Published:Updated:

தொழிற்கல்வி பயிலும் ஏழை மாணவர்களுக்கு அரசின் இனிப்பான செய்தி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தொழிற்கல்வி பயிலும் ஏழை மாணவர்களுக்கு  அரசின் இனிப்பான செய்தி!
தொழிற்கல்வி பயிலும் ஏழை மாணவர்களுக்கு அரசின் இனிப்பான செய்தி!

தொழிற்கல்வி பயிலும் ஏழை மாணவர்களுக்கு அரசின் இனிப்பான செய்தி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தொழிற்கல்வி பயிலும் ஏழை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை ரூ.25,000-த்திலிருந்து ரூ.50,000-மாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

2003-ம் ஆண்டு, தொழிற்கல்வி பயிலும் ஏழை மாணவர்களுக்கு அவர்களின் படிப்பைத் தொடர முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு, ஒவ்வொரு வருடமும் மிகவும் வறிய நிலையில் உள்ள ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு அவர்கள் படிக்கும் காலத்தில் ஒருமுறை மட்டும் தலா ரூ.25,000 வழங்கவும் அதற்கான நெறிமுறைகளும் வகுக்கப்பட்டன. பிறகு இப்பயனாளிகளின் எண்ணிக்கையை 100-லிருந்து 200 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டது.

மேலும், 2015-16-ம் கல்வியாண்டு முதல் தொழிற்கல்வி பயிலுவதற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதி உதவி மூலம், கல்வி உதவி வழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பிக்க தகுதியுடைய மாணவர்களின் பெற்றோர்களின் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பை ரூ.50,000-த்திலிருந்து ரூ.72,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டது.

தொழிற்கல்வி பயிலும் ஏழை மாணவர்கள் தங்கள் படிப்பைத் தொடர முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கும் திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, தற்போது இந்நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் நிதியுதவி தொகையான ரூ.25,000-ஐ ரூ.50,000-மாக உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளார்கள். 

அத்துடன், முதல் பட்டதாரி சலுகை பெற்றிருப்பினும் தொழிற்கல்வி பயில இயலாத மிகவும் வறிய நிலையில் உள்ளவர்களும் தொழிற்கல்வி உதவித்தொகை பெற்றிட, மாவட்ட ஆட்சியரால் பரிந்துரைக்கப்பட்டு சிறப்பினமாகக் கருதப்படும் நிகழ்வுகளை ஆய்வு செய்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தொழிற்கல்வி உதவித்தொகை வழங்கவும் இந்த அரசாணை மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு