் உள்ள பழங்கால நாணயங்களுக்கு என உள்ள கிளப்பில் தங்களைப் பதிவு செய்து கொண்டால் நல்லது. இது கட்டாயமில்லை. ஆனால், பழங்கால நாணயங்களைச் சேகரிக்கும் பலரும் அந்த கிளப்பில் உறுப்பினர்களாக இருப்பார்கள். இதுபோன்ற கிளப்புகளில் சேர்வதன் மூலம் புதிதாக நாணயங்களைச் சேகரிக்க விரும்புபவர்கள் பல காலகட்டங்களைச் சேர்ந்த நாணயங்களைப் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்ள முடியும்.

பழங்கால  நாணய சேகரிப்பாளரான ராஜராஜன்
பழங்கால நாணய சேகரிப்பாளரான ராஜராஜன்

அதுமட்டுமில்லாமல், பலரும் ஆர்வத்தில் ஒரிஜினலா அல்லது டுப்ளிகேட்டா என்பதை அறியாமல் அதிக விலை கொடுத்து போலி நாணயங்களை வாங்கிவிடும் ஆபத்தும் இருக்கிறது. நாணயங்களின் காலகட்டங்களை அறிய நமக்கு அந்தத் துறையில் பெரும் அனுபவம் தேவைப்படும். அப்படியான அனுபவம் பெறுவதற்கு இது போன்ற பழங்கால நாணய கிளப்கள் உதவும். மற்ற பழங்கால பொருள்களைப் பொறுத்தவரை இதுபோன்ற கிளப்கள் பெரிதாக இல்லை. ஆனாலும் நாம் சுயமாக அதனைப் பற்றித் தெரிந்து கொண்டு சேகரிக்கலாம். பழங்காலப் பொருள்களைப் பற்றிய கூடுதல் விவரங்களை அருகிலுள்ள வரலாற்று பேராசிரியர்கள் மற்றும் இதுபோன்று பழங்கால பொருள்களைச் சேகரிப்பவர்கள் என நாம் தேடிச் சென்றுதான் கற்றுக்கொள்ள முடியும். அதே துறையில் நீண்ட காலம் இருக்கும் போது, அனுபவத்தின் மூலமும் கற்றுக் கொள்ள முடியும்.

ஒரு வேளை பூமியைத் தோண்டும்போதோ அல்லது எதேச்சையாகவோ நமக்கு ஒரு பழங்காலப் பொருள் கிடைத்தால், அது ஓர் அடிக்கும் குறைவான அளவில் இருக்கும் பட்சத்தில், நாம் அதை வைத்துக் கொள்ளலாம். ஆனால், ஓர் அடிக்கும் அதிகமான அளவில் இருந்தால், நம்மால் அதனை வைத்துக்கொள்ள முடியாது. அதனை அரசிடம் ஒப்படைத்தே ஆக வேண்டும். அது மண், மரம், செம்பு, தங்கம், வெள்ளி, தகடு என எதில் உருவாக்கப்பட்டிருந்தாலும் நாம் அதனை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் நமது முன்னோர்களால் பல நூற்றாண்டுகளாக நமது வீட்டில் பாதுகாத்து வரும் பொருள்களுக்கு விதிவிலக்கு உண்டு.

பழங்கால நாணயங்கள்
பழங்கால நாணயங்கள்

அதாவது நம் முன்னோர்கள் நமது வீட்டில் வைத்துப் பாதுகாத்து வந்த பொருள்களை, நாம் பாதுகாப்பாக நம்முடைய பராமரிப்பில் வைத்துக்கொள்ள முடியும். ஒருவேளை அவற்றைப் பராமரிக்க முடியவில்லை என்றால் அருகில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் கொடுத்து அதனைப் பராமரிக்கச் சொல்லலாம். அங்கு நம்முடைய பெயரில் அந்தப் பழங்காலப் பொருள் பதிவு செய்யப்பட்டு பராமரிக்கப்படும். இவை தவிரப் புதிதாகக் கண்டுபிடிக்கப்படும் ஓர் அடி அளவிற்கும் மேலான மற்றும் தங்கம், வெள்ளி முதலிய விலையுயர்ந்த பொருள்கள் எவற்றையும் நம்மால் வைத்துக்கொள்ள முடியாது." எனக் கூறி முடித்தார்.

இதேபோல உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்கள்!

doubt of common man
doubt of common man