Published:Updated:

`கட்டுமான பணிகளால் கடைமடைக்குத் தண்ணீர் வரவில்லை' விவசாயிகள் வேதனை!

கட்டுமான பணிகளால் ஆறுகளில் தண்ணீர் வராமல் தவிக்கிறோம்
News
கட்டுமான பணிகளால் ஆறுகளில் தண்ணீர் வராமல் தவிக்கிறோம்

ஒருபுறம் தண்ணீரை எதிர்பார்த்து குறுவை விவசாயிகள் காத்திருக்க, மறுபுறம் அதே தண்ணீர் பலவகையான தோட்டப் பயிர்களைச் சேதப்படுத்தியுள்ளது. இனி வரும் காலங்களிலாவது மேட்டூர் அணை திறந்தவுடன் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பகுதிக்கு இன்னும் வரவில்லை. இதனால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம், திட்டை, தில்லைவிடங்கன், எடமணல், வடகால், மாதானம், பழையபாளையம், கோதண்டபுரம், நல்லூர், அளக்குடி, காட்டூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆண்டுதோறும் சுமார் 30,000 ஏக்கர் வரை குறுவை சாகுபடி செய்யப்படுவது வழக்கம்.

கட்டுமான பணிகளால் ஆறுகளில் தண்ணீர் வராமல் தவிக்கிறோம் |விவசாயிகள் வேதனை
கட்டுமான பணிகளால் ஆறுகளில் தண்ணீர் வராமல் தவிக்கிறோம் |விவசாயிகள் வேதனை

இந்த ஆண்டு முன்கூட்டியே மேட்டூரிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால், அதிகாரிகளின் அறிவுறுத்தலை அடுத்து இப்பகுதி விவசாயிகள் குறுவை சாகுபடிக்குத் தயாராகினர். மேட்டூர் அணை தண்ணீரை நம்பியிருந்த விவசாயிகள் உழவுப் பணிகள் செய்து காத்திருந்த நிலையில் தண்ணீர் வர தாமதமானதால் மோட்டார் வைத்திருக்கும் ஒரு சில விவசாயிகள் மட்டும் சாகுபடிப் பணிகளைத் தொடங்கினர்.

மேட்டூர் அணை தண்ணீர் தங்கள் பகுதிக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கையில் மோட்டார் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பல விவசாயிகள் குறுவை சாகுபடியை அடுத்தடுத்து தொடங்கிய நிலையில் 55 நாள்கள் கடந்தும் இதுவரை கடைமடை பகுதிகளுக்கு மேட்டூர் அணை தண்ணீர் வந்து சேரவில்லை.

இதனால் குறுவை சாகுபடியைத் தொடங்கிய விவசாயிகள் கவலையில் உள்ளனர். மின்சார தட்டுப்பாடு நிலவுவதால் மோட்டார் வைத்துள்ள விவசாயிகளுக்கே உரிய தண்ணீர் கிடைக்காத நிலையில் மற்ற விவசாயிகளுக்கும் தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. பல விவசாயிகள் குறுவை சாகுபடியைத் தொடங்காமலே விட்டுவிட்டனர். விவசாயிகளின் இந்த அவல நிலைக்கு முக்கிய காரணம் காலம் கடந்த கட்டுமான பணிகள்தான் என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

சீர்காழி விவசாயிகள் வேதனை
சீர்காழி விவசாயிகள் வேதனை

இதுபற்றி சீர்காழி விவசாய சங்கத் தலைவர் வாகீசனிடம் பேசினோம். ``கொள்ளிடம் பகுதியில் பிரதான பாசன ஆறுகளான கழுமலை ஆறு, பொறை வாய்க்கால், புதுமண்ணியாறு, தெற்கு ராஜன் வாய்க்கால் ஆகிய அனைத்து பாசன பகுதிகளிலும் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. மழைக்கு முன்னரே கட்டுமான பணிகளை முடிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் இதுவரை பாசனத்துக்கான தண்ணீர் திறக்கப்படாமல் உள்ளது. அதேபோல் இப்பகுதியிலுள்ள ஏரி, குளங்கள், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் இல்லாத நிலையில் கொள்ளிடம் ஆற்றின் வழியே சுமார் 1.25 லட்சம் கன அடி உபரிநீர் பயனற்று, கடலுக்குச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் சுமார் 300 ஏக்கரில் தோட்டப் பயிர்களை வெள்ளநீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. ஒருபுறம் தண்ணீரை எதிர்பார்த்து குறுவை விவசாயிகள் காத்திருக்கும் நிலையில் மறுபுறம் அதே தண்ணீர் பலவகையான தோட்டப் பயிர்களைச் சேதப்படுத்தியுள்ளது. எனவே, இனி வரும் காலங்களிலாவது கட்டுமான பணிகளை முன்னரே முடித்து மேட்டூர் அணை திறந்தவுடன் கடைமடை பகுதிகளுக்குத் தண்ணீர் கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

கட்டுமான பணிகளால் ஆறுகளில் தண்ணீர் வராமல் தவிக்கிறோம்
கட்டுமான பணிகளால் ஆறுகளில் தண்ணீர் வராமல் தவிக்கிறோம்

இதுகுறித்து கொள்ளிடம் பொதுப்பணித்துறையினரிடம் விளக்கம் கேட்டோம். ``கழுமலையாறு, பொறையன் வாய்க்கால் போன்றவற்றில் நடைபெற்று வந்த வேலைகள் முற்றிலும் முடிவடைந்துவிட்டன. புதுமணியாற்றில் மட்டும் பாதியோடு வேலையை நிறுத்திவிட்டோம். நேற்றுகூட சுமார் பத்து சென்டிமீட்டர் மழை பொழிந்து எல்லாவற்றிலும் தண்ணீர் செல்கிறது. இனி பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதில் எவ்வித தடையும் இல்லை" என்றனர்.

பொதுப்பணித்துறையினர் கூறியதை விவசாயிகளிடம் தெரிவித்தோம். ``இப்படித்தான் சில வாரங்களுக்கு முன்னும் பதில் சொன்னார்கள். இப்போது மழைநீரை சுட்டிக் காட்டுகிறார்கள். எப்போதுதான் பாசன நீர் திறப்பார்களோ?" என்று ஆதங்கப்பட்டனர்.