Published:Updated:
466 மாணவர்கள் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு எழுதவில்லை..! ஆசிரியர்கள் அதிர்ச்சி

466 மாணவர்கள் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு எழுதவில்லை..! ஆசிரியர்கள் அதிர்ச்சி
பன்னிரெண்டாம் வகுப்பு தமிழ் முதல் தாள் தேர்வை திருவள்ளூரில் மட்டும் 466 மாணவர்கள் எழுத வராமல் இருந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் மார்ச் 1-ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுக்காக திருவள்ளூர் மாவட்டத்தில் 113 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. திருவள்ளூரில் மட்டும் மொத்தம் 43,659 மாணவர்கள் தேர்வு எழுதினர். தமிழ் முதல் தாள் தேர்வுக்கு 466 மாணவர்கள் எழுத வரவில்லை. இத்தனை மாணவர்கள் தேர்வு எழுத வராமல் போனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். தமிழகக் கல்வி வரலாற்றிலேயே இது தான் இவ்வவு மாணவர்கள் தேர்வு எழுத வராமல் போனது முதல் முறையாகும் என்றார்கள் கல்வி துறை அதிகாரிகள்.