Published:Updated:

சின்னம்மா வெளியே வரட்டும்'- வெடித்த வார்த்தைகளும் கிளம்பிய ஆத்திரமும்!

சசிகலா
சசிகலா

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்குறித்து, கடந்த வாரம் கோட்டையில் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வரும் சுகாதாரத் துறை அமைச்சரும் ஆலோசனை நடத்தினர்

எடுத்த எடுப்பிலேயே செய்திக்குத் தாவிய கழுகார், ''கடந்த 25.12.2019 தேதியிட்ட ஜூ.வி-யில் '2000 கோடி டெண்டர்... ஆட்டுவிக்கும் பெரும்புள்ளி... ஐ.ஏ.எஸ் போர்க்கொடி' என்று எக்ஸ்க்ளூசிவ் கட்டுரையை வெளியிட்டிருந்தோம். பாரத்நெட் என்ற பெயரில் கிராமப் பஞ்சாயத்துகளுக்கு அதிவேக இணைய சேவையை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.

அதுதொடர்பாக டெண்டர் விடும் விவகாரத்தில் நடந்த உள்விவகாரங்களை அம்பலப்படுத்திய அந்தக் கட்டுரை, பெருவாரியாக கவனம் ஈர்த்தது. கட்டுரையில், `விதிமுறைகளை மீறி குறிப்பிட்ட தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை அளிக்க, சம்பந்தப்பட்ட துறையின் உயர் அதிகாரி மறுப்பு தெரிவித்து கையெழுத்துப் போட மறுத்துவிட்டார்' என்று தகவல் சொல்லியிருந்தோம்.

சொன்னது போலவே சில தினங்களில் தகவல் தொழில்நுட்ப துறைச் செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ் பாபு விருப்ப ஓய்வுக்கு மனு கொடுத்துவிட்டார்."

"ம்ம்ம்... கோட்டையில் முதல்வர் தரப்புக்கும் அமைச்சர் விஜயபாஸ்கர் தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக பேச்சுகள் எழுந்துள்ளனவே?"

சின்னம்மா வெளியே வரட்டும்'- வெடித்த வார்த்தைகளும் கிளம்பிய ஆத்திரமும்!

"கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்குறித்து, கடந்த வாரம் கோட்டையில் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வரும் சுகாதாரத் துறை அமைச்சரும் ஆலோசனை நடத்தினர். அப்போது ரேபிட் டெஸ்ட் கருவிகள் கொள்முதல் தொடர்பாக பேச்சு திரும்பியுள்ளது.

'ஐ.சி.எம்.ஆர் பட்டியலிலேயே இல்லாத ஷான் பயோடெக் நிறுவனம்மூலம் எப்படி இறக்குமதி செய்தீர்கள்?' என விஜயபாஸ்கர் தரப்பிடம் முதல்வர் தரப்பு கேட்டுள்ளது."

"நியாயமான கேள்விதானே!"

"உமக்குத் தெரிகிறது... ஆனால் அமைச்சர் தரப்பிலோ, 'எல்லாம் உங்களுக்குத் தெரிந்துதானே நடந்தது' என்று காட்டமாக பதில் வந்ததாம். தொடர்ந்து, 'எவ்வளவு கருவிகள் திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றன?' என்ற கேள்விக்கு, 'ஐ.சி.எம்.ஆர் கொடுத்த 12,000 கருவிகளை திருப்பி அனுப்பிவிட்டோம். சீனாவிலிருந்து இறக்குமதி செய்த 24,000 கருவிகளில் சில ஆயிரம் கருவிகளைப் பயன்படுத்திவிட்டோம்' என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சசிகலா
சசிகலா

இதுதொடர்பிலும் முதல்வர் தரப்புக்கும் அமைச்சர் தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாம். அப்போதுதான் அமைச்சர் தரப்பிலிருந்து, 'சின்னம்மா வெளியே வரட்டும்' என்கிறரீதியில் வார்த்தைகள் வெடித்தனவாம். இதுதான் எடப்பாடி தரப்பை ஆத்திரமடையவைத்துள்ளதாம்."

- இவை வெறும் டீசர்தான். மிஸ்டர் கழுகு திரட்டிய எக்ஸ்க்ளூசிவ் தகவல்களை மொத்தமாக ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க > மிஸ்டர் கழுகு: நெட்... ரோடு... கிட் - கொரோனாவுக்கு நடுவே ஊழல் குஸ்தி! https://bit.ly/3fsYkuL

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு