Published:Updated:

ஆதாரில் பெயர் திருத்தம் செய்வது எப்படி? | Doubt of Common Man

ஆதார் கார்டு
News
ஆதார் கார்டு

ஆதார் கார்டை முடிந்தளவு பிழை நீக்கம் செய்து அவ்வப்போது அப்டேட் செய்து வைத்துக் கொள்வது நல்லது.

Published:Updated:

ஆதாரில் பெயர் திருத்தம் செய்வது எப்படி? | Doubt of Common Man

ஆதார் கார்டை முடிந்தளவு பிழை நீக்கம் செய்து அவ்வப்போது அப்டேட் செய்து வைத்துக் கொள்வது நல்லது.

ஆதார் கார்டு
News
ஆதார் கார்டு
விகடனின் 'Doubt of common man' பக்கத்தில் சண்முகவேல் என்ற வாசகர், "ஆதாரில் பெயர்த் திருத்தம் செய்வது எப்படி?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே.
Doubt of common man
Doubt of common man

ஆதார் தொடர்பான கேள்விகளும் சந்தேகங்களும் எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. ஆதார் தான் அரசின் அனைத்து சேவைகளுக்குமான ஒற்றை ஆவணமாகக் கருதப்படுவதால் அதில் பிழைகள் இருந்தால் அது நாம் அரசு சேவைகளைப் பெறுவதையும் பாதிக்கிறது. மேலும், ஆதாரானது தனிப்பட்ட முறையில் மட்டும் பயன்படுத்தப்படாமல், நம்முடைய வங்கிக்கணக்கு, பாண் கார்டு என நாம் தினசரி வாழ்வில் பயன்படுத்தக்கூடிய அத்தனை முக்கிய ஆவணங்களுடனும் இணைக்கப்பட்டிருக்கிறது. எனவே, ஆதார் கார்டை முடிந்தளவு பிழை நீக்கம் செய்து அவ்வப்போது அப்டேட் செய்து வைத்துக் கொள்வது நல்லது. நம் வாசகர் ஒருவருக்கு ஆதார் கார்டில் பெயர்த் திருத்தம் செய்வது எப்படி என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. அதனை மேற்கூறிய கேள்வியாக நமது டவுட் ஆஃப் காமன் மேன் பக்கத்தில் கேட்டிருந்தார்.

ஆதார்
ஆதார்

ஆதாரில் நம்முடைய பெயர் திருத்தத்தை இரண்டு விதமாகப் பிரித்துக் கொள்ளலாம். சின்ன சின்ன எழுத்துப்பிழைகள் ஒரு வகை, பெயரே மாறியிருக்கிறது, தவறாக இருக்கிறது அல்லது பெயரில் கொஞ்சம் பெரிய அளவில் மாற்றம் செய்ய வேண்டும் என்பது இரண்டாவது வகை. ஒன்று அல்லது இரண்டு எழுத்துக்கள் தான் பிழையாக இருக்கிறது என்றால் ஆதார் இணையதளம் மூலமாகவே நாம் திருத்தம் செய்து கொள்ள முடியும். இரண்டாவது வகை என்றால் நேரடியாக ஆதார் மையத்திற்குச் சென்று தான் பெயர்த் திருத்தம் செய்ய வேண்டும். எழுத்துப் பிழையைத் திருத்திக் கொள்வதற்கும் ஆதார் மையத்தை நேரடியாக அணுகலாம்.

இணையதளம் மூலமாக எழுத்துப்பிழைத் திருத்தம்:

முதல் வகையில் திருத்தம் செய்வதற்கு முதலில் ஆதார் இணையதளப் பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.

அதன் பிறகு தோன்றும் பக்கத்தில் My Aadhaar என்பதைக் க்ளிக் செய்து Update Demographic Data & Status Check என்பதனைக் க்ளிக் செய்ய வேண்டும்.

ஆதார் இணையதளப் பக்கம்
ஆதார் இணையதளப் பக்கம்

அதன் பிறகு உங்கள் ஆதார் எண், திரையில் தோன்றும் கேப்சா மற்றும் நம்முடைய ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்ணுக்கு வரும் OTP ஆகியவற்றைக் கொடுத்து நம்முடைய ஆதார் கணக்கில் Log In செய்துகொள்ள வேண்டும்.

அதன் பிறகு தோன்றும் பக்கத்தில் மூன்றாவது ஆப்ஷனாக Update Aadhaar Online என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். அதனைக் க்ளிக் செய்ய வேண்டும்.

ஆதார் இணையதளப் பக்கம்
ஆதார் இணையதளப் பக்கம்

அதனைத் தொடர்ந்து 'திருத்தம் செய்ய வேண்டிய' இடத்தில் 'பெயர்'-த் தேர்ந்தெடுத்து Proceed to Aadhaar update என்பதனைக் கிளிக் செய்ய வேண்டும்.

அதன் பிறகு தோன்றும் பக்கத்தில் நம்முடைய பெயரைப் பிழையில்லாமல் பதிவு செய்து, அதற்குரிய ஆவணத்தையும் சமர்ப்பிக்க வேண்டும். (என்னென்ன ஆவணங்களைச் சமர்ப்பிக்கலாம் எனப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்)

அதன் பிறகு பெயரைச் சரியாகப் பதிவு செய்திருக்கிறோமா எனச் சரிபார்த்து, 50 ரூபாயைக் கட்டணமாக ஆன்லைன் வாயிலாகச் செலுத்த வேண்டும்.

ஆதார் மையத்தில் பெயர் திருத்தம் செய்வதற்கு:

சிறிய பிழைத்திருத்தமாக இல்லாமல் பெயரே மாறியிருக்கும் சூழலில் நேரடியாக ஆதார் மையத்திற்குச் சென்று தான் பெயர் திருத்தம் செய்ய வேண்டியிருக்கும். முதலில் அருகில் இருக்கும் ஆதார் மையத்திற்குச் சென்று, அங்கிருக்கும் அதிகாரியிடம் பெயர் திருத்தம் செய்வதற்கான செயல்முறையைக் கேட்டு அதன்படி பெயர் திருத்தம் செய்து கொள்ளலாம். ஆனால், செல்லும் போது பெயர் திருத்திற்குத் தேவையான ஆவணங்களை உடன் எடுத்துச் செல்ல வேண்டும். பொதுவாகப் பெயர் திருத்தத்திற்கு பாண் கார்டு, டிரைவிங் லைசன்ஸ், பாஸ்போர்ட் உள்ளிட்ட நம்முடைய பெயர் மற்றும் புகைப்படத்தைக் கொண்ட அரசு அங்கீகரித்த எந்தவொரு ஆவணத்தையும் கொண்டு செல்லலாம். (என்னென்ன ஆவணங்களைக் கொண்டு செல்லலாம் எனத் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்). மேலும் பெயர் திருத்தம் செய்வதற்கான கட்டணமாக 50 ரூபாயும் ஆதார் மையத்தில் செலுத்த வேண்டியிருக்கும்.

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!

Doubt of common man
Doubt of common man