Published:Updated:

IFSC, MICR போன்ற குறியீடுகள் எதனைக் குறிப்பிடுகின்றன? | Doubt of Common Man

ரிசர்வ் வங்கி
News
ரிசர்வ் வங்கி

வங்கிகளின் வழியாக மின்னணுப் பணப் பரிமாற்றம் மேற்கொள்ளும் தனிநபர்கள், நிறுவன அமைப்புகள், குழுமங்கள், என்று அனைவரும் NEFT, RTGS, IFSC, MICR என்கிற குறியீடுகளைப் பயன்படுத்துகின்றனர்.

Published:Updated:

IFSC, MICR போன்ற குறியீடுகள் எதனைக் குறிப்பிடுகின்றன? | Doubt of Common Man

வங்கிகளின் வழியாக மின்னணுப் பணப் பரிமாற்றம் மேற்கொள்ளும் தனிநபர்கள், நிறுவன அமைப்புகள், குழுமங்கள், என்று அனைவரும் NEFT, RTGS, IFSC, MICR என்கிற குறியீடுகளைப் பயன்படுத்துகின்றனர்.

ரிசர்வ் வங்கி
News
ரிசர்வ் வங்கி
விகடனின் 'Doubt of Common Man' பக்கத்தில் செந்தில் என்ற வாசகர், "வங்கிப் பரிவர்த்தனைகளில் பயன்படுத்தப்படும் IFSC, MICR குறியீடுகள் எதனைக் குறிப்பிடுகின்றன?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே.
Doubt of common man
Doubt of common man

இந்தியாவில் மின்னணுப் பணப் பரிமாற்றம் செய்யக்கூடிய வசதிகள் கொண்ட வங்கிகள், வங்கிகளின் வழியாக மின்னணுப் பணப் பரிமாற்றம் மேற்கொள்ளும் தனிநபர்கள், நிறுவன அமைப்புகள், குழுமங்கள், என்று அனைவரும் NEFT, RTGS, IFSC, MICR என்கிற குறியீடுகளைப் பயன்படுத்துகின்றனர். இந்தக் குறியீடுகள் எதனைக் குறிப்பிடுகின்றன? இவை எதற்குப் பயன்படுத்தப்படுகின்றன? என்பது போன்ற தகவல்களைத் தெரிந்து கொள்ளலாமா?

NEFT

தேசிய மின்னணு பணப் பரிமாற்றம் (National Electronic Fund Transfer - NEFT) என்பது தேசிய அளவில் தனிநபர்கள், நிறுவன அமைப்புகள், குழுமங்கள் ஏதாவது ஒரு வங்கியின் கிளையிலிருந்து மற்றொரு வங்கியிலுள்ள தனிநபர், நிறுவன அமைப்பு, குழுமங்களின் கணக்கிற்கு மின்னணு முறையில் பணத்தை அனுப்பிட உதவிடும் முறையே தேசிய மின்னணு பணப் பரிமாற்ற முறை ஆகும். இந்த பணப் பரிமாற்றத்தில் பங்கேற்கும் வலைத்தளத்தில் இருக்க வேண்டுமாயின், ஒரு வங்கிக்கிளை இந்த இணைப்பினை ஏற்கும் வசதியுடையதாக இருக்கவேண்டும்.

NEFT
NEFT

வங்கிக்கிளையில் கணக்கு வைத்துள்ள தனி நபர்கள், நிறுவன அமைப்புகள், குழுமங்கள் இம்முறையைப் பயன்படுத்திப் பணம் அனுப்பலாம். வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் கூட தேசிய மின்னணு பணப் பரிமாற்றம் (NEFT) இணைப்பிலுள்ள வங்கிக் கிளையில் நுழைந்து அதன் மூலம் இம்முறையைப் பயன்படுத்திப் பணம் அனுப்பலாம். இத்தகு வாடிக்கையாளர் பணத்தை வங்கியில் செலுத்த வசதியாக தனியானதொரு பரிவர்த்தனைக் குறியீட்டு எண் (50) தேசிய மின்னணு பணப் பரிமாற்ற முறையில் வழங்கப்பட்டுள்ளது. இத்தகு வாடிக்கையாளர்கள் தங்களின் அலைபேசி எண், முகவரி உள்ளிட்ட சில தகவல்களை மட்டும் தந்து, வங்கிக்கணக்கு ஏதுமின்றி பணம் செலுத்துபவர் பணமாற்ற பரிவர்த்தனையை செய்திட முடியும்.

ஒரு வங்கிக்கிளையில் கணக்கு வைத்துள்ள தனிநபர்கள், நிறுவன அமைப்புகள், குழுமங்கள் இம்முறையைப் பயன்படுத்திப் பணம் பெறலாம். ஆகவே பணத்தைப் பெறுபவர் (பயனாளி) இம்முறை இணைப்பிலுள்ள வங்கிக்கிளையில் கணக்கு வைத்திருப்பது அவசியமாகும். ஒரு வழி பணமாற்றத்தை இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையே நடத்திட இம்முறை உதவுகிறது. இதன் மூலம் நேபாளத்தில் உள்ள ஒருவருக்கு இம்முறை இணைப்பில் உள்ள வங்கிக்கிளை மூலம் பயனாளிக்கு வங்கிக்கணக்கு இருந்தாலும், இல்லாவிட்டாலும் பணத்தை நேபாளத்தில் உள்ளவர் நேபாள ரூபாயில் பெற முடியும். இந்தப் பரிமாற்றத்துக்காகச் சிறப்பு குறியீட்டு எண்(51) கொடுக்கப்பட்டுள்ளது.

இம்முறையிலான பணப்பரிமாற்றத்துக்கு இந்தியாவிலிருப்பவர்களுக்கு எந்த உச்ச வரம்பும் இல்லை. ஆனால், நேபாளத்திலிருப்பவருக்கு ரூ.49,999/- வரை மட்டுமே அனுப்ப இயலும்.

RTGS
RTGS

RTGS

நிகழ்நேரப் பெருந்திரள் தீர்வு (Real Time Gross Settlement - RTGS) என்பது ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு, 'நிகழ் நேரத்தில்' பணத்தை இடமாற்றம் செய்யும் முறை. இங்கே நிகழ் நேரம் என்பது, பணம் அனுப்பும் வங்கி, பணம் பெறும் வங்கி ஆகிய இவற்றிடையே நிகழும் நடவடிக்கை, காத்திருக்கும் நேரம், எதுவும் இல்லாமல் 'நிகழ் நேரத்திலேயே' நடப்பதாகக் கருதப்படுகின்றது. 'மொத்த பணமதிப்புத் தீர்வு' (gross settlement) என்பது ஒன்றுக்கு ஒன்று என்ற வகையில் தீர்க்கப்படுவது; ஒருவருக்கு வரவு அல்லது பற்று இரண்டையும் கணித்து நிகரத்தொகை தீர்க்கப்படுவதன்று. இந்த நடவடிக்கை, உறுதி செய்யப்பெற்ற, மீள்விக்க இயலாத, முடிவான தீர்வு. இது ஒரே நேரத்தின் அடிப்படையில் நடவடிக்கைளை உடனுக்குடன் கணினி வழித் தீர்வு செய்யும் முறை ஆகும். இது வங்கி வணிக நடவடிக்கைகளைத் தீர்க்கப் பயன்படுகிறது.

இதில் நிகழும் கணினி வழியிலான பணம் செலுத்தல், பெறுதல் முறையை ஒரு நாட்டின் நடுவண் (அரசு) வங்கி பராமரிக்கும். நேரடியாகப் பணத்தாள்கள் போன்ற பருப்பொருள் பண மாற்றம் ஏதும் இதில் நிகழ்வதில்லை. ஒரு வங்கி (வங்கி-1) மற்றொரு வங்கிக்கு (வங்கி-2) 1000 பண அலகு (டாலர், ரூபாய் போன்றவை) பணம் செலுத்துகின்றது என்றால், நடுவண் வங்கியானது வங்கி-1 கணக்கில் 1000 பண அலகைக் கழிப்பதும், வங்கி-2 கணக்கில் 1000 பண அலகைக் கூட்டுவதும் செய்யும்.

இந்த நிகழ்நேரத் தீர்வுமுறை (RTGS System) அதிக மதிப்புள்ள பண மாற்றங்களை, குறைந்த எண்ணிக்கையிலான நடவடிக்கைகளாகச் செய்வர். இதனால் ஒரு பண - நிதி நிறுவனத்தின் பண நடவடிக்கை பற்றிய தெளிவான கணக்கு வழக்கை அறிய முடியும். இம்முறையானது, ஒவ்வொரு நாளின் இறுதியிலும், பண நிறுவனங்களுக்கு இடையே நடைபெறும் செலுத்தல் மற்றும் பெறுதல்களைத் தொகுத்துத்தரும் இதித் தீர்வு முறைக்கு (BACS) மற்றொரு மாற்று முறையாக இம்முறை கருதப்படுகின்றது.

IFSC

இந்திய நிதிசார் முறைமைக் குறியீடு (Indian Financial System Code - IFSC) என்பது இந்தியாவின் முதன்மையான இரு மின்னணு பணப் பரிவர்த்தனை அமைப்புகளான நிகழ்நேரப் பெருந்திரள் தீர்வு மற்றும் தேசிய மின்னணுப் பணப் பரிமாற்றத்தில் பங்கேற்கும் வங்கிக் கிளையை அடையாளம் காணும் எண், எழுத்துக் குறியீடு ஆகும்.

IFSC
IFSC

11 எழுத்துருக்கள் கொண்ட இந்தக் குறியீட்டின் முதல் நான்கு அகரவரிசை எழுத்துருக்கள் வங்கியின் பெயரையும், கடைசி ஆறு எழுத்துருக்கள் (வழமையாக எண்கள், எழுத்துக்களாகவும் இருக்கலாம்) வங்கிக் கிளையையும் குறிக்கின்றது. ஐந்தாவது எழுத்துருவாக தற்போது 0 (சுழியம்) உள்ளது; இது வருங்காலத் தேவைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்தக் குறியீடுகளைக் கொண்டே நிகழ்நேரப் பெருந்திரள் தீர்வு பரிமாற்றமும், தேசிய மின்னணுப் பணப் பரிவர்த்தனையும் சேரவேண்டிய வங்கிக் கிளைக்குத் தகவல்களைக் கொண்டு சேர்க்கின்றன.

வங்கிக் கிளைக்கான இந்திய நிதிசார் முறைமைக் குறியீட்டை (Indian Financial System Code - IFSC) அனைத்து வங்கிக் கிளைகளும், வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் காசோலைகளில் (Cheque) குறிப்பிட வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியிருக்கிறது.

MICR

காந்த மை ஒளி எழுத்துணரி (Magnetic ink character recognition - MICR) அடையாளக் குறியீடு என்பது காசோலைகள் மற்றும் பிற ஆவணங்களின் செயலாக்கம் மற்றும் அனுமதியைச் சீராக்க வங்கிகளால் பயன்படுத்தப்படும் எழுத்து அங்கீகாரத் தொழில்நுட்பமாகும். இக்குறியீடானது, காசோலைகள் மற்றும் சான்று ஆவணங்கள் ஆகியவற்றின் அடிப்பகுதியில் இடம் பெற்றிருக்கும். இக்குறியீடு ஒன்பது இலக்கங்களைக் கொண்டிருக்கும். காசோலைகளின் கீழ்ப்பகுதியில் வலதுபுறம் இடம் பெற்றிருக்கும் இக்குறியீட்டின் முதல் மூன்று இலக்கங்கள் நகர்ப்புறக் குறியீட்டையும், நடுவில் இருக்கும் எண்கள் வங்கிக் குறியீட்டையும் குறிக்கின்றன. இந்தக் குறியீடு வங்கி சேமிப்புக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்கத்திலும் இடம் பெறுகிறது.

IFSC, MICR
IFSC, MICR

இக்குறியீடானது, E13-B அல்லது CMC-7 எனும் சிறப்பு எழுத்துருக்களைக் கொண்டு அச்சிடப்படுகின்றன. இந்த எழுத்துருக்கள் நிதி ஆவணங்களைக் காந்தமாகப் படிக்க உதவுகின்றன. இந்தியாவில் E13-B எனும் சிறப்பு எழுத்துரு கொண்டே அச்சிடப்படுகிறது. அச்சிடப்பட்ட இந்த எழுத்துகளை அதற்குரிய வாசிப்பு எந்திரம் வழியாக இயந்திரம் மற்றும் மின்னணு முறையில் காசோலையின் அளவு, கணக்கு எண், காசோலை எடுக்கப்பட்ட நிறுவனம் மற்றும் பிற குறியீடுகள் உட்பட காசோலை பற்றிய தகவல்கள் அனைத்தையும் காந்தமாக வாசிக்கிறது. இச்செயல்பாட்டின் போது, E13-B எழுத்துகள் மிகவும் அதிகமான வேகத்தில் (ஒரு எழுத்துக்கு 1/1000-ல் ஒரு வினாடிக்கும் குறைவாக) பல முறை படித்து சரிபார்க்கப்படுகிறது. இதனால், காசோலைகள் உள்ளிட்ட நிதி ஆவணங்கள் விரைவாகப் பரிமாற்றம் செய்யப்படுகின்றன.

இதேமாதிரி உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!

Doubt of common man
Doubt of common man