Election bannerElection banner
Published:Updated:

"ஜி.பி.எஸ் இணைப்புடன் சைக்கிள் திட்டம்..! அழகப்பா பல்கலைக்கழகம் அறிமுகம்

"ஜி.பி.எஸ் இணைப்புடன் சைக்கிள் திட்டம்..! அழகப்பா பல்கலைக்கழகம் அறிமுகம்
"ஜி.பி.எஸ் இணைப்புடன் சைக்கிள் திட்டம்..! அழகப்பா பல்கலைக்கழகம் அறிமுகம்

"ஜி.பி.எஸ் இணைப்புடன் சைக்கிள் திட்டம்..! அழகப்பா பல்கலைக்கழகம் அறிமுகம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், பைஷெர் கம்பெனி, குர்கானுடன் இணைந்து பல்கலைக்கழக வளாகத்தில் ஜி.பி.எஸ் இணைப்புடன் கூடிய சைக்கிள் ஓட்டும் திட்டத்தை மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் உபயோகத்திற்காக அறிமுகப்படுத்தியிருக்கிறது..இதனை துணைவேந்தர் பேராசிரியர் சொ.சுப்பையா சைக்கிள் ஓட்டத்தை தொடங்கிவைத்தார்.

இதன் நோக்கம் பல்கலைக்கழக வளாகத்தில் ஸ்மார்ட் சைக்கிள் ஓட்டும் பழக்கத்தை உருவாக்குவதேயாகும். இதனால் தனி மனிதனின் உடல்நலம் மற்றும் சுற்றுப்புறச்சூழல் மேம்படுத்துவதோடு, பசுமை வளாகத்தையும் உருவாக்கத் இத்திட்டம் உதவும். மொபிசி ஒரு பயன்பாட்டு அடிப்படையிலான 'டாக்லெஸ்' சைக்கிள் பகிர்வு தொழில்நுட்ப தளம் ஆகும். இதனை பயன்படுத்தும் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் QR குறியீடு ஸ்கேனிங் செய்வதன் மூலம் சிறிய தூரத்தை குறைந்த செலவில் சைக்கிள்களில் பயணிக்கலாம். மொபிசி ஆப்பை மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கள் அலைபேசியில் பதிவிறக்குவதன் மூலம், இங்குள்ள எந்த சைக்கிளையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

QR குறியீட்டை ஸ்கேன் செய்து, ஒருமணிநேரத்திற்கு 10 ரூபாய் அல்லது மாதாந்திர சந்தாவாக ரூ.99 (120 மணிகள்)என்னும் சந்தா விகிதங்களில் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். கணினி பயன்பாடு மற்றும் IOT சார்ந்த ஸ்மார்ட் ஜிபிஎஸ்  மூலம் இந்த சைக்கிள்கள் இயங்க உள்ளன. இது வளாகத்தில் உள்ள அனைத்து மொபிசி சைக்கிள்களையும் எந்த இடத்தில் இருக்கின்றது என்பதை காண்பிக்கும். பூட்டிலுள்ள QR குறியீட்டை ஸ்கேனிங் செய்வதன் மூலம் சைக்கிள் பூட்டை  திறக்கமுடியும். மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் பயன்பாட்டினை QR ஸ்கேனிங் மூலம் ஒரு சைக்கிளை மட்டுமே எடுக்கமுடியும். இந்த புதிய பயன்பாட்டின் வழியாக மாணவர்கள் தங்கள் துறைகளிலிருந்து நூலகத்திற்கும், நூலகத்திலிருந்து கேன்டினுக்கும், கேன்டினிலிருந்து விடுதிகளுக்கும்  செல்லலாம். இந்த சைக்கிள் வசதியை மாணவர்களும், அங்குள்ள ஊழியர்களும் வரவேற்றிருக்கிறார்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு