Published:Updated:

பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வு: அதிகரிக்கும் விலைவாசி; அச்சத்தில் மக்கள்..!

பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

பாகிஸ்தானில் இதுவரை இல்லாத அளவுக்கு எரிபொருள் விலை அதிகரித்துள்ளது. பெட்ரோல் விலை பிகேஆர் 272-ஆகவும், டீசல் பிகேஆர் 280-ஆகவும் உயர்ந்துள்ளது, அந்நாட்டு மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் இதுவரை இல்லாத அளவுக்கு எரிபொருள் விலை அதிகரித்துள்ளது. பெட்ரோல் விலை பிகேஆர் 272-ஆகவும், டீசல் பிகேஆர் 280-ஆகவும் உயர்ந்துள்ளது. இந்த விலையேற்றம் அந்நாட்டு மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு ( பிப்ரவரி 16 )
பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு ( பிப்ரவரி 16 )

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முக்கியமான கடனைப் பெறுவதற்கான முயற்சியில், பெட்ரோல் மற்றும் எரிவாயுவின் விலையை 113 சதவிதமாக பாகிஸ்தான் அரசு உயர்த்தியுள்ளது.

7 பில்லியன் டாலர் நீட்டிக்கப்பட்ட நிதிவசதியைப் (EFF -  Extended Fund Facility) புதுப்பித்ததற்காக ஐ.எம்.எஃப்-யைத் திருப்திப்படுத்தும் முயற்சியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.22.20 உயர்த்தப்பட்டுள்ளது.

அண்மையில் பாகிஸ்தான் எண்ணெய் மற்றும் எரிவாயு ஒழுங்குமுறை ஆணையத்தின் (OGRA) அறிவிப்பின்படி, உள்நாட்டு நுகர்வோர் உள்பட பல்வேறு துறைகளுக்கு எரிவாயு விலை 16 சதவிகிதத்தில் இருந்து 113 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த உயர்வுக்குப் பிறகு, பெட்ரோல் விலை லிட்டருக்கு பிகேஆர் 272, அதிவேக டீசல் (HSD) லிட்டருக்கு பிகேஆர் (அந்நாட்டு மதிப்பில்) 280-க்கு விற்கப்படுகிறது.

மறுபுறம், மண்ணெண்ணெய் மற்றும் லேசான டீசல் எண்ணெய் முறையே லிட்டருக்கு பிகேஆர் 202.73 மற்றும் பிகேஆர் 196.68-க்கு விற்கப்படுகிறது.

இந்த பெட்ரோல் மற்றும் எரிவாயு விலை உயர்வு நேற்று முன்தினம் பிப்ரவரி 16-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு
பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

பெட்ரோல், டீசல் மட்டுமின்றி, மண்ணெண்ணெய் விலையும் லிட்டருக்கு ரூ.2.56 ரூபாய் அதிகரித்து, ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விலை பிகேஆர் 190.29 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

அமெரிக்கா டாலருக்கு நிகரான பாகிஸ்தானின் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிந்த நிலையில் அந்நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பும் மிக மோசமாக குறைந்துள்ளது.

ஏற்கெனவே பாகிஸ்தானில் அத்தியாவசியப் பொருள்கள், உணவு பொருள்களின் விலையும் வாங்க முடியாத அளவுக்கு அதிகரித்து வரும் நிலையில், இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பால், இறைச்சி போன்ற உணவு பொருள்களின் விலை மேலும் அதிகரித்துள்ளது.

ரம்ஜான் பண்டிகை காலத்தில் ஏற்பட்டுள்ள இந்த விலை உயர்வு பாகிஸ்தான் மக்களுக்கு அதிக சுமையை ஏற்படுத்தியுள்ளது.