Published:Updated:

பொது இடத்தை ஒருவர் ஆக்கிரமித்தால் யாரிடம் புகார் அளிப்பது? | Doubt Of Common Man

ஏரி குளம் ஆக்கிரமிப்பு
News
ஏரி குளம் ஆக்கிரமிப்பு

குட்டை, குளம் போன்ற ஏனைய நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் மீது இதே போன்று புகார் அளித்துத் தீர்வு பெறலாம். அல்லது அந்த அந்தத் துறைகளின் கீழும் புகார் அளிக்கலாம்.

Published:Updated:

பொது இடத்தை ஒருவர் ஆக்கிரமித்தால் யாரிடம் புகார் அளிப்பது? | Doubt Of Common Man

குட்டை, குளம் போன்ற ஏனைய நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் மீது இதே போன்று புகார் அளித்துத் தீர்வு பெறலாம். அல்லது அந்த அந்தத் துறைகளின் கீழும் புகார் அளிக்கலாம்.

ஏரி குளம் ஆக்கிரமிப்பு
News
ஏரி குளம் ஆக்கிரமிப்பு
விகடனின் Doubt of Common Man பக்கத்தில் அருண் என்ற வாசகர், "எங்கள் ஊரில் பொதுக் குளத்தை ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். அவர்மீது யாரிடம் புகார் செய்வது?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே!

இப்போது இருக்கும் உலகில் மனிதனால் ஏற்படக்கூடிய இயற்கை சார்ந்த பிரச்னைகளில் முக்கியமாக இருப்பது ஆக்கிரமிப்புகள் என்னும் பெரிய பிரச்னைதான். இதனால் பல நீர்நிலைகள், அரசுக்குச் சொந்தமான நிலங்கள் பல்வேறு உயிரினங்களின் வாழ்விடங்களாகிய காடுகள், ஈரநிலப் பகுதிகள் என அனைத்தும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அழிக்கப்பட்டுவருகின்றன. பல ஊரிலும் இதுபோன்று பொதுமக்களின் இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கும். பலருக்கும் அவற்றைப் பற்றிப் புகார் செய்யவேண்டும், ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கும் இடத்தை மீட்க வேண்டும் எனத் தோன்றியிருக்கும். நமது வாசகர் ஒருவருக்கும் அப்படித் தோன்ற, அதனை மேற்கண்ட கேள்வியாக நமது டவுட் ஆப் காமன்மேன் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கான பதிலை அறிந்துகொள்ளும் நோக்கில் நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பொன்.தங்கவேலு என்பவரிடம் பேசினோம்.

ஆக்கிரமிப்பு அகற்றப்படுகிறது
ஆக்கிரமிப்பு அகற்றப்படுகிறது
doubt of common man
doubt of common man

எவ்வாறு புகார் அளிக்க வேண்டும் என்பது குறித்து அவர் கூறியதாவது, "ஒருவர் பொதுக் குளத்தை அல்லது அரசுக்குச் சொந்தமான இடத்தைத் தனி மனிதனாகவோ, குழுவாகவோ அல்லது தனியார் நிறுவனமாகவோ ஆக்கிரமிப்பு செய்யும் பட்சத்தில், அது கிராமமாக இருந்தால், முதலில் கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் அளிக்க வேண்டும். புகார் அளிக்கும் போது அந்த நீர்நிலை, அல்லது நிலத்தின் சர்வே எண், ஆக்கிரமிப்புக்கு முன் இருந்த இடத்தின் புகைப்படம், தற்போது ஆக்கிரமிக்கப்பட்டபின் இருக்கும் இடத்தின் புகைப்படம் என அனைத்தையும் இணைத்து, கூடவே, ஆக்கிரமிப்பாளர்களின் விவரங்களுடன் புகார் மனுவைக் கொடுக்க வேண்டும். முக்கியமாக நம்முடைய உண்மையான முகவரியுடன் நம் விவரத்தைத் தெளிவாக அளிக்க வேண்டும்.

பொன்.தங்கவேலு
பொன்.தங்கவேலு

அதுமட்டுமல்லாமல், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்புகளையும் தெளிவாகப் புகார் மனுவில் குறிப்பிட வேண்டும். தொடர்ந்து வருவாய் அலுவலர், தாசில்தார் ஆகியோரிடமும் புகார் அளிக்க வேண்டும். நகராட்சிப் பகுதியில் இதுபோன்ற ஆக்கிரமிப்புகள் இருக்கும் பட்சத்தில் நகராட்சி ஆணையரிடமும், மாநகராட்சியாக இருந்தால் மாநகராட்சி ஆணையரிடமும் புகார் அளிக்க வேண்டும். ஆக்கிரமிப்பு செய்திருப்பது உறுதியானால் 15 நாள்களுக்குள் கண்டிப்பாக நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்றுவார்கள். இதற்கு நாம் ஆக்கிரமிப்பு இருக்கும் பகுதியில் தான் வசிக்க வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் இல்லை.

குறிப்பாக அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்து எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை என்றால் 15 நாள்களில் நாம் முதலமைச்சர் தனிப்பிரிவிற்குப் புகார் அளிக்கலாம். அதில், முன்னால் கிராம நிர்வாக அலுவலரிடமோ, அல்லது நகராட்சி மாநகராட்சி ஆணையரிடமோ கொடுத்த மனுவின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதைக் குறிப்பிட்டு அந்த மனுவின் நகலையும் இணைக்க வேண்டும். அதன் பின்னர் கண்டிப்பாக ஆக்கிரமிப்பு செய்தவர்கள்மீது நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்றுவார்கள். தற்போது வெகு சீக்கிரமாகவே நடவடிக்கை எடுக்கிறார்கள். தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு மேலாக எந்த நடவடிக்கையும் எடுக்கவே இல்லை என்றால், கடைசியாக யார், யாரிடம் புகார் மனு அளித்தோம், எந்தப் பகுதியில் ஆக்கிரமிப்பு உள்ளது என நீதிமன்றத்தில் முறையிடலாம். நீதிமன்றத்தின் மூலம் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆக்கிரமிப்பு அகற்றப்படும். ஆனால் கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் அளிக்கும் நிலையிலேயே நமது புகார் மனுவின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுவிடும்.

சதுப்புநில ஆக்கிரமிப்பு
சதுப்புநில ஆக்கிரமிப்பு
க.சுபகுணம்

குட்டை, குளம் போன்ற ஏனைய நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள்மீது இதேபோன்று புகார் அளித்துத் தீர்வு பெறலாம். அல்லது அந்த அந்தத் துறைகளின் கீழும் புகார் அளிக்கலாம். குறிப்பாக, ஒரு ஏரியை ஆக்கிரமித்து சாலை போடப்பட்டிருந்தால், நெடுஞ்சாலைத் துறையின் கீழ் புகார் அளிக்கலாம்" என்று கூறினார்.

இதுபோன்ற, உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்கள்!

doubt of common man
doubt of common man