Published:Updated:

கொரோனா கருணைத்தொகையைப் பெற எங்கு விண்ணப்பிக்க வேண்டும்? | Doubt of Common Man

கொரோனா
News
கொரோனா

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.50,000 கருணைத்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்தது

Published:Updated:

கொரோனா கருணைத்தொகையைப் பெற எங்கு விண்ணப்பிக்க வேண்டும்? | Doubt of Common Man

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.50,000 கருணைத்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்தது

கொரோனா
News
கொரோனா
விகடனின் 'Doubt of Common Man' பக்கத்தில் சுதா என்ற வாசகி, "அரசு அளிக்கும் கொரோனா கருணைத்தொகையைப் பெற எங்கு விண்ணப்பிக்க வேண்டும்?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே.
Doubt of common man
Doubt of common man

பலநூறு பேரின் உயிரைப் பறித்துச் சென்றிருக்கிறது கொரோனா. தாயை, தந்தையை, பிள்ளையை, கணவனை, மனைவியை என உறவுகளை இழந்து மீளமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கின்றன பல குடும்பங்கள். இந்தக் குடும்பங்களை மீட்கும் வகையில் நிவாரணம் வழங்கவேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. அந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், "பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி, பேரிடரில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் குறைந்தபட்ச நிவாரணம் வழங்க வேண்டியது கட்டாயம்" என்று மத்திய அரசுக்கு சுட்டிக்காட்டியிருந்தது.

இதுதொடர்பாக ஆய்வு செய்த தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம், அரசுக்கு சில பரிந்துரைகளை அளித்தது. அதை நீதிமன்றத்தில் சமர்பித்த மத்திய அரசு. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.50,000 கருணைத்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்தது.

corona
corona

கொரோனா பாதித்து இறந்தவர்களின் குடும்பத்துக்கு மாநில அரசின் பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து ரூ.50,000 கருணைத்தொகை வழங்கப்படுகிறது. கொரோனா உயிரிழப்பு தொடர்பாக நிறைய குழப்பங்கள் இருக்கின்றன. கொரோனா பாதித்த பலர் நெகட்டிவ் ரிசல்ட் பெற்றபிறகும் உயிரிழந்திருக்கிறார்கள். அப்படி இறந்தவர்களுக்கு இறப்புச் சான்றிதழில் கொரோனா என்று குறிப்பிடப்படவில்லை. இதுகுறித்தெல்லாம் ஆய்வுசெய்த பேரிடர் மேலாண்மை ஆணையம், கொரோனா தொற்று உறுதியான அல்லது கொரோனா சிகிச்சை தொடங்கப்பட்ட 30 நாள்களுக்குள் மருத்துவமனையிலோ அல்லது வீட்டிலோ பாதிக்கப்பட்ட நபர் உயிரிழந்தால் அவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவராகக் கருதப்படுவார் என்று வழிகாட்டுதல் தந்திருக்கிறது. 30 நாள்களுக்கு மேல் சிகிச்சையிலிருந்து உயிரிழப்பவர்களும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களாகக் கணக்கிடப்படுவர்.

தமிழ்நாடு அரசு இணைதளம்
தமிழ்நாடு அரசு இணைதளம்

நீண்டநாள்கள் சிகிச்சையில் இருந்து கொரோனா நெகட்டிவ் ரிசல்ட் வந்தபிறகு உயிரிழக்க நேர்ந்தாலும் அவர்களின் குடும்பத்துக்கும் கருணைத்தொகை வழங்கப்படும். இதுகுறித்து மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்டக் குழுவினர் ஆய்வு செய்து முடிவெடுப்பார்கள்.

கருணைத்தொகை பெறுவது எப்படி?

கிராமப்புறங்களில் இருப்பவர்கள், தங்கள் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். அல்லது, தமிழக அரசு இணையதளப் பக்கத்துக்குச் சென்று அதில் தரப்பட்டுள்ள விண்ணப்பித்தில் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் படிவம் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் பார்வைக்குச் செல்லும். அவர் விசாரணை செய்து வட்டாட்சியருக்குப் பரிந்துரைப்பார். வட்டாட்சியர் மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள குழுவுக்குப் பரிந்துரைப்பார். உரிய ஆய்வுக்குப் பிறகு நிவாரணத் தொகை வழங்கப்படும்.

இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கும் முறை:

  • முதலில் தமிழக அரசு இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அரசின் இணையப்பக்கத்திற்குச் செல்ல இங்கே கிளிக் செய்யவும்.

  • இணையப் பக்கத்தில் வலது புறத்தில் 'What's New' என்ற பகுதி ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.

  • அந்தப் பகுதியில் 'Ex-Gratia for Covid 19' என்ற வாசகம் ஓடிக் கொண்டிருக்கும். அதனைக் கிளிக் செய்தால், நிவாரணம் பெறுவதற்கான விண்ணப்பப் பக்கத்திற்குச் செல்லலாம்.

  • உரிமைகோரியவரின் விவரங்கள், இறந்தவர்களின் அடிப்படை விவரங்கள், சட்டப்பூர்வ வாரிசுகளின் விவரங்கள், இறந்தவரின் நிரந்தர முகவரி, தகவல் தெரிவிக்க வேண்டிய முகவரி, சிகிச்சை அளிக்கப்பட்ட மருத்துவமனையின் முகவரி, இறந்த மருத்துவமனையின் முகவரி ஆகியவற்றை இந்த விண்ணப்பத்தில் பதிவு செய்யவேண்டும்.

விண்ணப்பிக்கும் போது சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:

  1. இறந்தவரின் இறப்புச் சான்றிதழ்

  2. Covid -19 மருத்துவ சிகிச்சை பெற்றதற்கான சான்றிதழ்

  3. படிவம் 4 / படிவம் 4A

  4. நிதியுதவி பெறும் வாரிசுதாரர்களின் வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகல் / கோடிட்ட வங்கிக் காசோலை

விண்ணப்பப் பக்கம்
விண்ணப்பப் பக்கம்

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார் என்று சான்றிதழ் வாங்குவதில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டாலும் மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள குழுவிடம் முறையிடலாம். கூடுதல் மாவட்ட ஆட்சியர், தலைமை மருத்துவ அதிகாரி, மருத்துவக் கல்லூரியின் துறைத் தலைவர் (மருத்துவக் கல்லூரி இருக்கும் மாவட்டத்தில் மட்டும்) ஒரு துறை சார் நிபுணர் அந்தக்குழுவில் இடம்பெற்றுள்ளார்கள். விண்ணப்பித்த 30 நாள்களுக்குள் இந்தக்கருணைத்தொகை வழங்கப்பட வேண்டும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியிருக்கிறது.

இதுகுறித்து இந்தக் கருணைத்தொகை வழங்கும் பணிகளை ஒருங்கிணைக்கும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய தரப்பில் பேசினோம். நம் கேள்விகளுக்குப் பதிலளித்த துணை ஆணையர் ஒருவர், "இதுவரை 30,000 விண்ணப்பங்கள் வந்துள்ளன. கருணைத்தொகை வழங்கும் பணி தொடங்கிவிட்டது. மாவட்ட அளவில் குழுவினர் பரிந்துரைக்கும் அனைவருக்கும் நிவாரணத் தொகை கண்டிப்பாக வழங்கப்படும்." என்றார்.

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!

Doubt of common man
Doubt of common man