Published:Updated:

``அடுத்த 10 - 20 ஆண்டுகளில் இந்தியா மிக வேகமாக வளரும்" பொருளாதார நிபுணர் சொல்லும் காரணம்!

உலக பொருளாதார கூட்டமைப்பு!

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார நடவடிக்கைகள் அனைத்தும் தற்போது இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்றுள்ளது.

``அடுத்த 10 - 20 ஆண்டுகளில் இந்தியா மிக வேகமாக வளரும்" பொருளாதார நிபுணர் சொல்லும் காரணம்!

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார நடவடிக்கைகள் அனைத்தும் தற்போது இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்றுள்ளது.

Published:Updated:
உலக பொருளாதார கூட்டமைப்பு!

இந்தியா அடுத்த 10-20 ஆண்டுகளில் மிக வேகமாக வளரும் பெரிய பொருளாதார நாடாக இருக்கும் என பைனான்சியல் டைம்ஸ் பத்திரிக்கையின் தலைமை பொருளாதார வர்ணனையாளர் மார்ட்டின் வுல்ஃப் கூறியுள்ளார்.

இந்திய பொருளாதாரம்
இந்திய பொருளாதாரம்

உலக பொருளாதார கூட்டமைப்பின் வருடாந்திர கூட்டம் ஐரோப்பாவில் உள்ள தாவோசு நகரில் கடந்த 16-ம் தேதி முதல் 20 தேதி வரை நடைபெற்றது. இந்த கூட்டத்தின் இந்த ஆண்டு கரு "Cooperation in a Fragmented World” ஆகும்.

இந்த கூட்டத்தில் 130 உலகநாடுகளில் இருந்து சுமார் 2,700 தலைவர்கள் கலந்து கொண்டார்கள். இந்த கூட்டத்தில் பொருளாதார நெருக்கடி, எரிப்பொருள் மற்றும் உணவு நெருக்கடி, மக்கள்தொகை அதிகரிப்பு, காலநிலை மாற்றம் ஆகியவை விவாதிக்கப்பட்டது.

தலைமை பொருளாதார வர்ணனையாளர் மார்ட்டின் வுல்ஃப்
தலைமை பொருளாதார வர்ணனையாளர் மார்ட்டின் வுல்ஃப்

இந்த கூட்டத்தில் இந்தியாவை குறித்து பைனான்சியல் டைம்ஸ் பத்திரிக்கையின் தலைமை பொருளாதார வர்ணனையாளர் மார்ட்டின் வுல்ஃப், "நான் இந்தியாவை 70-களில் இருந்து பின்தொடர்கிறேன். அடுத்த 10-20 ஆண்டுகளில் இந்தியா வேகமாக வளரும் பெரிய பொருளாதார நாடாக இருக்கும். மேலும் வணிகம் மற்றும் அது போன்ற பிற துறைகளில் இந்தியாவிற்கு அதிக முக்கியத்துவம் தராதவர்கள் உலக நடப்பை சரியாக புரிந்துகொள்ளதவர்கள் என்று நான் நினைக்கிறேன்." என்று கூறியுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார நடவடிக்கைகள் அனைத்தும் தற்போது இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்றுள்ளது. மேலும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளில் இருந்துக்கூட இந்தியா வெகுவாக மீண்டுள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.