Published:Updated:

டி.என்.பி.எஸ்.சி க்ரூப் 4 மாதிரி வினாத்தாள் (விடைகளுடன்)

டி.என்.பி.எஸ்.சி க்ரூப் 4 மாதிரி வினாத்தாள் (விடைகளுடன்)
டி.என்.பி.எஸ்.சி க்ரூப் 4 மாதிரி வினாத்தாள் (விடைகளுடன்)

நாளை நடைபெற இருக்கிறது டி.என்.பி.எஸ்.சி க்ரூப் 4 தேர்வு.  இந்த தேர்வுக்கு எப்படி படிக்க வேண்டும், என்னென்ன மாதிரியாக கேள்விகள் வரும் என்பது குறித்த பல்வேறு விஷயங்கள் கடந்த சில நாட்களாக விகடன்.காமில் 'டி.என்.பி.எஸ்.சி க்ரூப் 4ல் ஜெயிக்கலாம் ஈசியா' என்ற தொடராக வெளிவந்தது. (அதை இந்த லிங்கில் படிக்கலாம்). அதையொட்டி தற்போது டி.என்.பி.எஸ்.சி க்ரூப் 4 க்கான மாதிரி வினாத்தாள் இது. இங்கு நூறு கேள்விகள் இருக்கின்றன. ஒவ்வொன்றிற்கும் பதில் அளிக்க முயற்சி செய்யுங்கள். கீழே விடைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. நீங்கள் எப்படி தயார் செய்திருக்கிறீர்கள் என்பதற்கான சின்ன சோதனைதான் இது. தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகள். 

டி.என்.பி.எஸ்.சி க்ரூப் 4 மாதிரி வினாத்தாள் (விடைகளுடன்)

TNPSC Group 4 Model Question Paper

1. உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழி -----------------------

அ) தமிழ் ஆ) ஆங்கிலம் இ) மாண்டரின் ஈ)  பிரெஞ்ச் 

2. 1/8 என்பது எத்தனை சதவீதம்?

அ) 12 ½ % ஆ)  8% இ) 25%   ஈ) 24 ½ %

3. அரை வட்டத்தின் பரப்பளவு என்ன?

அ) πr2 ஆ)  1/2 πr2 இ) 2 πr2 ஈ) 2 πr

4. ஒக்கி புயலால் பலத்த சேதமடைந்த தமிழகத்தின் பகுதிகள் யாவை?

அ) சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர்

ஆ) சென்னை, காஞ்சிபுரம் மற்றும் புதுச்சேரி

இ)  கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் மதுரை

ஈ)  கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி

5. ஒளி ஓர் ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு செல்லும் நிகழ்வு

அ) எதிரொளிப்பு ஆ) ஒளிவிலகல் இ) நிறப்பிரிகை ஈ) படுகோணம்

6. இந்தியத் திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு -------------

அ) 1947 ஆ) 1949 இ) 1950 ஈ) 1951

7. x2+10x+21=0 என்ற சமன்பாட்டில் தீர்வு கணம் என்ன?

அ) {7, 3} ஆ)  {–7, 3}   இ)  {7, -3}  ஈ) {–7, –3}

8. குதுப்மினாரை கட்டத்தொடங்கியவர் யார்?

அ) இல்டுமிஷ் ஆ) குத்புதின் ஐபெக்  இ) ரசியா  ஈ) பால்பன்

9. சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தைத் தோற்றுவித்தவர் ---------------

அ) பெரியார்  ஆ) வள்ளலார் இ) ஔவையார் ஈ) விவேகானந்தர்

10. இராஜ்ய சபா உறுப்பினர்களின் பதவிக்காலம் ---------------- ஆண்டுகள்.

அ) 4 ஆ)  5 இ) 6 ஈ)  7

11. மனிதன் அறிந்த முதல் உலோகம் எது?

அ) தங்கம் ஆ) செம்பு    இ) வெள்ளி ஈ) இரும்பு

12. எந்த நதிக்கரையில் அதிக அளவில் சணல் தொழிற்சாலைகள் காணப்படுகின்றன?

அ) கங்கை ஆ)  காவேரி இ) சிந்து ஈ) ஹுக்ளி

13. முதல் தரெய்ன் போர் நடைப்பெற்ற ஆண்டு ------------------------

அ)  1191 ஆ)  1192 இ) 1193 ஈ)  1195

14. ’குயில்’ இதழின் ஆசிரியர் யார்?

அ) பாரதியார் ஆ)  பாரதிதாசன்   இ) கண்ணதாசன் ஈ)  வாலி

15. ஐ.நா.வின் கொடியில் எம்மரத்தின் இலைகள் இடம் பெற்றுள்ளன?

அ) ஆலிவ் ஆ)   ஆப்பிள் இ) யூகலிப்டஸ் ஈ)  அரசமரம்

16. மனிதனின் இரத்தச் சிவப்பணுக்கள் உருவாகும் இடம் ----------------

அ) எலும்பு மஜ்ஜை ஆ)  மண்ணீரல்    இ) கல்லீரல் ஈ) மூளை

17. எலக்ட்ரான் ஏற்கும் வினை என்பது ------------------

அ) ஆக்ஸிஜனேற்றம் ஆ) பிளவுறுதல் இ)  சிதைவுறுதல்  ஈ) ஒடுக்கம்

18. மாவட்ட நீதிபதிகளை நியமிப்பது யார்?

அ) ஜனாதிபதி  ஆ) முதல்வர்   இ) ஆளுநர்   ஈ)  உயர்நீதிமன்ற நீதிபதி

19. இரு எண்களின் கூடுதல் 60. அவற்றின்  வித்தியாசம் 8 எனில், அந்த எண்கள் என்ன?

அ) 32, 40 ஆ)  35, 25 இ)  34, 26 ஈ) 32, 24

20. எந்த ஆண்டில் வரதட்சணை தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டது?

அ) 1961 ஆ)  2002 இ) 1963 ஈ)  2005

21. 7 செ.மீ. ஆரமும் 24 செ.மீ. உயரமும் கொண்ட கூம்பின் கன அளவு ---------

அ) 368π செ.மீ3 ஆ)  392π செ.மீ3 இ) 796π செ.மீ3 ஈ)  794π செ.மீ3

22. கரீபீ ஹட்டா என்பதன் பொருள் என்ன?

அ) விலையிறக்கம்  ஆ) வேலையின்மை  இ) சேவைகள்  ஈ) வறுமை அகற்றல்

23. இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுவது எது?

அ) சென்னை ஆ)  குஜராத் இ) பனாரஸ் ஈ)  மும்பை

24. ஒரு உலோகக் கலவையில் 30% தாமிரம், 40% துத்தநாகம், மீதி நிக்கல் உள்ளது. 20 கி.கி உள்ள இந்த உலோகக் கலவையில் நிக்கலின் அளவு யாது?

அ) 5 கி.கி ஆ)  4 கி.கி  இ) 6 கி.கி ஈ)  3 கி.கி

25. 2 : 9 :: X : 18 எனில் X ன் மதிப்பைக் காண்க

அ) 4 ஆ) 36 இ) 29 ஈ) 8

26. முதல் அரசியல் நிர்ணய சபை மாநாடு எப்பொழுது நடைப்பெற்றது?

அ) 09.12.1946 ஆ) 15.08.1947 இ) 26.11.1949  ஈ) 26.01.1950

27. சுதந்திர இந்தியாவின் முதல் கவ்னர் ஜெனரல் -------------------------

அ) இராஜாஜி   ஆ) வில்லியம் பெண்டிங்

இ) மவுண்ட் பேட்டன் ஈ)  கானிங் பிரபு

28. பருப்பொருளின் நான்காவது நிலை எது?

அ) சூப் ஆ) பழச்சாறு இ) ஐஸ்     ஈ) பிளாஸ்மா

29. பனிக்கட்டியின் உருகுநிலை என்ன?

அ) 1000 C ஆ) 00 C இ) 100 C ஈ) -100 C

30. 2008 ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் உசேன் போல்ட் 100 மீ தொலைவை எத்தனை வினாடிகளில் ஓடி சாதனை படைத்தார்?

அ) 19.19 ஆ)  19.6 இ) 9.6 ஈ) 6.6

31. காற்றின் வேகத்தை அளவிடப் பயன்படும் கருவி ----------------------

அ) அம்மீட்டர்  ஆ) அனிமோமீட்டர்    இ) ஹைட்ரோ மீட்டர்

ஈ) ஆல்டி மீட்டர்

32. சிக்கி முக்கி கற்களை உரசி நெருப்பைக் கண்டுபிடித்தது ---------------- மனிதன்

அ) பழைய கற்கால ஆ)  புதிய கற்கால இ) உலோக கால

ஈ) சங்க கால

33. சூரியனின் ஒளியானது புவியை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரம்

அ) 500 வினாடி  ஆ) 520 வினாடி  இ) 800 வினாடி  ஈ) 820 வினாடி

34. ஹரப்பா நாகரிகம் எந்த நதிக்கரையில் அமைந்ததாக கூறப்படுகிறது.

அ) ராவி ஆ) பியாஸ் இ)  சட்லெஜ் ஈ) கங்கை

35. புவியீர்ப்பு முடுக்கத்தின் சராசரி மதிப்பு என்ன?

அ) 6.8 மீ/வி2 ஆ) 9.8 மீ/வி2 இ) 8.9 மீ/வி2 ஈ) 8.6 மீ/வி2

36. இந்திய அரசியலமைப்பின் முகவுரை மற்றும் அடிப்படை உரிமைகள் எந்நாட்டிலிருந்து பெறப்பட்டது?

அ) பிரான்ஸ் ஆ) அமெரிக்கா    இ)  ரஷ்யா ஈ) பிரிட்டன்

37. மூழ்கிய நீர்த்தாவரங்களுக்கு எடுத்துக்காட்டு -----------------

அ) சூரிய காந்தி  ஆ) ஆகாயத்தாமரை இ) தாமரை

ஈ)  வாலிஸ்னேரியா

38. பொருளின் நிறை மற்றும் அதன் திசைவேகத்தின் பெருக்கற்பலன் -------------- எனப்படும்.

அ)  முடுக்கம் ஆ) நிலைமம்   இ) திருப்புத்திறன் ஈ) உந்தம்

39. ஜீனர் என்றால் ------------------------  ஆவார்

அ) மகாவீரர் ஆ) புத்தர்   இ)  வென்றவர் ஈ) ரிஷபர்

40. நீரில் கரையாத சில பொருட்கள் நீரை உள்ளெடுத்துக் கொண்டு உப்புகிற நிகழ்ச்சி -------------------------

அ) உறிஞ்சுதல் ஆ) பரவுதல்     இ) உள்ளீர்த்தல்    ஈ) சவ்வூடு பரவல்

41. தெலுங்கானா மாநிலம் எந்த சரத்தின் கீழ் உருவாக்கப்பட்டது?

அ) சரத்து 1 ஆ) சரத்து 2   இ) சரத்து 3    ஈ) சரத்து 4 

42. கல்லீரல் அழற்சி ஏற்படுவதற்கு முக்கிய காரணம்     --------------

அ) மது அருந்துதல் ஆ) புகை பிடித்தல்

இ) அளவுக்கதிமாக உணவு உண்ணுவதால் ஈ)  மனச்சோர்வு

43. இந்திய அரசியலமைப்பில் எந்த உரிமை சட்ட உரிமையாக்கப்பட்டுள்ளது?

அ)  கல்வி கற்கும் உரிமை ஆ)  சொத்துரிமை

இ)  அடிப்படை கடமைகள் ஈ) தீர்வு உரிமைகள்

44. யாருடைய காலத்தில் புத்த சமயம் மகாயானம், ஹீனயானம் என இரு பிரிவுகளாக பிரிந்தது?

அ) குப்தர் ஆ) அசோகர் இ) கனிஷ்கர் ஈ) பல்லவர்

45. எல்நினோவிளைவு என்பது --------------------

அ) ஒழுங்கற்ற காலநிலை மாற்றம் ஆ) புவி வெப்பமயமாதல் இ) ஒழுங்கற்ற மழைப்பொழிவு ஈ)  கடல் மட்டம் உயர்தல்

46. நவீன பொருளாதாரவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

அ) ஆடம் ஸ்மித் ஆ) J.M. கீன்ஸ் இ) ஆர்த்தர் லூயிஸ் ஈ) மால்தஸ் 

47. வளரும் நாடுகளுள் மக்கள் தொகை கொள்கையை முதன் முதலில் செயல்படுத்திய நாடு -------------------------

அ) பர்மா ஆ) இலங்கை   இ) பாகிஸ்தான் ஈ) இந்தியா 

48. மறு ஏற்றுமதி வணிகம் என்றால் என்ன?

அ) ஏற்றுமதி வணிகம்   ஆ)  இறக்குமதி வணிகம்

இ) ஏற்றுமதி இறக்குமதி வணிகம் ஈ) இவற்றில் எதுவுமில்லை

49. பிரவசி பாரதிய திவாஸ் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9 ஆம் நாள் கொண்டாடப்படுவது ஏன்?

அ) இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு அடித்தளமிட்ட நாள்

ஆ) பிரிட்டன் இந்தியருக்கு வாக்களிக்கும் உரிமை அளித்த நாள்

இ) இந்திய அரசியலமைப்பின் சட்ட வரைவிற்கு கையெழுத்திட்ட நாள் ஈ) காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு திரும்பி வந்த நாள்

50. இந்தியாவில் வறுமைக்கோட்டை நிர்ணயித்த கமிட்டி எது?

அ) நரசிம்மன் கமிட்டி ஆ) லக்காடா வாலா கமிட்டி

இ) ரங்கராஜன் கமிட்டி ஈ)  இவற்றில் எதுவுமில்லை

51. இந்திய அரசாங்கத்தின் உண்மையான தலைவர் யார்?

அ) பிரதமர் ஆ) ஜனாதிபதி இ)  சபாநாயகர்

ஈ)   மாநிலங்களவைத் தலைவர்

52. HDI என்பது ----------------------

அ) ஹிந்தி வளர்ச்சி நிறுவனம் ஆ) மனித வளர்ச்சி குறியிடு

இ) மனித வளர்ச்சி முதலீடு ஈ) இவற்றுள் எதுவுமில்லை

53. 11வது ஐந்தாண்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு ------------

அ) 2005 - 2010  ஆ) 2002 - 2007 இ) 2007 - 2012 ஈ) 2006 - 2011

54. இந்திய அரசியலமைப்பு கீழ்க்காணும் அதிகாரத்தை யாருக்கு வழங்குகிறது?

இராணுவ நீதிமன்றத்தால் வழங்கப்படும் தண்டனையிலிருந்து விடுவிக்கவும், அல்லது தண்டனையை குறைக்கவும், மாற்றவும் அல்லது குற்றத்தை மன்னிக்கும் அதிகாரம்.

அ) இராணுவ தளபதி ஆ) உச்சநீதிமன்ற நீதிபதி

இ) முப்படைத் தளபதி ஈ) யாருக்கும் அதிகாரமில்லை

55. உலகில் தோன்றிய முதல் உயிரி எது?

அ) வைரஸ்     ஆ) பாக்டீரியா இ) பூஞ்சை

ஈ)   இவற்றுள் எதுவுமில்லை

56. யாருடைய காலத்தில் அலெக்சாண்டர் இந்தியாவின் மீது படையெடுத்தார்?

அ) அசோகர் ஆ) கனிஷ்கர் இ) தனநந்தர் ஈ) சிசுநாகர்

57. இந்தியாவின் மாக்கியவல்லி என அழைக்கப்படுபவர் -----------------

அ) சாணக்கியர்   ஆ)  ஆர்யபட்டர் இ) காளிதாசர் ஈ) கம்பர்

58. ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பிரச்சினைகளில் யாருடைய தீர்ப்பு முடிவானது மற்றும் இறுதியானது?

அ) இந்தியத் தேர்தல் ஆணையம் ஆ) பன்னாட்டு நீதிமன்றம்

இ)  தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஈ) உச்ச நீதிமன்றம்

59. கீழ்வருவனவற்றுள் சரியானது எது?

அ) பண மசோதாவை மாநிலங்களவையில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட வேண்டும்

ஆ) பண மசோதாவை சபாநாயகரின் பரிந்துரைக்குப் பிறகே மக்களவையில் அறிமுகப்படுத்த முடியும்.

இ) பண மசோதாவை பாராளுமன்ற எந்த உறுப்பினரும் அறிமுகப்படுத்தலாம்

ஈ) மேற்கூறிய அனைத்தும் தவறானவை

60. விதி 112 என்பது -----------------

அ) அவசர சட்டம் ஆ) பண மசோதா இ) பட்ஜெட்

ஈ)  தேர்தல் அதிகாரம்

61. ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான, ஆனால் எதிர் திசையில் உள்ள ஓர் எதிர்வினை உண்டு.

அ) நியூட்டனின் முதல் விதி ஆ) நியூட்டனின் இரண்டாம் விதி

இ)  நியூட்டனின் மூன்றாம் விதி ஈ)  பாஸ்கல் விதி

62. வெப்ப ஆற்றலின் அலகு ------------------- ஆகும்.

அ) கெல்வின் ஆ) ஜூல் இ) செல்சியஸ் ஈ) இவையனைத்தும்

63. ஒலியின் அதிர்வெண் 20,000 ஹெர்ட்ஸ்க்கு மேல் இருப்பின் அவை -------------எனப்படும்

அ) நெடுக்கம் ஆ) செவி உணரொலி இ)  குற்றொலி ஈ) மீயொலி

64. உள்ளூர் அரசாங்கத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

அ) ரிப்பன் பிரபு ஆ) கானிங் பிரபு   இ) டல்ஹௌசி   ஈ) கர்சன் பிரபு

65. குஷானர்கள் எந்த மரபைச் சார்ந்தவர்கள்?

அ) சுங்கர் ஆ) யூச்சி இ) நந்தர் ஈ) குப்தர்

66. பரிணாமக் கொள்கைவியலின் தந்தை -----------------

அ)  கிரிகார் மெண்டல் ஆ) ராபர்ட் ஹூக்

இ) லூயிஸ் பாஸ்டர் ஈ) சார்லஸ் டார்வின்

67. தேசிய மேம்பாட்டு ஆணையம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு ---------

அ) 1946 ஆ) 1947 இ) 1950 ஈ) 1952

68. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள் ---------------------- நூல்களாகும்

அ) பழைய கற்கால ஆ)  புதிய கற்கால இ) உலோக கால

ஈ) சங்க கால

69. இரத்தம் உறைதலுக்கு பயன்படும் விட்டமின் எது?

அ) விட்டமின் A ஆ) விட்டமின் C இ) விட்டமின் K

ஈ) விட்டமின் D

70. மனிதனின் மரபியல் நோய் என அழைக்கப்படுவது ---------------------

அ) நீரிழிவு ஆ) சிக்கில் செல் அனிமியா இ) பைலேரியா

ஈ) மஞ்சள் காமாலை

71. இரண்டாம் அசோகர் என அழைக்கப்படுபவர் யார்?

அ) கனிஷ்கர் ஆ) ரிஷபர் இ) மௌரியர்   ஈ) புஷ்யமித்திரர்

72. தமிழகத்தில் சட்டமேலவை நீக்கப்பட்ட ஆண்டு

அ) 1986 ஆ) 1988 இ)  1990 ஈ) 1991

73. உலர்பனி என்பது --------------

அ) சில்வர் நைட்ரேட் ஆ) சில்வர் அயோடைடு

இ) பொட்டாசியம் பாஸ்பேட் ஈ) திட கார்பன் டை ஆக்ஸைடு

74. 2003ஆம் ஆண்டின் அரசியலமைப்பு 91வது சட்டத்திருத்தத்தின் படி அமைச்சரவை மாநில சட்டமன்றத்தின் மொத்த உறுப்பினர்களில் எத்தனை சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்?

அ) 10% ஆ) 12% இ) 14% ஈ) 15%

75. இயற்கை வாயுவிலிருந்து தயாரிக்கப்படும் உரம் எது?

அ) நைட்ரஜன் வாயு உரம் ஆ) ஹைட்ரஜன் வாயு உரம்

இ) பொட்டாசியம் உரம் ஈ) அம்மோனியா உரம்

76. நமது நாட்டிலுள்ள தேசியப்பூங்காவின் எண்ணிக்கை ----------

அ) 98 ஆ) 88 இ) 89 ஈ) 79

77. பிற்கால சோழ மரபின் முதல் அரசர் -----------------------

அ) இராஜ இராஜ சோழன் ஆ) விஜயாலயச் சோழன்

இ) இராஜேந்திர சோழன் ஈ) கரிகாலன்

78. பான்ஸ், சிறுமூளை, முகுளம் ஆகியவை எங்கு காணப்படுகின்றன?

அ) முன்மூளை ஆ) பின்மூளை இ) நடுமூளை

ஈ) தண்டுவடம்

79. நாளமில்லா சுரப்பிகளின் அரசன் யார்?

அ) தைராய்டு ஆ) அட்ரினல் இ) இன்சுலின் ஈ) பிட்யூட்டரி

80. கீதகோவிந்தத்தை எழுதியது -------------------

அ) ஜெயதேவர் ஆ) பிருத்விராசன் இ) பத்மனந்தர்

ஈ) ரிஷபர்

81. நாடாளுமன்றத்திலும் சட்டப்பேரவையிலும் மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெண்களுக்கென்றே ஒதுக்க வழிவகை செய்யும் அரசியல் சட்ட திருத்தம்

அ) 108 ஆ) 110 இ) 112) ஈ) 100

82. இந்தியாவின் முதல் ரயில்வே பல்கலைக்கழகம் அமைந்த இடம்  

அ) குஜராத் ஆ) ஆந்திரா இ) பூனா ஈ) சென்னை 

83. பெண் குழந்தைகள் கடத்தலை தடுக்கும் மேற்கு வங்க அரசின் திட்டம்

அ) ஆதித்ய Sri ஆ) கன்யா Sri இ) பூஜ்ய Sri ஈ) தன்ய Sri

84. இந்தியாவில் துருக்கியர் ஆட்சி ஏற்பட காரணமான போர் எது?

அ) தரெய்ன் போர் ஆ) பிளாசிப்போர்

இ) பக்சார் போர் ஈ) பானிபட் போர்

85. சர்வதேச விமான கண்காட்சி நடைபெறும் இடம்

அ) ஹைதராபாத் ஆ) பெங்களூரு

இ) கொச்சின் ஈ)  சென்னை 

86. லண்டனில் உருவாக்கப்பட்டுள்ள உயிரியல் பூங்கா, இந்தியாவின் எந்த சரணாலயம் போன்றே உருவாக்கப்பட்டுள்ளது  

அ) வண்டலூர் ஆ) காசிரங்கா இ) முதுமலை ஈ) கிர்

87. இந்தியாவில் முதன் முதலாக பாரத ரத்னா விருது பெற்றபெண்மணி

அ) சரோஜினி நாயுடு ஆ) இந்திரா காந்தி   

இ) அன்னை தெரசா ஈ) எம்.எஸ். சுப்புலஷ்மி

88. மக்களவையை கலைக்க அதிகாரம் படைத்தவர்

அ) நிதியமைச்சர்  ஆ) பிரதமர் இ) ஜனாதிபதி ஈ) சபாநாயகர்

89. தேசிய பங்கு மாற்றகம் எங்குள்ளது?

அ) ஹைதராபாத் ஆ) பெங்களூரு

இ) டெல்லி ஈ)  மும்பை 

90. இந்தியாவில் முதன் முதலில் எந்த மாநிலத்தில் ஊராட்சி அரசாங்கம் அறிமுகப்படுத்தப்பட்டது?

அ) குஜராத் ஆ) ஆந்திரா இ) இராஜஸ்தான் ஈ) தமிழ்நாடு

91. டெல்லியை ஆண்ட ஒரே பெண் சுல்தான் யார்?

அ) ரசியா ஆ) மும்தாஜ் இ) நூர்ஜஹான் ஈ) ஜான்சி

92. பருத்தி சாகுபடிக்கு ஏற்ற மண் ----------------

அ) வண்டல் மண் ஆ) கரிசல் மண் இ) செம்மண்  

ஈ) துருக்கல் மண்

93. 42வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?

அ) 1947 ஆ) 1982 இ) 1950 ஈ) 1976

94. எச்.ஐ.வி. வைரஸின் வடிவம்

அ) சதுரம் ஆ) உருளை இ) முக்கோணம் ஈ) கோளம்

95. தமிழகத்தில் ஸ்டெம் செல் ஆராய்ச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம் எது?

அ) தேனி ஆ) வேலூர்  இ) மதுரை ஈ) சென்னை

96. கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எது ஐக்கிய நாடுகள் சபையில் நிரந்தர உறுப்பு நாடு அல்ல?

அ) அமெரிக்கா ஆ)  இந்தியா  இ) பிரான்ஸ் ஈ) இங்கிலாந்து

97. ஒக்கி புயலால் பலத்த சேதமடைந்த தமிழகத்தின் பகுதிகள் யாவை?

அ) சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர்

ஆ) சென்னை, காஞ்சிபுரம் மற்றும் புதுச்சேரி

இ)  கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் மதுரை

ஈ)  கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி

98. ஒளி ஓர் ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு செல்லும் நிகழ்வு

அ) எதிரொளிப்பு ஆ) ஒளிவிலகல் இ) நிறப்பிரிகை ஈ) படுகோணம்

99. நவீன வர்த்தகத்தின் உயிர்நாடியாக செயல்படுவது --------------------

அ) வங்கிகள்  ஆ) வேளாண்மை  இ) போக்குவரத்து  ஈ) தொழில்துறை

100. இந்தியாவிற்கு வருகை புரிந்த முதல் அமெரிக்க அதிபர் யார்?

அ) எய்சன்ஹோவர்  ஆ) ஒபாமா இ) கென்னடி  ஈ) ஜார்ஜ் புஷ்

விடைகள்:

1. இ) மாண்டரின்

2. அ) 12 ½ %

3. ஆ)  1/2 πr2

4. ஈ)  கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி

5. ஆ) ஒளிவிலகல்

6. இ) 1950

7. ஈ) {–7, –3}

8. ஆ) குத்புதின் ஐபெக்  

9. ஆ) வள்ளலார்

10. இ) 6

11. ஈ) இரும்பு

12. ஈ) ஹுக்ளி

13. அ) 1191

14. ஆ) பாரதிதாசன்

15. அ) ஆலிவ்

16. அ) எலும்பு மஜ்ஜை

17. ஈ) ஒடுக்கம்

18. இ) ஆளுநர்   

19. இ)  34, 26

20. அ) 1961

21. ஆ)  392π செ.மீ3

22. ஈ) வறுமை அகற்றல்

23. ஈ) மும்பை

24. இ) 6 கி.கி

25. அ) 4

26. அ) 09.12.1946

27. இ) மவுண்ட் பேட்டன்

28. ஈ) பிளாஸ்மா

29. ஆ) 00 C

30. இ) 9.6

31. ஆ) அனிமோமீட்டர்    

32. அ) பழைய கற்கால

33. அ) 500 வினாடி

34. அ) ராவி

35. ஆ) 9.8 மீ/வி2

36. ஆ) அமெரிக்கா

37. ஈ)  வாலிஸ்னேரியா

38. ஈ) உந்தம்

39. இ)  வென்றவர்

40. இ) உள்ளீர்த்தல்    

41. ஆ) சரத்து 2  

42. அ) மது அருந்துதல்

43. ஆ)  சொத்துரிமை

44. இ) கனிஷ்கர்

45. அ) ஒழுங்கற்ற காலநிலை மாற்றம்

46. ஆ) J.M. கீன்ஸ்

47. ஈ) இந்தியா

48. இ) ஏற்றுமதி இறக்குமதி வணிகம்

49. ஈ) காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு திரும்பி வந்த நாள்

50. ஆ) லக்காடா வாலா கமிட்டி

51. அ) பிரதமர்

52. ஆ) மனித வளர்ச்சி குறியிடு

53. இ) 2007 – 2012

54. இ) முப்படைத் தளபதி

55. ஆ) பாக்டீரியா

56. இ) தனநந்தர்

57. அ) சாணக்கியர்

58. அ) இந்தியத் தேர்தல் ஆணையம்

59. ஈ) மேற்கூறிய அனைத்தும் தவறானவை

60. இ) பட்ஜெட்

61. இ)  நியூட்டனின் மூன்றாம் விதி

62. ஆ) ஜூல்

63. ஈ) மீயொலி

64. அ) ரிப்பன் பிரபு

65. ஆ) யூச்சி

66. ஈ) சார்லஸ் டார்வின்

67. ஈ) 1952

68. ஈ) சங்க கால

69. இ) விட்டமின் K

70. ஆ) சிக்கில் செல் அனிமியா

71. அ) கனிஷ்கர்

72. அ) 1986

73. ஈ) திட கார்பன் டை ஆக்ஸைடு

74. ஈ) 15%

75. ஆ) ஹைட்ரஜன் வாயு உரம்

76. இ) 89

77. ஆ) விஜயாலயச் சோழன்

78. ஆ) பின்மூளை

79. ஈ) பிட்யூட்டரி

80. அ) ஜெயதேவர்

81. அ) 108

82. அ) குஜராத்

83. ஆ) கன்யா Sri

84. அ) தரெய்ன் போர்

85. அ) ஹைதராபாத்

86. ஈ) கிர்

87. ஆ) இந்திரா காந்தி

88. இ) ஜனாதிபதி

89. ஈ)  மும்பை

90. இ) இராஜஸ்தான்

91. அ) ரசியா

92. ஆ) கரிசல் மண்

93. ஈ) 1976

94. ஆ) உருளை

95. ஆ) வேலூர்

96. ஆ)  இந்தியா

97. ஈ)  கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி

98. ஆ) ஒளிவிலகல்

99. அ) வங்கிகள்  

100. அ) எய்சன்ஹோவர்