Published:Updated:

``ரஷ்யாவிடமிருந்து நாளொன்றுக்கு 16 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் இறக்குமதி!" - இந்தியா புதிய உச்சம்

கச்சா எண்ணெய் ( crude oil )

அமெரிக்கா விதித்த தடையால் பாதிக்கப்பட்ட ரஷ்யா, கச்சா எண்ணெயை சலுகை விலையில் விற்கத் தொடங்கியது. இதனால் இந்தியா ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து நாளொன்றுக்கு 16 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து உச்சத்தைத் தொட்டுள்ளது.

ரஷ்யா
ரஷ்யா

இந்தியா 85% கச்சா எண்ணெயை வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்து வருகிறது. இந்தியா ஈராக், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடங்கியதைத் தொடர்ந்து அமெரிக்கா ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதற்குத் தடை விதித்தது. இந்த தடையால் பாதிக்கப்பட்ட ரஷ்யா கச்சா எண்ணெயை சலுகை விலையில் விற்கத் தொடங்கியது.

இதனால் இந்தியா ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யத் தொடங்கியது. அதற்கு முன்பாக இந்தியா ரஷ்யாவிடமிருந்து 2% மட்டுமே கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்

தற்போது இந்தியா ரஷ்யாவிடம் இருந்து 35% கச்சா எண்ணெயும், சவுதி அரேபியாவிடமிருந்து 16% கச்சா எண்ணெயும், அமெரிக்கா விடமிருந்து 38% கச்சா எண்ணெயும் இறக்குமதி செய்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவிடமிருந்து கடந்த மாதம் நாளொன்றுக்கு 16 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.