Published:Updated:

தமிழ்நாடு அரசு டெண்டர்களை ஒரு சாதாரண குடிமகன் எடுக்க முடியுமா? | Doubt of Common Man

தமிழக அரசு
News
தமிழக அரசு

பொது நபர்களால் அரசு டெண்டரில் கலந்து கொள்ளவோ அல்லது டெண்டர்களை எடுக்கவோ முடியுமா என்ற கேள்வி நம்மில் பலருக்கும் எழுந்திருக்கும். அதே போன்ற ஒரு சந்தேகம் நம் வாசகருக்கும் எழுந்திருக்கிறது.

Published:Updated:

தமிழ்நாடு அரசு டெண்டர்களை ஒரு சாதாரண குடிமகன் எடுக்க முடியுமா? | Doubt of Common Man

பொது நபர்களால் அரசு டெண்டரில் கலந்து கொள்ளவோ அல்லது டெண்டர்களை எடுக்கவோ முடியுமா என்ற கேள்வி நம்மில் பலருக்கும் எழுந்திருக்கும். அதே போன்ற ஒரு சந்தேகம் நம் வாசகருக்கும் எழுந்திருக்கிறது.

தமிழக அரசு
News
தமிழக அரசு
விகடனின் Doubt of Common Man பக்கத்தில் மாணிக்கம் என்ற வாசகர், "தமிழ்நாடு அரசு டெண்டர்களை ஒரு சாதாரண குடிமகன் எடுக்க முடியுமா? அரசு டெண்டர்களை எடுப்பதற்கான தகுதிகள் என்ன?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே.
doubt of common man
doubt of common man

அரசு டெண்டர்களை அரசியல் பின்புலம் கொண்டவர்கள்தான் பெரும்பாலும் எடுக்கின்றனர். பொது நபர்களால் அரசு டெண்டரில் கலந்து கொள்ளவோ அல்லது டெண்டர்களை எடுக்கவோ முடியுமா என்ற கேள்வி நம்மில் பலருக்கும் எழுந்திருக்கும். அதே போன்ற ஒரு சந்தேகம் நம் வாசகருக்கும் எழுந்திருக்கிறது. அதனை மேற்கூறிய கேள்வியாக நமது டவுட் ஆஃப் காமன் மேன் பக்கத்தில் கேட்டிருந்தார்.

தமிழ்நாட்டு அரசின் டெண்டர் தொடர்பான விபரங்களைத் தெரிந்து கொள்ள அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகலாம். இணையதளத்திற்குச் செல்ல இங்கே கிளிக் செய்யவும்.

டெண்டர்கள் தொடர்பான இணையதளம்
டெண்டர்கள் தொடர்பான இணையதளம்

வாசகரின் கேள்விக்கான பதிலை அறிந்து கொள்ளும் பொருட்டு அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராமன் அவர்களிடம் இது குறித்துக் கேட்டோம், "தமிழ்நாட்டில் எந்த ஒரு கொள்முதலாக இருந்தாலும், கட்டுமானங்களாக இருந்தாலும் தகுதி வாய்ந்த எந்த பொது நபரும் டெண்டர் எடுக்கலாம். அரசியல்வாதிகள் மட்டும்தான் எடுக்க முடியும் என்று இல்லை. உதாரணமாக ஒரு பொது நிறுவனமோ அல்லது தனிநபர் வைத்திருக்கும் நிறுவனமோ எதுவாக இருந்தாலும், ஒரு டெண்டரை எடுக்கும் வேண்டும் என்றால், அந்த டெண்டரின் தொகையில் குறைந்தபட்ச சதவிகிதம் அந்த நிறுவனத்தின் டர்ன் ஓவராக இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருக்கும். தமிழ்நாடு அரசு ஒப்பந்த வெளிப்படைத்தன்மை சட்டத்தில் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கான என்னென்ன தகுதிகள், வரையறைகள், வழிமுறைகள் வேண்டும் என எல்லாமே கொடுக்கப்பட்டிருக்கும்.

`அறப்போர்'  ஜெயராம்
`அறப்போர்' ஜெயராம்

இந்தச் சட்டத்தில் மட்டுமல்லாது, சிறியது முதல் எவ்வளவு பெரிய டெண்டராக இருந்தாலும் சரி, அந்த டெண்டரை யாரெல்லாம் எடுக்க முடியும் என்பதற்கான தகுதிகள் அந்த டெண்டருக்கான அறிவிப்பிலேயே இணைக்கப்பட்டிருக்கும். அறிவிப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் தகுதியுள்ள எந்தவொரு தனி நபராக இருந்தாலும், அவர்களால் டெண்டரை எடுக்க முடியும். ஆனால், சில துறைகளில் பதிவு செய்யப்பட்டவர்கள் மட்டுமே என்ற விதிமுறைகள் இருக்கும். அந்தக் குறிப்பிட்ட துறைகளில் டெண்டர் எடுக்க வேண்டும் என்றால், அந்தத் துறையில் அரசிடம் நாம் பதிவு செய்திருக்க வேண்டும். பதிவு செய்தவர்கள்தான் டெண்டர் எடுக்க முடியுமா என்பதும், அந்த டெண்டர் குறித்த அறிவிப்பிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும்.

எந்த நபரும், தகுதி வாய்ந்த நபர்களை மிரட்டியோ, இல்லை வேறு விதத்திலோ ஒப்பந்தத்தில் ஈடுபடுவதைத் தடுக்க முடியாது. அப்படித் தடுத்தால், அவர்கள் மேல் புகார் அளித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். இப்படி டெண்டரைக் கைப்பற்றுவதில் ஏதாவது குளறுபடிகள் நடந்தாலோ அல்லது டெண்டரை குறிப்பிட்ட நபர்களுக்குக் கொடுக்க வேண்டும் என ஊழல் நடந்திருப்பது தெரிய வந்தாலோ, அதிகபட்சமாக அந்த டெண்டரை ரத்து செய்வதற்குக் கூட வாய்ப்புள்ளது" என முடித்தார்.

இதேபோல உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்கள்!

doubt of common man
doubt of common man