Published:Updated:

பெரியார் பல்கலைக்கழகத் துணை வேந்தர் தேர்வுக் குழுவை ரத்துசெய்ய வேண்டும்..! கல்வியாளர்கள் கோரிக்கை

பெரியார் பல்கலைக்கழகத் துணை வேந்தர் தேர்வுக் குழுவை ரத்துசெய்ய வேண்டும்..! கல்வியாளர்கள் கோரிக்கை

பெரியார் பல்கலைக்கழகத் துணை வேந்தர் தேர்வுக் குழுவை ரத்துசெய்ய வேண்டும்..! கல்வியாளர்கள் கோரிக்கை

பெரியார் பல்கலைக்கழகத் துணை வேந்தர் தேர்வுக் குழுவை ரத்துசெய்ய வேண்டும்..! கல்வியாளர்கள் கோரிக்கை

பெரியார் பல்கலைக்கழகத் துணை வேந்தர் தேர்வுக் குழுவை ரத்துசெய்ய வேண்டும்..! கல்வியாளர்கள் கோரிக்கை

Published:Updated:
பெரியார் பல்கலைக்கழகத் துணை வேந்தர் தேர்வுக் குழுவை ரத்துசெய்ய வேண்டும்..! கல்வியாளர்கள் கோரிக்கை

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் பதவி தற்போது காலியாக இருக்கிறது. அந்தப் பதவியை நிரப்புதற்காக உயர் கல்வித்துறை முன்னாள் செயலாளர் ஶ்ரீதர் தலைமையில் குழு தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. அந்தக் குழு நேர்முகத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதில் முறைகேடு நடந்திருக்கிறது. அதனால், அந்தக் குழுவை நீக்க வேண்டும். எனப் பலரும் குரல் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

இதுபற்றி பல்கலைக்கழகத்தில் உள்ளவர்களிடம் விசாரித்தோம், ''பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சுவாமிநாதனின் பதவிக் காலம் கடந்த ஜூன் மாதத்தோடு நிறைவு பெற்றதால் தற்போது பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பதவி காலியாக இருந்து வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமனம் செய்ய  உயர் கல்வித்துறை முன்னாள் செயலாளர் ஶ்ரீதர் தலைமையில் 3 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டிருக்கிறது. தற்போதைய நிலவரப்படி ஒரு துணைவேந்தர் பதவிக்கு 30 முதல் 35 கோடி ரூபாய் வரை விலை போவதாகக் கூறப்படுகிறது. 

இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் தன்மீது வந்துவிடக் கூடாது என்பதற்காக இந்தக் குழு, துணை வேந்தர் தேர்வு ஒளிவு மறைவு இல்லாமல் இருக்க வேண்டும் என்று பல்கலைக்கழகத்தின் இணையதளம் மூலமாக அறிவிக்க முடிவெடுத்தது. அதையடுத்து ஆரம்பத்தில் துணைவேந்தர் பதவிக்கு 194 பேர் விண்ணப்பித்து இருப்பதாகப் பல்கலைக்கழகத்தின் இணையதளம் மூலமாக அறிவித்தது. அதன் பிறகு என்ன நினைத்தார்களோ தெரியவில்லை மேற்கொண்டு துணைவேந்தர் தேர்வு பற்றி எந்த ஒரு பதிவும் இணையதளத்தில் பதிவிடவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

194 பேரிலிருந்து 40 பேராகக் குறைத்து அதன் பிறகு 40 பேரிலிருந்து 10 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு இமெயில் மூலம் நேர்முகத் தேர்வுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்கள். வரும் 23-ம் தேதி நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. இந்த நேர்முகத் தேர்வுக்கு ஆட்கள் தேர்வு செய்வதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது.

பல்கலைக்கழக விதிப்படி துணை வேந்தராக தேர்வு செய்யப்பட இருப்பவர் 10 ஆண்டுகள் பேராசிரியராகவோ அல்லது 20 ஆண்டுகள் ஆசிரியராகவோ இருக்க வேண்டும். பல ஆய்வுக் கட்டுரைகள், பல நூல்களை வெளியிட்டிருக்க வேண்டும். வெளி நாட்டில் கருத்தரங்கம், சிறப்பு சொற்பொழிவுகள் ஆற்றிருக்க வேண்டும். மத்திய, மாநில வெளிநாட்டு நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்து ஆராய்ச்சி செய்திருக்க வேண்டும். அதிகளவில் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்களை உருவாக்கி இருக்க வேண்டும். 

இந்த துணைவேந்தர் தேர்வுக் குழு இதை எதையும் பின்பற்றவில்லை. இந்தத் தேர்வுக் குழுவின் தலைவராக இருக்கும் ஶ்ரீதர் உயர்கல்வித் துறைச் செயலாளராக இருக்கும்போது திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தின் துணை வேந்தர் மீனாவோடு நெருக்கமாக இருந்து கொண்டு மீனா செய்த ஊழலைக் கண்டுகொள்ளாமல் இருந்ததால் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, ஶ்ரீதரை வேறு துறைக்கு மாற்றினார்.

அப்படிப்பட்ட ஶ்ரீதர் தான் இந்தத் தேர்வுக் குழுவின் தலைவராக இருக்கிறார். இவர் நேர்முகத் தேர்வுக்கு தேர்ந்தெடுத்தவர்களில் 10 பேரில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான மீனா, ஆசிரியராக இல்லாத உடற்கல்வி இயக்குநராகவும், உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு  நிலுவையில் உள்ள அங்கமுத்து ஆகியோரை தேர்வு செய்திருக்கிறார். ஆனால், இந்தியாவில் உயர்கல்வித் துறையில் மிக உயரிய விருதான பட்னாகர் விருதுபெற்ற 4 பேரை முதற் சுற்றிலேயே அதாவது 194 இருந்து 40 பேராக குறைக்கும்போதே நீக்கியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட தேர்வுக் குழுவை நீக்க வேண்டும்'' என்று புலம்புகிறார்கள் கல்வியாளர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism