Published:Updated:

சி.பி.ஐ விசாரணை கேட்டு புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரதம்

சி.பி.ஐ விசாரணை கேட்டு புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரதம்
சி.பி.ஐ விசாரணை கேட்டு புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரதம்

சி.பி.ஐ விசாரணை கேட்டு புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரதம்

புதிய துணைவேந்தரை நியமித்தல் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி, புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரி காலாப்பட்டில் இயங்கிவருகிறது, மத்தியப் பல்கலைக் கழகம். இந்தியா முழுவதிலுமிருந்து சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இங்கு தங்கிப் பயின்றுவருகின்றனர். அவர்கள் தங்குவதற்கு, பல்கலைக்கழக வளாகத்துக்குள் தனித்தனியே விடுதிகளும் இருக்கின்றன. இந்நிலையில், 'அகில பாரதிய வித்யார்த்த பரிஷத்' அமைப்பைச் சார்ந்த மாணவர்கள், ஊழலற்ற நேர்மையான துணைவேந்தர், சுத்தமான குடிநீர் மற்றும் விடுதி உணவுகள் உள்ளிட்டவற்றை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை உடனே செயல்படுத்த வேண்டும்,  ஊழல் குற்றச்சாட்டு புரிந்தவர்கள் மீது சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி கடந்த 29-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில், இதே கோரிக்கையை வலியுறுத்தி மாணவர்களில் மற்றொரு பிரிவினரும் தனியாகப் போராட்டம் செய்துவருகின்றனர். முதல் மற்றும் இரண்டாவது நுழைவு வாயில்களைத் திறந்துவைக்க வேண்டும், அனைத்துத் துறைகளிலும் கம்ப்யூட்டர் கூடத்தை அதிகரிக்க வேண்டும், நாடகத்துறைக்குப் புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த  இரண்டு நாள்களாக வகுப்புகளைப் புறக்கணித்து, மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்திவந்தனர். அதையடுத்து, மாணவர்களின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தது. ஆனால், நிர்வாகம் சொன்னபடி அப்படி எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று குற்றம் சுமத்திய மாணவர்கள், பல்கலைக்கழகத்தின் முதல் மற்றும் இரண்டாவது வாயில்களுக்கு பூட்டுப் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, பல்கலைக்கழக ஊழியர்கள் சில மணி நேரம் வெளியே நிறுத்தப்பட்டனர். அதன்பிறகு காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின், மாணவர்கள் கலைந்துசென்றனர். ஆனால், அலுவலக அறையிலிருந்து வெளியேறி காரில் ஏறிய துணைவேந்தர் அனிஷா பஷீர்கானை முற்றுகையிட்டு, அவரைச் செல்லவிடாமல் மாணவர்கள் தடுத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு