Published:Updated:

'இனி பத்திரிகைகளுக்குச் செய்தி கொடுக்கக் கூடாது'- பெரியார் பல்கலை துணைவேந்தர் கறார் உத்தரவு

'இனி பத்திரிகைகளுக்குச் செய்தி கொடுக்கக் கூடாது'- பெரியார் பல்கலை துணைவேந்தர் கறார் உத்தரவு
'இனி பத்திரிகைகளுக்குச் செய்தி கொடுக்கக் கூடாது'- பெரியார் பல்கலை துணைவேந்தர் கறார் உத்தரவு

'இனி பத்திரிகைகளுக்குச் செய்தி கொடுக்கக் கூடாது'- பெரியார் பல்கலை துணைவேந்தர் கறார் உத்தரவு

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் ஆதாரத்தோடு தொடர்ந்து வெளியிட்டு வருவதையடுத்து நேற்று பெரியார் பல்கலைக்கழத்தின் துணைவேந்தர் குழந்தைவேல், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டத்தை கூட்டி இனி பத்திரிகையாளர்களுக்குச் செய்தி கொடுக்கக் கூடாது என்று கறார் உத்தரவு போட்டிருக்கிறார்.

இதுபற்றி பெரியார் பல்கலைக்கழக வட்டாரத்தில் கேட்டபோது, ''சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடக்கும் சம்பவங்கள் பற்றி பத்திரிகைகளில் தொடர்ந்து செய்திகள் வந்துகொண்டிருக்கிறது. துணை வேந்தர் குழந்தைவேல் பதவியேற்ற பிறகு பல்கலைக்கழக எரிசக்தித்துறை இணை பேராசிரியர் ரமேஷ் குமார் மாணவர்கள் குறை தீர்க்கும் மைய ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்தார். துணைவேந்தரின் இந்த முதல் நியமனத்திலேயே பல ஊழல்கள் நடந்திருப்பது பற்றி செய்தி வெளிவந்தது. குறிப்பாக விகடன் டாட்.காமில் துணைவேந்தர் வழங்கிய நியமன ஆணை நகல் வெளியிட்டிருந்தார்கள்.

அதையடுத்துதான் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டத்தை கூட்டினார். நேற்று மாலை 4 முதல் 4.30 வரை பழைய அறிவியல் கூடம் கருத்தரங்கத்தில் கால முறை பணியாளர்கள் கூட்டத்தையும், மாலை 4.30 முதல் 5 மணி வரை கலையரங்கத்தில் தொகுப்பூதிய ஊழியர்கள் கூட்டத்தையும் கூட்டினார். இக்கூட்டத்தில் பேசிய துணைவேந்தர், ''அனைத்து ஊழியர்களின் கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும். பல்கலைக்கழகத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல வேண்டும். அதனால் உங்களுடைய ஒவ்வொருவரின் ஒத்துழைப்புகளும் அவசியம் தேவைப்படுகிறது.

அலுவலர்கள் எவ்வித குறையும் இல்லாமல் நிம்மதியாகப் பணியாற்ற அனைத்து உதவிகளும் மேற்கொள்ளப்படும். பல்கலைக்கழகத்தில் நடக்கும் சம்பவங்களை பத்திரிகைகளுக்குச் சொல்லக் கூடாது. இங்கு நடக்கும் சம்பவங்களை பத்திரிகைகளுக்குச் சொன்னால் தன்னுடைய தாய், தந்தையை அசிங்கப்படுத்துவது போல் ஆகி விடும். எரிசக்தி துறை இணைப் பேராசிரியர் ரமேஷ்குமார் என்ன சமுதாயத்தை சேர்ந்தவர் என்று தெரியாது. ஆனால் பத்திரிகையாளர்கள் அவர் என்ன சமுதாயத்தை சேர்ந்தவர் என்பது முற்கொண்டு எழுதுகிறார்கள் என்றால் இங்கு இருப்பவர்கள்தாம் அவர்களுக்குத் தகவல் கொடுக்கிறார்கள். இனி பத்திரிகையாளர்களுக்குத் தகவல் கொடுக்கக் கூடாது'' என கறார் உத்தரவு போட்டார்.

அடுத்த கட்டுரைக்கு