Published:Updated:

பெரியார் பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் யார்?

பெரியார் பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் யார்?
பெரியார் பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் யார்?

பெரியார் பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் யார்?

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கான துணைவேந்தர் சுவாமிநாதனின் பணிக்காலம் கடந்த ஜூன் மாதத்தோடு நிறைவு பெற்றதால் தற்போது அந்தப் பதவி காலியாக இருக்கிறது. இந்தப் பதவிக்கான ஆட்களை தேர்வு செய்ய முன்னாள் உயர்கல்வித்துறை செயலாளர் ஶ்ரீதர் தலைமையில் 3 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.

அதையடுத்து பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பதவிக்கு 194 பேர் விண்ணபித்து இருந்தார்கள். அதில் 40 பேராக குறைக்கப்பட்டு இறுதியாக 1.மீனா (பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர்), 2.குழந்தைவேல் (பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர்) 3.சேது குணசேகரன் (பெரியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர்), 4.ராஜேந்திரன் (பெரியார் பல்கலைக்கழகம் மேலாண்மை கல்வி நிலைய இயக்குநர்), 5. அங்கமுத்து (பெரியார் பல்கலைகழகத்தின் முன்னாள் பதிவாளர்), 6. பார்த்தசாரதி (பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர்), 7.பாஸ்கரன் (தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்), 8.வெங்கடாசலம் (வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்), 9.வேல்முருகன் (சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்), 10. ஜெயவேல் (அண்ணா பல்கலைகழக பேராசிரியர்) -என 10 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

இதில் அங்கமுத்து பெரியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் திடீரென மரணம் அடைந்ததால் 9 பேருக்கு இன்றும் நாளையும் சென்னை தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தில் நேர்காணல் நடைப்பெற உள்ளது. இதில் 3 பேரை தேர்வு செய்ய்யப்பட்டு கவர்னர் பன்வாரிலால் புரோஹித்திடம் கொடுக்கப்படுவார்கள். அவர் 3 பேரில் ஒருவரை தேர்ந்தெடுக்க உள்ளார்.

இதில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மீனா, பெரியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் சேது குணசேகரன், சென்னை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வேல்முருகன் ஆகிய 3 பேர் கவர்னர் பரிந்துறைக்கப்படவுள்ள லிஸ்டில் அனுப்ப அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கிறார்கள். 

அடுத்த கட்டுரைக்கு